Latest Blogs
பின்னணி:தனது ஐந்தாவது தலப்பயணத்தின் ஒரு பகுதியாக, பண்டைய நாளில் சோழர்களின் தலைநகராக விளங்கிய மூக்கீச்சரம் (உறையூர்) சென்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் அருகில் உள்ள சிராப்பள்ளி தலத்திற்கு சென்றதாக பெரியபுராணம் உணர்த்துகின்றது. இதனை உணர்த்தும் பெரிய புராணத்து பாடலை நாம் இங்கே காண்போம். கைம்மலை=யானை, மலை போன்ற பருத்த உடலும் தும்பிக்கையும் உடைய விலங்கு; திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியினால் தனது உடல் பூரிக்க, உள்ளம் குளிர, நாவினால் தமிழ்மாலை பாடி இறைவனுக்கு ...
முன்னுரை:தனது ஐந்தாவது தலயாத்திரையில் கண்ணார்கோயில், புள்ளிருக்குவேளூர், திருநின்றியூர், திருநீடூர், திருப்புன்கூர் ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், அதன் பின்னர் அருகிலுள்ள பழமண்ணிபடிக்கரை, திருக்குறுக்கை முதலான தலங்கள் சென்று பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த இரண்டு தலங்களின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகங்கள் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. குறுக்கைத் தலத்திலிருந்து புறப்பட்ட காழிப் பிள்ளையார் அன்னியூர் மற்றும் பந்தணைநல்லூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. தனது நான்காவது தலயாத்திரையில் ...
பின்னணி:எருக்கத்தம்புலியூர் இறைவனை வணங்கி படையார் தருபூதப் படை என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருமுதுகுன்றம் செல்ல விருப்பம் கொண்ட திருஞானசம்பந்தர், அவ்வாறு செல்கையில் பல தலங்கள் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். ஆனால் அந்த தலங்களின் விவரங்களும் ஆங்கே அருளப்பட்ட பதிகங்களின் விவரங்களும் நமக்கு கிடைக்கவில்லை. செல்லும் வழியில் முதுகுன்று சென்று அடைவோம் என்று முதுகுன்றத்து இறைவனைப் போற்றி பதிகம் பாடியவாறே சென்றார் என்று ...
பின்னணி:சீர்காழி நகரில் அப்பர் பிரான் திருஞானசம்பந்தரை சந்தித்த பின்னர், இருவரும் ஒன்றாக சீர்காழி நகரத்து திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானைத் தொழுதனர்; அதன் பின்னர் இருவருமாக அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்றனர். இருவருமாக சீர்காழி திரும்பிய போது அப்பர் பிரான் காவிரிக் கரையினில் இருக்கும் பல தலங்கள் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக சீர்காழி நகரிலிருந்து புறப்பட்டார். தன்னிடம் விடைப் பெற்றுக் கொண்டு அப்பர் பிரான் சென்ற பின்னர் பல நாட்கள் ...
பின்னணி:ஆடினாய் நறு நெய்யொடு (3.01) என்று தொடங்கும் இன்னிசைப் பதிகம் பாடி, அந்த பதிகத்தினில் தில்லை வாழ் அந்தர்ணர்களை சிறப்பித்தும், பெருமானை வழிபடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்றும் உணர்த்திய ஞானசம்பந்தர், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து, பெருமானிடம் விடை பெற்று பொன்னம்பலத்தை வலம் வந்த பின்னர் வெளி முற்றத்தை அடைந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பின்னர் திருவாயிலை வணங்கி எழுந்தார். அப்போது அவருடன் வந்த ...
பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி சென்ற திருஞான சம்பந்தர், அந்த ஊரிலிருந்த மூன்று தேவாரத் தலங்களுக்கும் (மூக்கீச்சரம், சிராப்பள்ளி, ஆனைக்கா) சென்று, இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய பின்னர், பாற்றுறை, நெடுங்களம், காட்டுப்பள்ளி, ஆலம்பொழில், பூந்துருத்தி, கண்டியூர், சோற்றுத்துறை, வேதிகுடி வெண்ணியூர் சக்கரப்பள்ளி புள்ளமங்கை ஆகிய தலங்கள் சென்ற பின்னர் நல்லூர் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். நெல்வாயில் அரத்துறை பெருமானின் அருளால் முத்துச் ...
பின்னணி:மூன்று தல யாத்திரைகள் மேற்கொண்டு பல சோழ நாட்டுத் தலங்களுக்கு சென்று அங்குள்ள இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தர், தில்லைச் சிதம்பரம் முதலாய பல தலங்கள் காண்பதற்கு மிகுந்த ஆவல் கொண்டார். ஒவ்வொரு முறையும் தலயாத்திரை மேற்கொள்வதற்கு முன்னரும் சீர்காழியில் உறையும் திருத்தோணியப்பரை வணங்கி அவரது திருக்குறிப்பினை அறிந்து கொண்ட பின்னரே யாத்திரை புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்த சம்பந்தர், சீர்காழி திருக்கோயிலுக்கு சென்றார். ஆங்குள்ள இறைவனை ...
முன்னுரை:புறவம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் பெயர்களில் ஒன்றாகும். மன்னன் சிபியை சோதிக்கும் நோக்கத்துடன் இந்திரன் புறா வடிவத்தோடும் அக்னி கழுகு வடிவத்துடனும் வந்தனர். அவ்வாறு சோதனை செய்த அக்னியும் இந்திரனும், தாங்கள் தவறாக மன்னன் சிபியை நினைத்தற்கு மன்னிப்பு கோரி பெருமானை வழிபட்ட தலம் என்பதால் புறவம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். புறவன் (புறாவுக்கு உரியவனாகிய பருந்து உருவில் வந்தஇந்திரன்) தான் இழந்த புறாவின் நிறைக்கு ...
பின்னணி:தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு சென்ற ஞானசம்பந்தர் அதன் பின்னர், பெரும்புலியூர் நெய்த்தானம் மழபாடி ஆகிய தலங்கள் செல்கின்றார். மழபாடியில் சில நாட்கள் தங்கிய பின்னர், அங்கிருந்து கானூர் அன்பிலாலந்துறை மாந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. அதன் மருங்கு என்று மழபாடி தலம் குறிக்கப் படுகின்றது. இறைவனின் அருளினால் திருக்கானூர் பணிந்து ஏத்தி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவன் ...
பின்னணி:தனது ஐந்தாவது தல யாத்திரையாக திருவையாறு சென்ற திருஞானசம்பந்தர், அதன் அருகில் இருந்த பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை, மாந்துறை ஆகிய பல தலங்கள் சென்ற பின்னர் பாச்சிலாச்சிராமம் தலத்திற்கு வருகின்றார். அங்கே அரசனாக விளங்கிய கொல்லி மழவனின் மகள் நீண்ட நாட்களாக முயலகன் என்ற நோயினால் பீடிக்கப்பட்டு வருந்தியதை அறிந்தார். உடனே பெருமானை துதித்து, அந்த இளம் பெண்ணை வருத்துவது பெருமானின் பண்புக்கு பொருந்திய செயல் ...