Latest Blogs
பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக கொடிமாடச் செங்குன்றூர், திருநணா, பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக்கூடல், கருவூர் ஆனிலை ஆகிய கொங்கு நாட்டுத் தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், கருவூர் தலத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் சோழநாடு வந்தடைகின்றார். அப்போது முதன்முதலாக அவர் சென்ற தலம் வாட்போக்கி என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். ஆனால் இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் திருப்பராய்த்துறை சென்றதாக ...
பின்னணி:எருக்கத்தம்புலியூர் சென்று ஆங்குள்ள இறைவனை வணங்கி மகிழ்ந்து பதிகம் பாடி வழிபட்ட திருஞானசம்பந்தர் ஆங்கிருந்து புறப்பட்டு, முதுகுன்றம் (தற்போதைய பெயர் விருத்தாசலம்) நோக்கி புறப்படுகின்றார். அவ்வாறு செல்லும் வழியில் பல தலங்களும் சென்று இறைவனைப் பணிந்து பதிகங்கள் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். ஆனால் நமக்கு அந்த தலங்கள் யாவை என்று தெரியவில்லை. மேலும் அந்த தலங்களுக்கு உரிய பதிகங்களும் நமக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு முதுகுன்றம் செல்லும் ...
பின்னணி:சீர்காழி நகரத்திற்கு வடக்கிலும் மேற்கிலும் உள்ள பல தலங்களையும் கண்டு ஆங்கு வீற்றிருக்கும் இறைவனது புகழினைப் பதிகங்களாக பாடும் வண்ணம் தனது ஐந்தாவது தலயாத்திரை மேற்கொண்ட திருஞானசம்பந்தர், கண்ணார்கோயில் என்ற தலத்திற்கு முதலில் செல்கின்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, புள்ளிருக்குவேளூர், நின்றியூர், நீடூர், திருப்புன்கூர், பழமண்ணிபடிக்கரை, குறுக்கை வீரட்டம், அன்னியூர், பந்தணைநல்லூர், திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி, வேள்விக்குடி, கோடிகா, கஞ்சனூர், மாந்துறை, மங்கலக்குடி, வியலூர், திருந்து தேவன்குடி, இன்னம்பர், வடகுரங்காடுதுறை, திருப்பழனம் ...
முன்னுரை:நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் திருவெழுகூற்றிருக்கை என்று அழைக்கப்படும் இந்த பதிகம். மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஏகபாதம் (1.127) திருவிருக்குக்குறள் (1.90) ஆகியவற்றை சிந்தித்த ...
முன்னுரை:நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் ஏகபாதம் என்று அழைக்கப்படும் இந்த பதிகம். மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது ஏகபாத திருப்பதிகத்தை ...
பின்னணி:தன்னைக் காண்பதற்காக சீர்காழி நகரம் வந்த அப்பர் பிரானை, நகர எல்லையில் எதிர் கொண்டழைத்த திருஞானசம்பந்தர், அப்பர் பிரானை அழைத்துக் கொண்டு சீர்காழி திருக்கோயிலின் உள்ளே சென்றார். திருக்கோயில் சன்னதியில் ஞானசம்பந்தர் அப்பர் பிரானை நோக்கி, உங்களது தம்பிரானை நீர் பதிகம் பாடி மகிழ்வீர் என்று சொல்ல அப்பர் பிரானும் பதிகங்கள் பாடி பெருமானைத் தொழுது வணங்கினார். பின்னர் சம்பந்தர் அப்பர் பிரானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல, ஆங்கே ...
பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையில் தனது வாழ்க்கையில் முதன் முறையாக கொங்கு நாட்டுத் தலங்களுக்கு சென்ற திருஞானசம்பந்தர், முதலில் கொடிமாடச் செங்குன்றூர் தலத்திற்கு சென்று, வெந்த வெண்ணீறு என்று தொடங்கும் பதிகத்தினை (1.107) பாடி மாதொருபாகனைப் போற்றி வணங்கிய பின்னர், திருநணா (தற்போதைய பெயர் பவானி) தலம் சென்று பதிகம் பாடி இறைவனை வணங்குகின்றார். மாதொரு பாகனின் திருக்கோலம் அவரது மனதினை விட்டு நீங்காது இடம் பெற்றிருந்த தன்மையை, திருநணா தலத்தின் ...
பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் திருத்தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர், ஆங்கிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கி சென்று புள்ளிருக்குவேளூரை அடைந்தார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமே அந்நாளில் கடைமுடி என்று அழைக்கப்பட்டு தேவாரப் பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடைமுடி தலம் சென்றதாக ...
பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக ஈங்கோய்மலை சென்ற திருஞானசம்பந்தர், அந்த தலத்திற்கு அருகில் உள்ள பல்வேறு தலங்களும் சென்ற பின்னர் மேற்கு நோக்கிச் கொங்குநாடு சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. அவ்வாறு சென்ற போது அவர் முதலில் சென்ற தலம் கொடிமாடச் செங்குன்றூர் என்ற தலமாகும். இந்நாளில் திருச்செங்கோடு என்று அழைக்கப்படுகின்றது. ஞானசம்பந்தர் சென்ற மற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் திருநணா (பவானி), கரூர், பாண்டிக்கொடுமுடி என்பன. அந்நாளில் ...
பின்னணி:தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தருக்கு அவரது பெற்றோர்களால் உபநயனம் செய்து வைக்கப் பட்டது. பல நாட்கள் சீர்காழியில் தங்கிய சம்பந்தர் மீண்டும் பல தலங்களைக் காண ஆவல் கொண்டமையால், தனது விருப்பத்தைத் தனது தந்தையிடமும் நீலகண்ட யாழ்ப்பாணரிடமும் தெரிவித்தார். அந்நாள் வரை நடைபெற்ற நான்கு தலையாத்திரைகளிலும் பங்கேற்ற அவரது தந்தையார், தனக்கு வயதாகியதால் முன்போன்று நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் வேள்வி ...