Latest Blogs



வேதம் ஓதி வெண்ணூல்

பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவியலூர், திருந்துதேவன்குடி, இன்னம்பர், வடகுரங்காடுதுறை முதலிய பல தலங்கள் சென்று இறைவனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அடுத்து திருப்பழனம் தலம் சென்றதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பங்கயம்=தாமரை பூக்கள்; அழல் நக்க பங்கயப் பூக்கள்=கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பின் நிறத்தையும் பழித்து தோற்கடிக்கும் வண்ணம் சிவந்த செந்தாமரை பூக்கள்; விழை=விழையும், விரும்பும்; வாவி=குளம்;பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில்உடை புக்கு ...

அடையார்தம் புரங்கள்

முன்னுரை:தனது இரண்டாவது தலையாத்திரையை நனிபள்ளி தலத்தில் தொடங்கிய ஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு, தலைச்சங்கை மற்றும் வலம்புரம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் பூம்புகார் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. பன்னகம்=பாம்பு; பூண்=ஆபரணம். பல்லவனீச்சரம், சாய்க்காடு ஆகிய இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளவை. முதலில் பல்லவனீச்சரம் சென்றதாக கூறுவதால் நாம் முதலில் பல்லவனீச்சரத்து பதிகங்களை சிந்தித்த பின்னர் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகங்களை சிந்திப்போம். இந்த தலத்தின் ...

வண் தரங்கப் புனல்

முன்னுரை:நனிப்பள்ளி தலத்தில் தொடங்கிய தனது இரண்டாவது தலையாத்திரையை திருமுல்லைவாயில் தலத்தில் முடித்துக் கொண்ட திருஞானசம்பந்தர், சீர்காழி திரும்பிய பின்னர், சீர்காழி தலத்து இறைவனைப் போற்றி தூய ஆணியாம் பதிகம் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இந்த பதிகம் யாது என்பது குறித்து இருவேறு விளக்கங்கள் சொல்லப் படுகின்றன. அன்ன மென்னடை அரிவை என்று தொடங்கும் பதிகத்தின் நான்காவது பாடலில் (2.102.4) ஆணிப்பொன் என்று ஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். ...

ஒடுங்கும் பிணிபிறவி

ஒடுங்கும் பிணிபிறவி - பின்னணிமுதுகுன்றம் தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்து பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அடுத்து பெண்ணாகடம் தலம் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக, முதுகுன்றத்து பெருமானை வணங்கி விடை பெற்றுக் கொண்ட பின்னர் பெண்ணாகடம் சென்று அடைந்தார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சென்னை திருச்சி இரயில் பாதையில், முதுகுன்றம் தலத்திற்கு (விருத்தாச்சலத்திற்கு) அருகில் உள்ள இரயில் நிலையம். பெண்ணாகடம். இந்த தலம் விருத்தாசலம் திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ...

காரார் கொன்றை

காரார் கொன்றை - பின்னணிதனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவானைக்கா சென்ற திருஞானசம்பந்தர் ஆங்கே சில நாட்கள் தங்கியிருந்து மூன்று பதிகங்கள் பாடிய பின்னர், அருகில் உள்ள தவத்துறை மற்றும் பல தலங்கள் சென்றதாக பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இந்நாளில் இலால்குடி என்று அழைக்கப்படும் தலமே பண்டைய நாளில் தவத்துறை என்று அழைக்கப்பட்டது. ஆனால் இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. பெரிய புராணப் ...

தேவராயும் அசுரராயும்

தேவராயும் அசுரராயும் - பின்னணிதனது நான்காவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக எருக்கத்தம்புலியூர் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து முதுகுன்றம் (இந்நாளில் விருத்தாசலம் என்று அழைக்கப்படும் தலம்) செல்ல முடிவு செய்தார். பழம்பெரும் பெருமை வாய்ந்த இந்த தலம் செல்வதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சம்பந்தர், தான் அந்த தலத்திற்கு செல்லும் வழியில், பரமனின் புகழினைப் பாடியவாறு மத்தா வரை என்று தொடங்கும் பதிகத்தினைப்(1.12) பாடிக் கொண்டே சென்றார். அந்த தலம் சென்றடைந்த ...

மறையுடையாய்

மறையுடையாய் - பின்னணிதனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி நகரம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த நகரத்திலிருக்கும் மூன்று தலங்களும், மூக்கீச்சரம் சிராப்பள்ளி ஆனைக்கா ஆகிய மூன்று தலங்களும் சென்று பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்து வணங்கிய பின்னர் பாற்றுறை என்ற அழைக்கப்பட்ட தலம், மற்றும் நெடுங்களம் என்று அழைக்கப்பட்ட தலத்திற்கும் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. அந்த பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த ...

நூலடைந்த கொள்கையாலே

நூலடைந்த கொள்கையாலே- பின்னணிபுறம்பயம் சென்று பொருளாழம் மிகுந்த பதிகம், மறம்பய மலைந்தவர் என்று தொடங்கும் பதிகம் — 2.30) பாடி இறைவனைத் தொழுத திருஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு சேய்ஞலூர் தலம் செல்கின்றார். அவ்வாறு செல்லும் வழியில் திருவியலூர் மற்றும் திருந்துதேவன்குடி ஆகிய தலங்கள் சென்றதாகவும் கூறுவார்கள். சேய்ஞலூர் தலத்து அந்தணர்கள் ஞானசம்பந்தர் வருவதை முன்னமே அறிந்தவர்களாய், மறையொலி முழங்க மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அவரை ஊரெல்லையில் எதிர்கொண்டு வரவேற்றனர். திருஞானசம்பந்தரும், ...

துணிவளர் திங்கள்

துணிவளர் திங்கள் - பின்னணிதனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற ஞானசம்பந்தர் அதன் பின்னர் அருகிலுள்ள பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை, மாந்துறை ஆகிய பல காவிரி வடகரைத் தலங்கள் சென்று ஆங்கு உறையும் இறைவனைப் புகழ்ந்து பதிகங்கள் பாடிய ஞானசம்பந்தர், மற்றொரு காவிரி வடகரைத் தலமாகிய பாச்சிலாச்சிராமம் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது அந்த நகரத்தினை கொல்லி ...

வடந்திகழ் மென்முலையாளை

வடந்திகழ் மென்முலையாளை - பின்னணிதனது ஐந்தாவது திருப்பயணத்தின் ஒரு பகுதியாக கொங்கு நாட்டுத் தலங்கள் சென்ற பின்னர் சோழ நாட்டுக்கு திருஞானசம்பந்தர் திரும்புகின்றார். வாட்போக்கி என்ற தலத்துடன் தனது சோழ நாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கும் ஞானசம்பந்தர் அதன் பிறகு பராய்த்துறை தலம் சென்று, நீறு சேர்வதோர் மேனியர் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி பரமனை வணங்கிய பின்னர், திருவாலந்துறை மற்றும் திருச்செந்துறை ஆகிய தலங்கள் சென்றதாகவும், அதன் பின்னர் ...