ஜோதிடம் & ஜாதகம்

Astrology & Horoscopes

Home    Astrology    Lucky Stone


அதிஷ்ட ராசி கற்கள்


ஒவ்வொரு ராசியினருக்கும் - ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான கற்களை நமக்கு வழங்கியிருக்கிறது ஜோதிட சாஸ்திரம். நவகிரக நவரத்தினக் கற்களை அணியக்கூடிய முறை என்பது ஜாதக ரீதியாக நாம் பார்த்து அணியவேண்டும். அதுவே நமக்கு நன்மையைக் கொடுக்கும். ஒவ்வொருவருடைய லக்னம் என்ன - ராசி என்ன - என்ன தசா புத்தி நடக்கிறது - எந்தந்த கிரகம் பலமாக இருக்கிறது - என்னென்ன காரியங்களுக்காக நாம் அணிய வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நமக்கு நன்மையைக் கொடுக்கும்.


மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்


பிறந்த மாதத்திற்குரிய ராசி கற்கள்



ஒவ்வொரு கிரகத்திற்குரிய கற்கள்:



மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். மேலும் செவ்வாய் திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம் . இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். நம் கோபத்தைக் குறைத்து மனநிம்மதியைத் தரும். பல்வேறு அதிர்ஷ்டங்களைத் தரும். நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும். தீய சிந்தனைகளை நம் மனதுக்குள் அனுமதிக்காது. நமக்கு தைரியத்தை கொடுக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். பதவி உயர்வு கிடைக்கும்.


ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிட்டும். வசீகரமான தோற்றத்தைத் தரும். அதிர்ஷ்டத்தை உருவாக்கும். உடல் மற்றும் மனதுக்கு நல்ல உரமேற்றக் கூடியது. வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது . நமக்கு தன்னம்பிக்கையைத் தரக் கூடியது. ஆண்- பெண் உறவை வலுப்படுத்தும்.. நல்ல தூக்கத்தைக் கொடுக்கக் கூடியது. வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும். நல்ல கற்பனை வளத்தைக் கொடுக்கும். மலட்டுத்தன்மையைப் போக்கும். தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும். நல்ல கல்வியைக் கொடுக்கும். பேச்சாற்றல் வளரும். நினைவாற்றலைப் பெருக்கும்.


கடகம்


கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. மேலும் சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும். நீண்ட ஆயுளைத் தரும். உறவுகளை வலுப்படுத்தும். நட்பினைப் பாதுகாக்கும்.


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். மேலும் சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். புத்திசாதுர்யத்தைத் தரக் கூடியது. நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும். கருத்து வேறுபாடுகளை போக்கும். நல்ல தூக்கத்தைத் தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும். நினைவாற்றலை அதிகப்படுத்தும். தொழிலில் லாபம் கிட்டும்.


கன்னி


கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும். காதல் உணர்வைத் தரும். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது.


துலாம்


துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும். நெஞ்சுறுதியைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலைத் தரும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.


விருச்சிகம்


விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். மேலும் செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும். பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும். பயத்தைப் போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும்


தனுசு


தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும். இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.


மகரம்


மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். மேலும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும். நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது. வம்பு, வழக்கு இருந்தால் நமக்குச் சாதகமான சூழலை உருவாக்கும்.


கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம் இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. தியானத்துக்கு உகந்தது. திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். பெருந்தன்மையை வளர்க்கும்.


மீனம்


மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.


ஏழு கிரகங்களுக்கு ராசி ஆளுமைத் தன்மை உண்டு . ஆனால் ராகு கேதுவுக்குத் தனியான ராசி ஆளுமை கிடையாது. ஜாதகரின் திசையைப் பொறுத்து , ராகுவின் திசை நடக்கும் காலத்தில் கோமேதகமும், கேது திசை நடக்கும் காலத்தில் வைடூரியமும் அணிவதன் மூலம் பாதகமான பலன்களைக் கூட சாதகமாக மாற்றிக் கொள்ளலாம்.


கோமேதகம்


ராகு திசை நடப்பவர்கள் கோமேதகம் அணிவதன் மூலம் இல்லற வாழ்வில் இனிமை உண்டாகும். சொத்து வகையில் மேன்மை கிடைக்கும். பங்காளிகள் வகையில் உதவி கிடைக்கும். பாரம்பர்ய தொடர்பு கிட்டும். அரசு அனுகூலப் பதவியில் உயர்வைக் கொடுக்கும்.


வைடூரியம்


கேது திசை நடப்பவர்கள் வைடூரியம் அணிவதன் மூலம் நுண்ணறிவு கிடைக்கும். நரம்பு பலம், சிறந்த ஞானம், புகழ், நற்சிந்தனைகள் உண்டாகும். தான் சார்ந்த துறையில் தனித்தன்மையை எற்படுத்தும்.


More From Astrology

      Buy personalized astrology reports
      Numerology
      Age Claculater
      Tamil Festivals
 
Advertainment


More From our Website

      Join Membership
      Book Store
      Astrology
      Radio

Advertainment