Latest Blogs



நறவ நிறை வண்டு - பாடல் 2

நறவ நிறை வண்டு - பாடல் 2 உரவன் புலியின் உரி தோலாடை உடை மேல் பட நாகம் விரவி விரி பூங் கச்சா அசைத்த விகிர்தன் உகிர் தன்னால் பொரு வெங் களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம்:உரவன்=வலிமை உடையவன்; விகிர்தன் என்பதற்கு ...

நறவ நிறை வண்டு - பாடல் 1

நறவ நிறை வண்டு - பாடல் 1 நறவ நிறை வண்டு அறை தார்க் கொன்றை நயந்து நயனத்தால் சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழி செய்தான் புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானேவிளக்கம் :நறவம்=தேன்; அறை=ஒலிக்கின்ற; தார்=மாலை; ...

நறவ நிறை வண்டு - முன்னுரை

முன்னுரை:புறவம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் பெயர்களில் ஒன்றாகும். மன்னன் சிபியை சோதிக்கும் நோக்கத்துடன் இந்திரன் புறா வடிவத்தோடும் அக்னி கழுகு வடிவத்துடனும் வந்தனர். அவ்வாறு சோதனை செய்த அக்னியும் இந்திரனும், தாங்கள் தவறாக மன்னன் சிபியை நினைத்தற்கு மன்னிப்பு கோரி பெருமானை வழிபட்ட தலம் என்பதால் புறவம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். புறவன் (புறாவுக்கு உரியவனாகிய பருந்து உருவில் வந்த இந்திரன்) தான் இழந்த புறாவின் ...

தோடுடைய செவியன் - பாடல் 11

தோடுடைய செவியன் - பாடல் 11 அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமேவிளக்கம்:அலர்=மலர், இங்கே தாமரை ...

தோடுடைய செவியன் - பாடல் 10

தோடுடைய செவியன் - பாடல் 10 புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் மத்த யானை மறுக உரி போர்த்ததோர் மாயம் இது என்னப் பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:பொறியில்=அறிவற்ற; இந்த ...

தோடுடைய செவியன் - பாடல் 9

தோடுடைய செவியன் - பாடல் 9 தாணுதல் செய்து இறை காணிய மாலொடு தண் தாமரையானும் நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான் எனது உள்ளம் கவர் கள்வன் வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப் பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:தாணுதல்=தாள்+நுதல், நுதல்=நெற்றி; தாள்=திருப்பாதங்கள்; திருவடியும் திருமுடியும். இறை=இறைவன், ...

தோடுடைய செவியன் - பாடல் 8

தோடுடைய செவியன் - பாடல் 8 வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன் துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம் பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:வியர்=வேர்வை; வியர் என்ற ...

தோடுடைய செவியன் - பாடல் 7

தோடுடைய செவியன் - பாடல் 7 சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசி சதிர்வு எய்த உடை முயங்கும் அரவோடு உழி தந்து எனது உள்ளம் கவர் கள்வன் கடல் முயங்கு கழி சூழ் குளிர் கானல் அம் பொன்னம் சிறகு அன்னம் பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் ...

தோடுடைய செவியன் - பாடல் 6

தோடுடைய செவியன் - பாடல் 6 மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி மழு ஏந்தி இறை கலந்த வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன் கறை கலந்த கடியார் பொழில் நீடு உயர் சோலைக் கதிர் சிந்தப் பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:இறை=முன்கை, மணிக்கட்டு;: ...

தோடுடைய செவியன் - பாடல் 5

தோடுடைய செவியன் - பாடல் 5 ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்ன அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன் கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இது என்னப் பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றேவிளக்கம்:ஒருமை என்ற சொல்லினை ...