இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ஶ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் உரையுடன்

ஆதிசங்கரர் இயற்றிய

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

உபாஸகானாம் யதுபாஸநீய –

முபாத்தவாஸம் வடசாகிமூலே |

தத்தாம தாக்ஷிண்யஜுஷா ஸ்வமூர்த்யா

ஜாகர்த்து சித்தே மம போதரூபம் || 1 ||

கடவுளை உபாஸிப்பவர்கள் முக்கியமாக உபாஸிக்க வேண்டியவரும், ஆல விருக்ஷத்தின் அடியிலிருப்பவரும், தெற்குமுகமாக அமர்ந்த மூர்த்தியுமான அறிவே உருவமான ஜோதி என்னுடைய மனதில் விளங்கட்டும்.


அத்ராக்ஷமக்ஷீணதயாநிதான –

மாசார்யமாதயம் வடமூல பாகே |

மெளனேன மந்தஸ்மித்பூஷிதேந

மஹர்ஷிலோகஸ்ய தமோநுதந்தம் || 2 ||

எல்லையற்ற கருணைக்கு இருப்பிடமும், புன் சிரிப்பினால் அலங்கரிக்கப்பட்ட மெளனத்தினால் மகர்ஷிகளின் அக்ஞானத்தைப் போக்குகின்றவரும், ஆலமரத்தடியில் அமர்ந்து இருப்பவருமான ஆதி ஆசார்யரை நமஸ்கரிக்கின்றேன்.


வித்ராவிதாசேஷதமோகணேந

முத்ராவிசேஷேண முஹுர்முநீநாம் |

நிரஸ்ய மாயாம தயயா விதத்தே

தேவோ மஹாமஸ்தத்தவமஸீதி போதம் || 3 ||

அக்ஞானத்தை முழுமையாகப் போக்கும் சின்முத்திரையால் மகரிஷிகளுடைய அஞ்ஞானத்தை கருணையினால் போக்கி தத்தவமஸி என்னும் மஹா வாக்கியத்தின் ஞானம் விளங்குமாறு மஹாதேவன் செய்கிறார்.

அபாரகாருண்யஸுதாதரங்கை –

ரபாங்கபாதைரவலோகயந்டம் |

கடோரஸம் ஸாரநிதாகதப்தா –

ந்முநீநஹம் நெளமி குரும் குரூணாம் || 4 ||

கரைகடந்த கருணாஸமுத்திரத்தின் அலைகளாகிற கடைக்கண் பார்வைகளால் முகக்ரூரமான ஜனன மரண துக்கத்தால் தவிக்கின்ற மஹரிஷிகளைப் பார்க்கின்றவரும் ஆசார்யர்களுக்கெல்லாம் ஆசார்யரை நமஸ்கரிக்கிறேன்.


மமாத்யதேவோ வடமூலவாஸீ

க்ருபாவிசேஷாத்க்ருத ஸன்னிதாந: |

ஓங்காரரூபாமுபதிச்ய வித்யா –

மாவித்யகத்வாந்தமபாகரோது || 5 ||

மிகுந்த கருணையால் ஆலமரத்தடியில் அமர்ந்தவரான ஆதிதேவர் எனக்கு பிரணவரூபமான வித்யையை உபதேசித்து அவித்யையாகிற இருட்டைப் போக்கட்டும்.


கலாபிரிந்தோரிவ கல்பிதாங்கம்

முக்தாகலாபைரிவ பத்தமூர்த்திம் |

ஆலோகயே தேசிகம்ப்ரமேய –

மனாத்யவித்யாதிமிரப்ரபாதம் || 6 ||

சந்திரக் கலைகளால் செய்யப்பட்டது போன்ற அவயங்களை உடையவரும், முத்துக் கூட்டங்களால் கட்டப்பட்டது போன்ற மூர்த்தியை உடையவரும், அநாதியான அவித்யையாகிற இருட்டுக் கூட்டத்திற்கு விடியற்காலமானவரும் அறிவுக்கு எட்டாதவருமான ஆசார்யனைத் தரிசிக்கிறேன்.


ஸ்வதக்ஷஜானுஸ்தித வாமபாதம்

பாதோதராலங்க்ருதயோகபட்டம் |

அபஸ்ம்ருதேராஹித பாதமங்கே

ப்ரணெளமி தேவம் ப்ரணிதானவந்தம் || 7 ||

தனது வலது முழங்காலில் வைக்கப்பட்ட இடது காலை உடையவரும் பாதங்களிலும் வயிற்றிலும் சேர்த்து கட்டப்பட்ட யோக பட்டத்தை உடையவரும், அபஸ்மாரமென்னும் ரோகதேவதையின் அங்கத்தின் மீது வைக்கப்பட்ட காலை உடையவரும், ஸமாதிநிலையில் இருப்பவருமான தேவரை நமஸ்கரிக்கிறேன்.


தத்த்வார்த்தமந்தேவஸதாம்ருஷீணாம்

யுவா(அ)பி ய: ஸநநுபதேஷ்ட்டுமீஷ்டே |

ப்ரணெளமி தம் ப்ராக்தனபுண்யஜாலை –

ராசார்யமாச்சர்யகுணாதிவாஸம் || 8 ||

எந்த ஆசார்யன் தான் யுவாவாக இருந்த போதிலும் சிஷயர்களான ரிஷிகளுக்கு தத்வார்த்தத்தை உபதேசிக்க வல்லவரோ, அப்படிப்பட்ட ஆச்சர்யமான குணங்குளுக்கெல்லாம் இருப்பிடமான ஆசார்யனை பூர்வ புண்யக் கூட்டங்களால் நமஸ்கரிக்கிறேன்.


ஏகேன முத்ராம் பரசும் கரேண

கரேண சாந்யேந ம்ருகம் ததான: |

ஸ்வஜானுவின்யஸ்தகர: புரஸ்தா

தாசரர்யசூடாமணிராவிரஸ்து || 9 ||

ஒரு கையால் சின்முத்திரையையும் ஒரு கையால் பரசுவை (கோடரியையும்) ஒரு கையால் மானையும் தரித்தவரும் தன் முழங்காலில் வைத்த கையை உடையவருமான ஆசார்யன் எனது முன்னிலையில் தர்சனமளிக்கட்டும்.


ஆலேபவந்தம் மதநாங்கபூத்யா

சார்தூலக்ருத்யா பரிதானவந்தம் |

ஆலோகயே கஞ்சன தேசிகேந்தர:

மக்ஞானவாராகர பாடபாக்னிம் || 10 ||

மன்மதனை எரித்த சாம்பலைப் பூசிக் கொண்ட வரும், புலித்தோலைப் போர்த்திக் கொண்டவரும், அக்ஞானமாகிற ஸமுத்திரத்திற்கு வடவாக்னி போல் இருப்பவருமான ஓர் சிறந்த ஆசார்யனை தரிசிக்கிறேன்.


சாருஸ்மிதம் ஸோமகலாவதம்ஸம்

வீணாதரம் வ்யக்தஜடாகலாபம் |

உபாஸதே கேசன யோகினஸ்த்வா –

முபாத்தநாதானுபவப்ரமோதம் || 11 ||

அழகாக ஆஸனத்தில் அமர்ந்தவரும், சந்திரசூடனும், வீணையை தரித்தவரும், விரிந்த ஜடாபாரத்தை உடையவரும், நாதப்ரம்மா நுபவத்தினால் மிக்க சந்தோஷமடைந்தவருமான யோகியை சிலர் உபாஸிக்கின்றனர்.


உபாஸதே யம் முனய: சுகாத்யா

நிராசிஷோ நிர்மமதாதிவாஸா: |

தம் தக்ஷிணாமூர்த்திதநும் மஹேச –

முபாஸ்மஹே மோஹமஹார்திசாந்த்யை || 12 ||

எந்த தக்ஷிணாமூர்த்தியை அகங்கார மற்றவர்களும் ஆசையற்றவர்களுமான சுகர் முதலிய மஹரிஷிகள் உபாஸிக்கின்றனரோ, அப்படிப்பட்ட மஹேசனான தக்ஷிணாமூர்த்தியை மோஹமாகிற பீடை விலக நான் உபாஸிக்கிறேன்.


காந்த்யா நிந்திதகுந்த கந்தலவ –

புர்ன்யக்ரோதமூலே வஸந்

காருண்யாம்ருதவாரிபிர்முநிஜனம்

ஸம்பாவயந்வீக்ஷிதை: |


மோஹத்வாந்தவிபேதனம்

விரசயந்போதேன தத்தாத்ருசா

தேவஸ்தத்மஸீதி போதயது

மாம் முத்ராவதா பாணிணா || 13 ||

தனது சரீர காந்தியினால் தாமரைத் தண்டின் காந்தியை ஜயித்தவரும் ஆலமரத்தினடியில் வசிப்பவரும் கருணையாகிற அம்ருதப்ரவாகம் போன்ற பார்வையால் முனிஜனங்களை அனுக்கிரஹிக்கின்றவரும், மிகச் சிறந்த ஞானத்தினால் மோஹமாகிற இருட்டைப் போக்குகின்றவருமான தேவர் சின் முத்திரையோடு கூடிய கையால் தத்த்வமஸி என்னும் ஞானத்தை எனக்கு உண்டாக்கட்டும்.


அகெளரகாத்ரைரலலாடநேத்ரை –

ரசாந்தவேஷைரபுஜங்கபூஷை: |

அபோதமுத்ரைரநபாஸ்த நித்ரை –

ரபூர்ணகாமைரமரைரலம் ந : || 14 ||

வெண்மையான சரீரம் இல்லாதவர்களும் நெற்றிக்கண் இல்லாதவர்களும், சாந்தியற்ற வேஷமுள்ளவர்களும் பாம்பை ஆபரணமாகக் கொள்ளாதவர்களும், ஞானமுத்ரை இல்லாதவர்களும் தூக்கத்தை விடாதவர்களும், மேன்மேலும் விருப்பமுள்ளவர்களுமான தேவர்களால் எங்களுக்கு ஆவது ஒன்றுமில்லை.


தைவதானி கதி ஸந்தி சாவநெள

நைவ தானி மனஸோ மதாநி மே |

தீக்ஷிதம் ஜடதியாமனுக்ரஹே

தக்ஷிணாபிமுகமேவ தைவதம் || 15 ||

உலகில் எத்தனையோ தெய்வங்கள் உள்ளன.அந்த தெய்வங்கள் எனக்கு பிடித்தமில்லை.மந்த புத்தி உள்ளவர்களை அனுக்கிரகம் செய்வதில் வ்ரதம் கொண்டவரும், தெற்கு முகமாய் அமர்ந்திருப்பவரும் எனக்கு தெய்வம்.


முதிதாய முக்தசசிநாவதம்ஸினே

பஸிதாவலேபரமணீய மூர்த்தயே |

ஜகதிந்த்ரஜா லரசனாபடீயஸே

மஹஸே நமோ(அ)ஸ்து வடமூல வாஸினே || 16 ||

ஆனந்தம் கொண்டவரும், பாலசந்திரனை சிரஸ்ஸில் தரித்தவரும், விபூதியைத் தரித்துக் கொண்டதால் அழகு வாய்ந்த சரீரம் உள்ளவரும், உலகமாகிற இந்திர ஜாலத்தைச் செய்வதில் சமர்த்தரும், ஆலமரத்தினடியில் வஸிப்பவருமான தேஜஸ்ஸுக்கு நமஸ்காரம்.


வ்யாலம்பிநீபி: பரிதோ ஜடாபி:

கலாவசேஷேண கலாதரேண |

பச்யல்லலாடேன முகேந்துனா ச

ப்ரகாசஸே சேதஸி நிர்மலானாம் || 17 ||

நான்கு பக்கங்களிலும் தொங்குகின்ற ஜடைகளாலும் ஒரு கலை மீதமுள்ள சந்திரனாலும், கண்ணுள்ள நெற்றியாலும், பிரகாசிக்கின்ற சந்திரன் போன்ற முகத்தாலும், நிர்மலர்களான மஹான்களுடைய மனதில் விளங்குகின்றீர்.


உபாஸகனாம் த்வமுமாஸஹாய:

பூரணேந்துபாவம் ப்ரக்டீகரோஷி |

யதத்ய தே தர்சனமாத்ரதோ மே

த்ரவத்யஹோ மானஸசந்த்ரகாந்த: || 18 ||

பார்வதியுடன் கூடிய தாங்கள் உபாஸிப்பவர்களுக்குப் பூர்ண சந்திரனாக இருக்கும் தன்மையை வெளிப்படுத்துகிறீர் யாது காரணத்தால் தங்களை தரிசித்த உடனேயே என் மனமாகிற சந்திரக்காந்தக்கல் உருகுகின்றது, ஆச்சரியம்.


யஸ்தே ப்ரஸன்னாமநுஸந்ததாநோ

மூர்த்திம் முதா முக்தசசாங்கமெளலே: |

ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா –

மந்தே ச வேதாந்தமஹாரஹஸ்யம் || 19 ||

எவன் பாலசந்திரனை சிரஸ்ஸில் தரித்த தங்களுடைய பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கின்றானோ, அவன் ஆயுள், ஐச்வர்யம், வித்யை இவைகளை அடைகின்றான், முடிவில் வேதாந்தத்தின்பரம ரஹஸ்யமான தங்களை அடைவான்.


ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் (Sri Dakshinamurthy Stotram) is a revered hymn composed by the great sage Adi Shankaracharya. This stotram is dedicated to Lord Dakshinamurthy, who is the embodiment of Shiva as the supreme teacher and the ultimate guru of knowledge and wisdom. Dakshinamurthy is traditionally depicted as a youthful deity facing south, imparting knowledge to his disciples through silence.

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்:

The stotram consists of ten verses (slokas), each glorifying different aspects of Lord Dakshinamurthy. The verses are profound and often reflect the philosophy of Advaita Vedanta, emphasizing the unity of the individual soul (Atman) with the supreme consciousness (Brahman).



Share



Was this helpful?