Latest Blogs



நறவ நிறை வண்டு - முடிவுரை

நறவ நிறை வண்டு - முடிவுரைஇதனிடையில் திருக்கோயிலில் நடந்ததை கண்டவர்களும் கேட்டவர்களும், இத்தகைய அற்புதம் வேறெங்கும் நடைபெறவில்லை என்று சொல்லியவாறு தோணிபுரத்து திருக்கோயிலின் வாயிலில் வந்து சூழ்ந்தனர். தனது வாழ்வினில், இங்கே விளக்கம் அளிக்கப்பட்டுள்ள பதிகத்தினை இரண்டாவது பதிகமாக பாடிய திருஞான சம்பந்தர் திருக்கோயிலுக்கு வெளியே வருகின்றார். வெளியே குழுமியிருந்த வேதியர்கள் காண, இறைவனின் அருளினால் ஏழிசைகள் பொருந்திய செந்தமிழ் பாடல்களை பாடும் திறமை பெற்றவராகவும் இறைவனுக்கு அடிமைத் தொண்டு ...

நறவ நிறை வண்டு - பாடல் 11

நறவ நிறை வண்டு - பாடல் 11 பொன்னார் மாடம் நீடும் செல்வப் புறவம் பதியாக மின்னார் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனைத் தன்னார்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ் மாலை பன்னாள் பாடி ஆடப் பிரியார் பாலோகம் தானே விளக்கம்:பொன்னார் மாடம்=பொன் போன்று அழகும் செல்வச் செழிப்பும் உடைய மாளிகைகள்; ...

நறவ நிறை வண்டு - பாடல் 10

நறவ நிறை வண்டு - பாடல் 10 ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவில் சிறு தேரர் கோலும் மொழிகள் ஒழியக் குழுவும் தழலும் எழில் வானும் போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதியாக ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:ஆலும் மயில்=அகவும் மயில்; கோலும்=புனைந்து பேசும் மொழிகள்; ...

நறவ நிறை வண்டு - பாடல் 9

நறவ நிறை வண்டு - பாடல் 9 நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப் படியா மேனி உடையான் பவள வரை போல் திரு மார்பில் பொடியார் கோலம் உடையான் கடல் சூழ் புறவம் பதியாக இடியார் முழவார் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:நெடியான்=நீண்ட உருவம் கொண்ட திரிவிக்ரமனாக அவதாரம் ...

நறவ நிறை வண்டு - பாடல் 8

நறவ நிறை வண்டு - பாடல் 8 விண் தான் அதிர வியனார் கயிலை வேரோடு எடுத்தான் தன் திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய புண் தான் ஒழிய அருள் செய்தான் புறவம் பதியாக எண் தோளுடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:வியனார்=அகலமுடைய; மிகுந்த ஆரவாரத்துடன் இராவணன் கயிலை ...

நறவ நிறை வண்டு - பாடல் 7

நறவ நிறை வண்டு - பாடல் 7 உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல் பண்ணில் சிறை வண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதியாக எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:தோழம்=எண்ணிறந்த; பாற்கடலிலிருந்து கருமையான விடம் பொங்கி ...

நறவ நிறை வண்டு - பாடல் 6

நறவ நிறை வண்டு - பாடல் 6 பின்னு சடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய் அன்ன நடையார் மனைகள் தோறும் அழகார் பலி தேர்ந்து புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகார் புறவம் பதியாக என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:கேழல் எயிறு=பன்றியின் கொம்பு; பிறழ=விளங்க; பிச்சைப் பெருமானாக ...

நறவ நிறை வண்டு - பாடல் 5

நறவ நிறை வண்டு - பாடல் 5 செங்கண் அரவு நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும் தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகார் புறவம் பதியாக எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:முகிழ்தல்=முளைத்தல்; சரி=தொங்கும்; பிளவு பட்டு ...

நறவ நிறை வண்டு - பாடல் 4

நறவ நிறை வண்டு - பாடல் 4 நினைவார் நினைய இனியான் பனியார் மலர் தூய நித்தலும் கனையார் விடை ஒன்று உடையன் கங்கை திங்கள் கமழ் கொன்றை புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம் பதியாக எனை ஆளுடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:கனைத்தல்=குரல் கொடுத்தல்; பனியார் மலர்=பனித்துளிகள் ...

நறவ நிறை வண்டு - பாடல் 3

நறவ நிறை வண்டு - பாடல் 3 பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்கக் கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா அமர்வு எய்தி எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:பந்தம்=பிரியாத பிணைப்பு; பந்தம் என்ற ...