1. ஓம் நமசிவாய அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் எங்கே உள்ளது ?
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைந்துள்ளது.
2. உங்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து உங்கள் தலைவரை சந்திக்கலாமா ?
நிச்சயமாக நேரில் வந்து சந்திக்கலாம். அனைத்து நேரங்களிலும் தலைவர்கள் அலுவலகத்தில் இருக்க முடியாத காரணத்தால் சந்திப்பதற்கு முன் முன்அனுமதி பெறுவது கட்டாயம்.
3. உங்கள் சேவைகள் தமிழ்நாட்டில் மட்டும்தான் கிடைக்குமா ?
தற்போது நமது சேவைகள் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்தியா முழுதும் நமது சேவைகள் கிடைக்க முயற்சிகள் எடுத்து கொண்டு இருக்கிறோம்.
4. இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை வரி விலக்கு சலுகை (Income tax exemption) 80G, 12AA சான்றிதழ்கள் உள்ளதா ?
நமது அறக்கட்டளையில் வருமான விலக்கு சான்றிதழான 80G, 12AA போன்றவை வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு தற்போது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வருமான வரி சட்டத்தில் அறக்கட்டளை ஆவணங்களில் பல திருத்தங்கள் மற்றும் சட்டங்கள் கொண்டு வருவதால் தற்போது பல நாட்களாக இது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
2024 - 2025 ஆம் நிதி ஆண்டின் இறுதியில் நீங்கள் செலுத்திய அனைத்து நன்கொடைகளுக்கும் வருமான வரி விலக்கு பெற்றுக்கொள்ளலாம்.
5. இந்த அறக்கட்டளையின் முக்கிய சேவைகள் என்னென்ன ? நான் அதை நேரில் பார்வையிட முடியுமா ?
நிச்சயமாக நமது அறக்கட்டளையின் சேவைகளை நேரில் பார்வையிடலாம். நமது அறக்கட்டளை மூலம் பல சேவைகள் செய்யப்பட்டாலும் அதில் முக்கியமாக குறிப்பிடக்கூடிய சில சேவைகள்,
1. அன்னதானம்.
2. மருத்துவ உதவிகள்.
3. இலவச ரத்த தான சேவைகள்.
4. பழங்கால ஆலயங்கள் மறுசீரமைப்பு.
5. ஊனமுற்றோருக்கான சிறப்பு நலத்திட்ட உதவி.
6. உயர் கல்வி உதவித்தொகை.
7. ஆலயங்களில் பூஜை பொருட்கள் மற்றும் எண்ணெய் வழங்குதல்.
8. ஏழை மக்களுக்கு சிறப்பு உதவித்தொகை.
6. இந்த அறக்கட்டளையின் கீழ் எத்தனை ஆலயங்கள், ஆசிரமங்கள் மற்றும் காப்பகங்கள் செயல்படுகின்றது ?
நமது அறக்கட்டளையின் கீழ் நேரடியாக எந்த ஒரு ஆசிரமங்களும், ஆலயங்களும் மற்றும் காப்பகங்களும் செயல்படவில்லை. பிற சேவை அமைப்புகளுடன் நட்புறவில் ( Partnership ) மட்டுமே செயல்படுகிறது.
7. முக்கிய பண்டிகைகள் மற்றும் விழாக்களின் போது உங்களுடைய சேவைகள் என்னென்ன ?
முக்கிய பண்டிகைகளின் போது நமது சேவைகள் அதிகப்படியான மக்களுக்கு கிடைக்கப் படுகின்றது. இந்த பண்டிகை காலங்களில் ஆலயங்களுக்கு தேவையான பூஜை பொருட்கள் வழங்குவதும் மற்றும் ஏழு மக்களுக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகளும் செய்யப்படுகிறது.
குறிப்பாக ஆடைகள் வழங்குதல், கல்வி உபகரணங்கள் வழங்குதல், உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்குதல், ஊனமுற்றோருக்கான சிறப்பு நலத்திட்ட உதவிகள், ஏழை குடும்பத்தினருக்கு திருமண உதவித்தொகை வழங்குதல் போன்றவை.
8. இந்த அறக்கட்டளை எப்போது துவங்கப்பட்டது ? துவங்கப்பட்டதற்கான முக்கிய காரணம் என்னென்ன ?
நமது ஓம் நமசிவாய அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது அழிந்து வரும் தமிழ் கலாச்சாரங்களை ஊக்கப்படுத்தவும், அர்த்தமுள்ள ஆன்மீகத்தை பரப்பவும் மற்றும் பொது சேவைகள் செய்வதற்காகவும் துவங்கப்பட்டது.
9. இந்த அறக்கட்டளையில் நாங்கள் எவ்வாறு உறுப்பினராக இணைவது ?
10. இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருந்தால் என்னுடைய பங்களிப்பு என்னவாக இருக்கும் ?
உங்கள் ஊர்களில் நமது அறக்கட்டளையின் மூலம் செய்யப்படுகின்ற சேவைகளுக்கு முழு பங்களிப்பாளராக இருக்க வேண்டும். மேலும் நமது அறக்கட்டளையின் சேவைகளை விரிவுபடுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
11. இந்த அறக்கட்டளை சைவ சமயத்தை மட்டும் தான் ஆதரிக்கின்றதா ? பிற சமயத்தவர்களுக்கு சேவைகள் கிடைக்காத ?
நமது அறக்கட்டளை ஓம் நமசிவாய என்ற சிவன் நாமத்துடன் துவங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை அனைத்து சமயத்தவதற்கும் பொதுவானது. குறிப்பிட்ட எந்த சமயத்தின் கீழும் இது இயங்கவில்லை. இது அனைத்து சமயத்தையும் போதிக்கிறது.
12. எங்கள் ஊரில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளுக்காக நாங்கள் உங்களை நாடலாம் ?
நிச்சயமாக நாடலாம். அவர்களின் முழு விவரங்களை நமது அறக்கட்டளைக்கு வழங்கி அதன் மூலம் சேவைகளை பெறலாம்.
13. இந்த அறக்கட்டளையின் உறுப்பினராக நாங்கள் இணையலாமா ? அதன் வழிமுறைகள் என்னென்ன ? இதில் இணைய ஏதேனும் பணம் செலுத்த வேண்டுமா ?
நிச்சயமாக நீங்கள் நமது ஓம் நமசிவாய அறக்கட்டளையின் உறுப்பினராக இணையலாம்.
www.omnamasivaya.co.in/membership என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து இணைந்து கொள்ளலாம். இதில் இலவசமாகவும் (Free Membership) இணைந்து கொள்ளலாம் அல்லது சந்தா உறுப்பினராகவும் (Paid Membership) இணைந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை பார்வையிடவும்.
14. இந்த அறக்கட்டளையின் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது ?
நமது அறக்கட்டளை மூலம் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகள் நமது WhatsApp குழுவின் மூலம் வெளியிடப்படும் அல்லது
www.omnamasivaya.co.in/event என்ற இணையதளத்தின் மூலமாகவும் பார்வையிடலாம்.
15. இந்த அறக்கட்டளையின் WhatsApp குழுவில் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை எவ்வாறு இணைப்பது ?
நமது அறக்கட்டளை மூலம் வெளியிடப்படும் அனைத்து பதிலும் குழுவின் இணையும் Link குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் மூலமும் இணைந்து கொள்ளலாம் அல்லது குரூப் அட்மினை தொடர்பு கொள்ளவும்.
16. நான் நேரில் வராமல் Gpay, Phonepe மற்றும் Net banking மூலம் பணம் செலுத்தினால் எனக்கு எவ்வாறு ரசீது கிடைக்கும் ?
நன்கொடை செலுத்திய அனைவருக்கும் உங்கள் கைப்பேசி எண்ணிற்கு WhatsApp மூலம் உடனடியாக eReceipt அனுப்பப்படும்.
17. ருத்ராட்சம், கருங்காலி மாலை, ஸ்படிக மாலை, ஆன்மீக புத்தகங்கள் போன்றவை உங்களிடம் இருந்து வாங்க முடியுமா ?
18. ஜோதிடம், ஜாதகம் மற்றும் ஆலய அர்ச்சகர் போன்ற சேவைகள் உங்களிடம் உள்ளதா ?
ஆன்மீகம் சார்ந்த அனைத்து சேவைகளும் உள்ளது. அறக்கட்டளையை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். இதில் உங்களுடைய தேவையை பொறுத்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். இலவச சேவை அல்ல.
19. எங்கள் ஊர் திருவிழாவின் போது ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழ்த்த உங்கள் அறக்கட்டளையை நாடலாமா ?
நிச்சயமாக நமது அறக்கட்டளையை நாடலாம். ஒரு மாதத்திற்கு முன்பே நமது அறக்கட்டளை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
20. இந்த அறக்கட்டளையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைவர்களை எவ்வாறு தேர்வு செய்கின்றீர்கள் ? அவர்களின் தகுதி மற்றும் பங்களிப்பு என்னவாக இருக்கும் ?
ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களின் தகுதி மற்றும் திறமையை கருத்தில் கொண்டு தலைவர்களை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதில் தலைவர்கள் மாவட்டத்தில் முக்கிய பிரமூகர்களின் நட்புறவில் இருக்க வேண்டும். மேலும் அறக்கட்டளையின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதில் முக்கிய கடமையாற்ற வேண்டும்.
21. நான் தனியாக செய்யும் சேவைகளை ஓம் நமசிவாய அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுத்த முடியுமா ?
நிச்சயமாக. நீங்கள் தனி நபராக அல்லது தனி அணியாக செய்யும் சேவைகளை முழு அரசு அனுமதியுடன் அதிக மக்களுக்கு செய்ய சிறப்பு உதவிகள் மற்றும் அதிகாரத்தை ஓம் நமசிவாய அறக்கட்டளை வழங்குகிறது.
www.omnamasivaya.co.in/partnership என்ற இணையதளத்தில் பதிவு செய்து நமது அறக்கட்டளையின் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்ளலாம்.