Latest Blogs



பொடியுடை மார்பினர்

பொடியுடை மார்பினர் - பின்னணி:நெல்வாயில் அரத்துறை இறைவனின் அருளால் முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊதுகொம்பு பெற்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் நெல்வெண்ணெய், பழுவூர், விசயமங்கை, புறம்பயம், வைகா, சேய்ஞலூர், பனந்தாள், பந்தணைநல்லூர், ஓமாம்புலியூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் வாழ்கொளிபுத்தூர் வந்து அடைகின்றார். இந்த தலம் வந்தடைந்த சம்பந்தர், கருங்குவளை மலர் போன்று கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடைய இறைவரின் திருவடிகளை வணங்கி திருப்பதிகம் பாடினார் ...

அந்தமும் ஆதியும்

அந்தமும் ஆதியும் - பின்னணி:தனது நான்காவது தல யாத்திரையை தில்லைச் சிதம்பரத்தில் தொடங்கிய திருஞானசம்பந்தர், கற்றாங்கு எரியோம்பி என்று தொடங்கும் பதிகத்தை கூத்தபிரானின் சன்னதியின் முன்னே நின்று பாடிய பின்னர், வெட்டவெளியின் தத்துவத்தை புரிந்து கொண்டவராக இன்பத்தில் திளைத்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். வெட்ட வெளியில் எங்கும் பரவி நின்று, ஐந்து விதமான செயல்களையும் புரிந்து நடனமாடும் இறைவனின் தன்மையை உணர்ந்தவராக அந்த மகிழ்ச்சியில் ஞானசம்பந்தர் திளைத்தார் என்று விளக்கம் ...

கணை நீடு எரிமால்

கணை நீடு எரிமால் - பின்னணி:தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற சம்பந்தர் அதன் பின்னர் அருகிலுள்ள பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. அதன் மருங்கு என்று மழபாடி தலம் குறிக்கப் படுகின்றது. இறைவனின் அருளினால் திருக்கானூர் பணிந்து ஏத்தி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவன் உறையும் திருத்தலங்கள் சென்று ...

ஊருலாவு பலி கொண்டு

ஊருலாவு பலி கொண்டு - பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக வலஞ்சுழி சென்ற திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு பழையாறை, சத்திமுற்றம், பட்டீச்சரம், இரும்பூளை முதலான தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் அரதைப் பெரும்பாழி தலம் செல்கின்றார். அதன் பின்னர் திருச்சேறை, திருநாலூர், குடவாயில், நறையூர் சித்தீச்ச்சரம், தென்திருப்புத்தூர் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய மூன்று பதிகங்களும் சுந்தரர் ...

செப்ப நெஞ்சே நெறிகொள்

செப்ப நெஞ்சே நெறிகொள் - பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் சோற்றுத்துறை சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அப்பர் என்று சிவபெருமானை குறிப்பிட்டு, அப்பர் சோற்றுத்துறை ...

முந்தி நின்ற வினைகள்

முந்தி நின்ற வினைகள் - பின்னணிவைத்தீச்வரன் கோயில் (தேவாரப் பதிகங்களில் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலம்) சென்று வைத்தியநாதரை, கள்ளார்ந்த என்று தொடங்கும் பதிகம் பாடி போற்றி வணங்கிய பின்னர் திருஞானசம்பந்தர், திருநின்றியூர் திருநீடூர் மற்றும் திருப்புன்கூர் தலங்கள் சென்று பெருமானை வணங்கி பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவிக்கின்றார். நீண்ட புகழ் வாய்ந்த திருநின்றியூர் சென்று ஆங்கே வீற்றிருக்கும் நிமலனாரின் திருவடிகளைத் தொழுது பெருமான் மீது காதல் ...

பிறையணி படர்சடை

பிறையணி படர்சடை - பின்னணி:அப்பர் பிரான் திருஞானசம்பந்தரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு பல சோழ நாட்டுத் தலங்களை தரிசிப்பதற்கு சென்ற பின்னர், ஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து பல வித்தியாசமான பதிகங்கள் பாடினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். மொழிமாற்று, மாலைமாற்று, திருவெழுகூற்றிருக்கை. ஏகபாதம், ஈரடி மேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிருக்குக்குறள், ஈரடி, வழிமொழி விராகம் ஆகிய வகைகளில் பல பதிகங்கள் இயற்றினார். இந்த ...

சூலம்படை சுண்ணப்பொடி

சூலம்படை சுண்ணப்பொடி - பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையினை கண்ணார்கோயில் தலத்தில் தொடங்கிய சம்பந்தர் அங்கிருந்து புள்ளிருக்குவேளூர் (தற்போது வைத்தீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படும் தலம்) சென்ற பின்னர் திருநின்றியூர், நீடூர், திருப்புன்கூர் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருநீடூர் தலத்தின் மீது காழிப் பிள்ளையார் அருளிய பதிகம் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. மற்ற இரண்டு தலங்களின் மீது அருளிய ஒவ்வொரு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.நீடு திருநின்றியூரில் நிமலனார் நீள்கழல் ஏத்திக்கூடிய ...

பாலுந்துறு திரள்

பாலுந்துறு திரள் - பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி வெண்ணியூர் சக்கரப்பள்ளி ஆகிய தலங்கள் சென்ற பின்னர் புள்ளமங்கை சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். புள்ளமங்கை தலம் சென்றதை ...

மையாடிய கண்டன்

மையாடிய கண்டன் - பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு பெரும்புலியூர் தலம் சென்று மண்ணுமோர் பாகம் உடையார் என்று தொடங்கும் பதிகம் பாடி இறைவன் தனது அடியார்களுக்கு செய்யும் உதவிகளை அந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு இறைவனைப் புகழ்ந்து பாடினார். அப்போது அவருக்கு திருவையாறு தலத்திற்கு மேற்கே உள்ள தலங்கள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் எழவே, மேற்கு திசை நோக்கி ...