Latest Blogs
குரவம் கமழ் நறுமென் - பின்னணிதனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக கோடிகா, கஞ்சனூர், மாங்குடி, திருமங்கலக்குடி ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் பின்னர் வியலூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருந்துதேவன்குடி தலம் சென்றார் என்பதையும் நாம் கீழ்க்கண்ட பெரிய புராணப் பாடலிலிருந்து தெரிந்து கொள்கின்றோம். இந்த தலத்து பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், கண்ணார் தரும் உருவாகிய கடவுள் என்று கூறியதை ...
மத்தா வரை நிறுவிக் - பின்னணி:தனது நான்காவது தல யாத்திரையை தில்லைச் சிதம்பரத்தில் தொடங்கிய திருஞானசம்பந்தர், அருகில் உள்ள வேட்களம், கழிப்பாலை, நெல்வாயில் ஆகிய தலங்களும் சென்று பதிகங்கள் பாடிய பின்னர் மீண்டும் தில்லை வந்து ஆடினாய் நறு நெய்யுடன் என்று தொடங்கும் பதிகத்தை (3.01) பாடுகின்றார். மேலும் அப்போது தில்லை வாழ் அந்தணர்கள் அனைவரும், சிவகணங்களாக தனக்கு காட்சி அளிப்பதை அருகிலிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு காட்டுகின்றார். பின்னர் தில்லை ...
புண்ணியர் பூதியர்- பின்னணிதனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி, வெண்ணியூர் சக்கரப்பள்ளி, புள்ளமங்கை, நல்லூர், திருக்கருகாவூர் அவளிவணல்லூர் பரிதிநியமம் பூவனூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் ஆவூர் பசுபதீச்சரம் சென்றதாக சேக்கிழார் ...
செய்யருகே புனல் பாய - பின்னணி:திருக்காட்டுப்பள்ளி என்ற பெயரில் இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. திருவெண்காடு தலத்தின் அருகே உள்ள தலம், கீழை திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டு காவிரி வடகரைத் தலங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டு உள்ளது. திருத்துறைப்பூண்டியின் அருகே உள்ள தலம் மேலை திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டு காவிரி தென்கரைத் தலங்களின் வரிசையில் உள்ளது. இந்த இரண்டு தலங்களுமே திருஞானசம்பந்தர் அருளிய பாடல்கள் கொண்டவை. இங்கே குறிப்பிடப்படும் ...
பூவார் கொன்றை - முடிவுரைதோடுடைய, நறவநிறை வண்டு, என்று தொடங்கும் இரண்டு பதிகங்கள் மற்றும் இந்த பதிகத்தில் காணப்படும் முதல் பத்து பாடல்களில் பெருமானின் பெருமை உணர்த்தப் படுகின்றது, தேவர்கள் காவாய் என்று இறைவனை வேண்டிப் புகழ அவர் திரிபுரத்து அரக்கர்களை அழித்து அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று பதிகத்தின் முதல் பாடலிலும், எமது தந்தையே என்று தன்னிடம் சரணடைந்த வானோர்களை காக்கும் பொருட்டு ஆலகால விடத்தை உண்ட பெருமான் ...
பூவார் கொன்றை - பாடல் 11 காரார் வயல் சூழ் காழிக்கோன் தனைச் சீரார் ஞான சம்பந்தன் சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏரார் வானத்து இனிதா இருப்பரேவிளக்கம்:கார்=நீர் காரார்=நீர்வளம் மிகுந்த; ஏரார்=அழகு பொருந்திய; திருஞான சம்பந்தரின் பதிகங்களை பாடும் அடியார்களை உலகத்தவர் புகழ்வார் என்று இங்கே கூறுகின்றார்.பொழிப்புரை:நீர்வளம் நிறைந்த வயல்களால் ...
பூவார் கொன்றை - பாடல் 10 பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர் கரக்கும் உரையை விட்டார் காழியார் இருக்கின் மலிந்த இறைவர் அவர் போலாம் அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரேவிளக்கம்:பெருக்க=மிகவும் அதிகமாக; பிதற்றும்=சாரமற்ற சொற்களைப் பேசும்; கரக்கும்=உண்மையை மறைத்து பேசும்; அருப்பின் முலையாள்=அரும்பு போன்று மென்மை வாய்ந்த மார்பகங்கள்;’ இருக்கின் மலிந்த=இருக்கு முதலான ...
பூவார் கொன்றை - பாடல் 9 ஆற்றல் உடைய அரியும் பிரமனும் தோற்றம் காணா வென்றிக் காழியார் ஏற்றம் ஏறு அங்கு ஏறும் அவர் போலாம் கூற்றம் மறுகக் குமைத்த குழகரேவிளக்கம்:இந்த பாடலில் திருமாலையும் பிரமனையும் ஆற்றல் உடையவர்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருமாலின் வலிமை அனைவரும் அறிந்ததே. நெடிய உருவம் ...
பூவார் கொன்றை - பாடல் 8 எடுத்த அரக்கன் நெரிய விரல் ஊன்றிக் கடுத்து முரிய அடர்த்தார் காழியார் எடுத்த பாடற்கு இரங்கும் அவர் போலாம் பொடிக்கொள் நீறு பூசும் புனிதரேவிளக்கம்:கடுத்து = கோபம் கொண்டு: பாடல்=சாமகானம்; பொடி=திருநீறுபொழிப்புரை:தனது வழியில் குறுக்கிட்டது என்று தவறாக கருதி கயிலை மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி ...
பூவார் கொன்றை - பாடல் 7 கொல்லை விடை முன் பூதம் குனித்தாடும் கல்லவடத்தை உகப்பார் காழியார் அல்ல இடத்து நடந்தார் அவர் போலாம் பல்ல விடத்தும் பயிலும் பரமரேவிளக்கம்:கல்லவடம்=பறை போன்ற ஒரு வகை தோலிசைக் கருவி: வடாரண்யம் என்பதற்கு ஆலங்காடு என்று பொருள். எனவே கல்லவடம் என்ற சொல் கல்லால மரத்தினை ...