Somas Kanda Murthy (சோமாஸ்கந்த மூர்த்தி) is a divine form of Lord Shiva, depicted with his consort Parvati (Uma) and their son Lord Skanda (Murugan or Kartikeya). The name Somas Kanda comes from the combination of "Soma" (another name for Parvati or Uma), "As" (referring to Shiva), and "Kanda" (referring to Skanda or Murugan). This form symbolizes the ideal divine family, highlighting the unity and harmony among Shiva, Parvati, and their son Skanda.
சோமாஸ் கந்த மூர்த்தி
சூரபத்மனின் கொடுமைகள் எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் அனைவரும் ஈசனிடம் சென்று முறையிட்டனர். வல்லமைபெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் விரும்பினர். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார்.
அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. உடன் பார்வதி தேவியார் அவ்வெப்பம் தாளாமல் தம் கொலுசு மணிகள் ஒன்றோடொன்று மோதி சிதறும் படி அந்தப்புரம் நடந்தார். இதனால் தேவர்கள் சித்தம் கலங்கி, மனம் வருந்தினர். மகனைக் கேட்டால் இவர் நெருப்பு பொறிகளை கொடுக்கின்றாரென கலங்கினர். உடன் வாயு தேவனையும், அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளைக் கொடுத்து கங்கையில் விடச் சொன்னார். கங்கையோ அப்பொறிகளை சரவணப்பொய்கையில் சேர்த்தது.
ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப்பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரேக் குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும், பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும், கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் வெள்ளிமலையை அடைந்தனர்.
அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றத்தையே நாம் சோமாஸ் கந்த மூர்த்தி என்கிறோம். சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிக்க திருவாரூர் செல்ல வேண்டும். அங்குள்ள ஆயிரம் கால் மண்டபம் அருகே சுரக்கும் அமுத தீர்த்தத்தினால் சோமாஸ் கந்தரை அபிசேகம் செய்ய உடல் வலிமை, அறிவு விரத்தி, தந்தைக்கே உபதேசிக்கும் அளவு புத்தி வலுவடையும். மேலும் திங்கள், வியாழக்கிழமைகளில் வில்வார்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் கொடுக்க குரு ஸ்தானம் விரைவில் கைகூடும். எழுத்தாளர்களுக்கு திறமை வளரும். எனவே எழுத்தாளர்கள் தொழ வேண்டியவர் இவர்.
Features of Somas Kanda Murthy:
Shiva, Parvati, and Skanda Together:
In the Somas Kanda depiction, Lord Shiva is seated or standing alongside Parvati, with their child Skanda (Murugan) either seated on Shiva's lap or standing between them.
Shiva is often shown holding his usual attributes such as the trident (trishula) and drum (damaru), while Parvati may hold a lotus or other symbols of prosperity.
Symbolism:
Divine Family: This form represents the ideal and harmonious divine family, symbolizing the balance of male and female energies, along with the next generation represented by their son.
Unity of Creation and Protection: Skanda (Murugan) is the god of war and protector of the gods, while Parvati symbolizes nurturing and creation. Together, this form highlights the balance between protection, creation, and family values.
Spiritual Protection and Harmony: The Somas Kanda form is often seen as a protector of families and promotes harmony within households.
Significance in Hinduism:
Family and Harmony:
Somas Kanda Murthy emphasizes the importance of family unity and harmony. This form is worshipped by devotees who seek family well-being, peace, and prosperity.
Devotion to Skanda (Murugan):
Since Murugan (Skanda) is central to this form, worship of Somas Kanda Murthy is particularly popular in South India, especially among devotees of Murugan. It symbolizes Murugan’s divine origin and the support of his parents in his mission to protect and uphold righteousness.
Worship and Depictions:
Temples and Icons:
The Somas Kanda Murthy icon is commonly found in South Indian temples, particularly in Murugan temples and Shaivite temples. This form is prominently featured in Tamil Nadu and other regions where Murugan worship is prevalent.
In the iconography, the central figures—Shiva, Parvati, and Skanda—are often depicted in a peaceful and loving family setting, highlighting their divine bond.
Devotional Practices:
Worship of Somas Kanda Murthy involves prayers, offerings, and rituals aimed at fostering family harmony and seeking the divine blessings of both Shiva and Murugan.
Festivals like Skanda Sashti (dedicated to Murugan) may also involve special reverence for Somas Kanda Murthy, as this form emphasizes Murugan's divine family lineage.
Conclusion:
Somas Kanda Murthy is a revered form of Lord Shiva, symbolizing the unity and harmony of the divine family—Shiva, Parvati, and their son Skanda (Murugan). This form represents the perfect balance of familial love, protection, and nurturing, making it a source of inspiration and devotion for families seeking peace, unity, and divine blessings. Worship of Somas Kanda Murthy underscores the importance of family values and spiritual protection within the household.