Latest Blogs



பூவார் கொன்றை - பாடல் 6

பூவார் கொன்றை - பாடல் 6 கொங்கு செருந்தி கொன்றை மலர் கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார் அங்கண் அரவம் ஆட்டும் அவர் போலாம் செங்கண் அரக்கர் புரத்தை எரித்தாரேவிளக்கம்:அங்கண்=அழகிய கண்கள்பொழிப்புரை:கோங்கு செருந்தி கொன்றை ஆகிய மலர்களுடன் கங்கை நதியையும் தனது சடையில் சூடிக் கொண்டுள்ள பெருமான் காழி நகரத்தில் உறைகின்றார். ...

பூவார் கொன்றை - பாடல் 5

பூவார் கொன்றை - பாடல் 5 மாடே ஓதம் எறிய வயல் செந்நெல் காடேறிச் சங்கு ஈனும் காழியார் வாடா மலராள் பங்கர் அவர் போலாம் ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரேவிளக்கம்:மாடே=அருகினில்; ஓதம்=கடல் அலைகள்; ஏடு=குற்றம்; இந்த பாடலில் அன்னை பார்வதி தேவியை, வாடா மலராள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கற்புக்கரசியாக ...

பூவார் கொன்றை - பாடல் 4

பூவார் கொன்றை - பாடல் 4 மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக்கு அளித்த காழியார் நாணார் வாளி தொட்டார் அவர் போலாம் பேணார் புரங்கள் அட்ட பெருமானேவிளக்கம்:மாண்பு என்ற சொல்லினை ஆதாரமாகக் கொண்ட எதிர்மறைச் சொல் மாணா; மாட்சிமை இல்லாத, பெருமையற்ற என்று பொருள் கொள்ளவேண்டும்; உயிர்களின் வினைகளுக்கு தக்கவாறு, ...

பூவார் கொன்றை - பாடல் 3

பூவார் கொன்றை - பாடல் 3 தேனை வென்ற மொழியாள் ஒரு பாகம் கான மான் கைக் கொண்ட காழியார் வானம் ஓங்கு கோயில் அவர் போலாம் ஆன இன்பம் ஆடும் அடிகளேவிளக்கம்:ஆன இன்பம்=முற்றிய இன்பம்; தேனினை விடவும் இனிமையான மொழியை உடையவள் தேவி என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல ...

பூவார் கொன்றை - பாடல் 2

பூவார் கொன்றை - பாடல் 2 எந்தை என்று அங்கு இமையோர் புகுந்து ஈண்டிக் கந்த மாலை கொடுசேர் காழியார் வெந்த நீற்றர் விமலர் அவர் போலாம் அந்தி நட்டம் ஆடும் அடிகளேவிளக்கம்:இமையோர்=தேவர்கள்; கந்தம்=நறுமணம். அந்தி வேளையில் ஆடப்படும் நடனத்திற்கு சந்தியா தாண்டவம் என்று பெயர். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தினை ...

பூவார் கொன்றை - பாடல் 1

பூவார் கொன்றை - பாடல் 1 பூவார் கொன்றை புரிபுன்சடை ஈசா காவாய் என நின்று ஏத்தும் காழியார் மேவார் புரம் மூன்றும் அட்டார் அவர் போலாம் பாவார் இன் சொல் பயிலும் பரமரேவிளக்கம்:மேவார்=பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள்; பயிலும் என்ற சொல்லுக்கு தங்கி இருக்கும், பொருந்தி இருக்கும், அமைந்து இருக்கும் என்றும் பொருள் ...

பூவார் கொன்றை - பின்னணி

பூவார் கொன்றை - பின்னணிஇறைவன் அளித்த திருத்தாளத்துடன் சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தர், நேராக திருக்கோயில் சென்று வலம் வந்த பின்னர், தோணிபுரத்து பெருமானின் சன்னதியில் பாடிய திருப்பதிகம் இந்த பதிகம் ஆகும். திருப்பெருகு என்று சீர்காழி தலத்தின் செல்வ வளம் குறிப்பிடப் படுகின்றது. கட்டளை என்பது ஒரே பண்ணில் அமைந்த பாடல்களில் உள்ள யாப்பமைதி, தாளபேதம், சீர்களின் நீட்டல் குறுக்கல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிந்து அதன் வகையில் ...

மடையில் வாளைபாய - முடிவுரை:

மடையில் வாளைபாய - முடிவுரைதிருஞானசம்பந்தர்க்கு இறைவன் தாளம் அளித்த செய்தியை நம்பியாண்டார் நம்பி அவர்கள் தனது ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி மற்றும் ஆளுடைப் பிள்ளையார் மும்மணிக் கோவை பதிகங்களில் (பதினோராம் திருமுறை), எழுத்தஞ்சும் இட்ட செம்பொற் தாளம் ஈந்த என்றும் செம்பொன் தாளம் அவையே என்றும் குறிப்பிடுகின்றார். சம்பந்தருக்கு இறைவன் தாளம் ஈந்த நிகழ்ச்சியை, இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் சுந்தரர் குறிக்கிறார். சம்பந்தரை நாளும் ...

மடையில் வாளைபாய - பாடல் 11

மடையில் வாளைபாய - பாடல் 11 நலம் கொள் காழி ஞானசம்பந்தன் குலம் கொள் கோலக்கா உளானையே வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார் உலம் கொள் வினை போய் ஓங்கி வாழ்வரேவிளக்கம்:நலங்கொள்=இயற்கை வளம் பொருந்திய; குலங்கொள்=பண்பினால் உயர்ந்த குலத்தினை உடையவர்களாக விளங்கிய; வலம்கொள்பாடல்=திருவருளினால் வல்லமை பெற்று விளங்கும் பாடல்; உலம்=மலை; கோலக்கா ...

மடையில் வாளைபாய - பாடல் 10

மடையில் வாளைபாய - பாடல் 10 பெற்ற மாசு பிறக்கும் சமணரும் உற்ற துவர் தோய் உருவிலாரும் குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றி பரவப் பறையும் பாவமேவிளக்கம்:பெற்ற மாசு=நீராடுதளைத் தவிர்ப்பதால், சுற்றுப்புறத்திலிருந்து உடலுக்கு ஏறிய அழுக்குகள்; பிறக்கும்=தோன்றும்;பொழிப்புரை:நீராடுவதைத் தவிர்ப்பதால் தங்களது உடலினில் சேரும் அழுக்குகளுடன் தோன்றும் சமணர்களும், துவராடையினால் தங்களது உடல் ...