சங்கரர் அருளிய
(காசித்தலத்தைக் காக்கும் ஸ்ரீ காலபைரவ மூர்த்தியைப் போற்றும் எட்டு ச்லோகம் கொண்டது )
தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யால யக்ஞஸூத்ர – மிந்து சேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே 1
இந்திரனால் வணங்கப்படுகிற மிகத் தூயமான தாமரை போன்ற பாதங்களை உடையவரும், சர்ப்பத்தைப் பூணூலாக தரித்திருப்பவரும், சந்திரனைத் தலையில் தரித்திருப்பவரும், தயைச் சுரங்கமும், நாரதர் முதலான யோகிக் கூட்டங்களினால் வணங்கப்படுகின்றவரும், திக்குகளையே ஆடையாக தரித்திருப் பவருமான காசித்தலத்தைக் காக்கும் ஸ்ரீ காலபைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
பாநு கோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீபஸிதார்த தாயகம் த்ரிலோசனம்
காலகால – மம்புஜாக்ஷமக்ஷ சூலமக்ஷரம்
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே 2
கோடி சூர்யனின் ஒளியைப் போல பிரகாசிப்பவரும், பிறவிக் கடலைத் தாண்டு விப்பவரும், பரம்பொருளும், கருத்த கழுத்தை உடையவரும், வேண்டு வதை அளிப்பவரும். முக்கண்ணரும், யமனை அடக்குபவரும், தாமரைப்பூ போன்ற கண்களை உடையவரும், ருத்ராக்ஷம், சூலம் இவைகளை ஏந்தியவரும், அழிவற்ற அக்ஷரவடிவரும் காசீ தலத்தைக் காக்கும் காலபைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
சூலடங்கபாசதண்டபாணி – மாதி: காரணம்
ச்யாமகாயம் ஆதிதேவமக்ஷரம் நிராமயம்
பீம விக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவ ப்ரியம்
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே 3
சூலம், கோடாரி, பாசக்கயிறு, தண்டம் இவைகளைக் கையில் ஏந்தியவரும் எல்லா உலகத்திற்கும் முதற் காரணமாக உள்ளவரும், கருத்த மேனியரும், முதற் கடவுளும், அக்ஷரரூபியும், பிணியற்றவரும், அஞ்சத்தக்க பராக்கிரமம் கொண்டவரும், ப்ரபுவும், பலவித நடனங்களில் பற்றுக் கொண்டவரும், காசீத் தலத்தைக் காப்பவனும் கால பைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
புக்தி முக்தி தாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே 4
போகத்தையும், மோக்ஷத்தையும் அளிப்பவரும், போற்றத்தக்கதான அழகான சரீரத்தை உடையவரும், பக்தர்கள் பால் அன்பு கொண்டவரும், என்றைக்கும் அழிவற்றவரும், எல்லா உலகத்தின் சரீரமாக விளங்குபவரும், மனதுக்கு ரம்யமாக சப்திக்கின்ற தங்கமயமான சலங்கை விளங்கும் இடுப்பை உடையவரும், காசித்தலத்தைக் காப்பவனுமான கால பைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
தர்மஸேது பாலகம் த்வதர்மமார்க நாசகம்
கர்மபாச மோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ணவர்ண கேசபாசசோபி தாங்க நிர்மலம்
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே 5
தர்மத்தின் அரணைக் காப்பவரும், அதர்ம மார்க்கத்தை அழிப்பவரும், கர்மாக்களிலிருந்து ஏற்படும் பந்தத்தை விடுவிப்பவரும், மிக்க ஸௌக்யத்தை அளிப்பவரும், தங்கம் போன்ற காந்தி கொண்ட தலை மயிரினால் அழகாக்க காணும் சரீரத்தை உடையவரும், சுத்தமானவரும், காசித்தலத்தைக் காப்பவனுமாகிய எங்கும் நிறைந்த விபுவான கால பைரவ மூர்த்தியை போற்றுகிறேன்.
ரத்னபாதுகா ப்ரபாபிராமபாத யுகமகம்
நித்ய – மதவிதீய மிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்ம்
ருத்யுதர்ப நாசநம் கராலதமஷ்ட்ர பூஷணம்
காசிகாபுராத நாத காலபைரவம் பஜே 6
ரத்தினக்கற்கள் இழைக்கப்பட்ட பாதுகைகளின் ஒளியினால் மிக அழகாகப் பிரகாசிக்கும் இரு பாதங்களை உடையவரும், நித்யமானவரும், தமக்கு வேறாக ஏதும் அற்றவரும், விரும்பிப் போற்றத்தக்க தெய்வமானவரும், மாசற்றவரும், யமனின் கொழுப்பை அடக்கியவரும், கோரைப் பற்களை அலங்காரமாக கொண்டவரும், காசித்தலத்தைக் காப்பவனுமாகிய பாலகருமான காலபைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோச ஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாபஜாலம் உக்ரசாஸநம்
அஷ்டஸித்திதாயகம் கபால மாலிகாதரம்
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே 7
(பிரளய காலத்தில் தன்னுடைய) கோரமான சிரிப்பினாலேயே பிளக்கப்பட்ட பிரம்மாண்ட வரிசையை உடையவரும், (தன்) பார்வை விழும் மாத்திரத்திலேயே பாபக் கூட்டங்களை தொலைப்பவரும், கடுமையான தண்டனையை விதிப்பவரும், (அணிமா, மஹிமா என்றதான) எட்டு ஸித்திகளை அளிப்பவரும், மண்டை ஓடுகளை மாலையாக தரித்திருப்பவரும், காசித்தலத்தைக் காப்பவனுமாகிய பாலகருமான காலபைரவ மூர்த்தியை போற்றுகிறேன்.
பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாஸி லோகபுண்ய பாப சோதகம்
விபும்நீதிமார்க கோவிதம் புராதநம் ஜகத்பதிம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே 8
பூதக்கணக் கூட்டத்தின் தலைவரும், அகண்டமான புகழை அளிப்பவரும், சியில் வசிக்கின்ற மக்களின் புண்ணிய பாபங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்து விளங்குபவரும், நீதி வழியை நன்கு அறிந்தவரும், மிகப் பழமையான உலகுக்கு நாயகனும், காசீதலத்தைப் பாதுகாப்பவனுமாகிய கால பைரவ மூர்த்தியைப் போற்றுகிறேன்.
காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்தி ஸாதகம் விசித்ர புண்ய வர்தனம்
சோகமோஹலோப தைன்ய கோபதாபநாசநம்
தேப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதி ம்தருவம் 9
மிகவும் அழகானதும், ஞான மோக்ஷத்தை அளிப்பதும், பலவித புண்ணியங்களை வளர்க்க வல்லதும், சோகம், மோஹம், லோபம், ஏழ்மை, கோபதாபங்கள் இவைகளைத் தொலைக்க வல்லதுமான கால பைரவரின் இந்த எட்டு ச்லோகம் கொண்ட துதியைப் பாராயணம் செய்பவர்கள். (மேலே கூறிய நற்பயன்களோடு) நிலைத்ததான காலபைரவரின் பாத ஸந்நிதியை அடைவார்கள்.
Sri Kalabhairavashtakam (ஸ்ரீ காலபைரவாஷ்டகம்) is a devotional hymn dedicated to Kala Bhairava, a fierce and protective form of Lord Shiva. Kala Bhairava is particularly revered for his role in guarding the boundaries of spiritual practices and safeguarding devotees from negative influences. The hymn, traditionally composed of eight verses (ashtakshara), praises Kala Bhairava and seeks his blessings for protection, wisdom, and spiritual progress.
Significance of Kala Bhairava
Aspect of Shiva:
Fierce Guardian: Kala Bhairava is one of the eight Bhairavas and is known for his fierce and protective nature. He is associated with time (Kala) and the transcendence of worldly limitations.
Protector of the Path: He is often depicted as a guardian who protects the spiritual aspirant from obstacles and helps in overcoming fear and ignorance.
Iconography:
Fearsome Appearance: Kala Bhairava is typically depicted with a fierce appearance, including a black complexion, disheveled hair, and often holding a trident and a skull. Despite his fearsome look, he is benevolent and protective.
Symbolism: His appearance symbolizes the destruction of ignorance and the protection of spiritual progress.
Sri Kalabhairavashtakam Hymn
The Sri Kalabhairavashtakam is a hymn composed to extol the virtues of Kala Bhairava and seek his blessings. Each verse typically describes an attribute of Kala Bhairava, his divine qualities, and the benefits of worshipping him.
Structure and Themes
Praises and Attributes:
The hymn praises Kala Bhairava’s attributes, such as his ability to transcend time, his role as a guardian, and his compassion towards devotees. Each verse might highlight different aspects of his divine nature.
Requests for Blessings:
Devotees often use the hymn to request Kala Bhairava’s protection, guidance, and removal of obstacles. The hymn serves as a means to invoke his divine presence and seek his favor.
Spiritual Benefits:
Reciting or listening to the hymn is believed to help in overcoming fear, gaining wisdom, and achieving spiritual progress. It is often used in rituals and personal prayers for these purposes.
Conclusion
The Sri Kalabhairavashtakam is a powerful hymn dedicated to Kala Bhairava, focusing on his protective and transcendental qualities. Reciting this hymn is believed to offer spiritual protection, overcome obstacles, and deepen one's connection with the divine aspect of Lord Shiva. It serves as a means to invoke the fierce and benevolent energy of Kala Bhairava, ensuring guidance and protection on the spiritual journey.