Latest Blogs



தோடுடைய செவியன் - பாடல் 4

தோடுடைய செவியன் - பாடல் 4 விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர் கள்வன் மண் மகிழ்ந்த அரவம் மலர்க் கொன்றை மலிந்த வரை மார்பில்பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:மகிழ்ந்த=மகிழ்ந்து உலாவிய; தேரிய=தேடிக்கொண்டு வந்து; மண் மகிழ்ந்த அரவம்= தரையில் ஊர்ந்து செல்லும் தன்மை பற்றியும் மண்புற்றினைத் ...

தோடுடைய செவியன் - பாடல் 3

தோடுடைய செவியன் - பாடல் 3நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடிஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓர் ஊர் இது என்னப்பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:நீர்=கங்கை நதி; ஏர்=அழகு; இன=நல்ல இனத்தைத் சார்ந்த; வெள்வளை=வெண்மை நிறம் உடைய வெண்முத்து வளையல்; நிமிர்=நிமிர்ந்த; புன்சடை=பொன்னின் நிறத்தில், அதாவது செம்பட்டை நிறத்தில் ...

தோடுடைய செவியன் - பாடல் 2

தோடுடைய செவியன் - பாடல் 2முற்றல் ஆமை இளநாகமோடு ஏன முளைக் கொம்பு அவை பூண்டுவற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தபெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:முற்றல்=முதிர்ந்த; ஆமை என்பது இங்கே ஆமை ஓட்டினை குறிக்கும். வெகு காலத்திற்கு முன்னர் தோன்றிய கூர்மாவதாரம் என்பதைக் குறிப்பிட முற்றல் ஆமை என்று குறிப்பிட்டார்.; ...

தோடுடைய செவியன் - பாடல் 1

தோடுடைய செவியன் - பாடல் 1தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்தபீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றேவிளக்கம்:பிறக்கும் உயிர்கள் முதலில் அன்னையை உணர்ந்து பின்னரே, அன்னையால் சுட்டிக் காட்டப்பெறும் தந்தையை உணருகின்றன என்பதால் அன்னையை உணர்த்தும் ...