Sirappuli Nayanar is one of the venerated 63 Nayanmars in Tamil Shaivism. His life is celebrated for its deep devotion to Lord Shiva and his unwavering commitment to the principles of Shaivism.
பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர் தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச்சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார்.
இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார். அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார்.
இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.
குருபூஜை: சிறப்புலியார் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்.
Key Aspects of Sirappuli Nayanar
Background and Early Life:
Origin: Sirappuli Nayanar is believed to have hailed from Tamil Nadu, though specific details about his early life and background are not extensively documented.
Social Status: He came from a humble background, and his life was marked by a deep dedication to Lord Shiva and the practice of Shaivism.
Life and Devotion:
Devotion to Shiva: Sirappuli Nayanar is renowned for his intense devotion to Lord Shiva. His life was dedicated to worshiping Shiva and supporting the Shaivite community.
Acts of Piety: His devotion was demonstrated through various acts of piety, including the upkeep of Shiva temples and the participation in sacred rituals. His life was characterized by his dedication to maintaining the sanctity of Shiva worship.
Significant Incidents:
Incident of Devotional Service: Sirappuli Nayanar is remembered for his dedication to temple services and rituals. His contributions to the upkeep of Shiva temples and the performance of religious rituals were significant, reflecting his deep commitment to Lord Shiva.
Divine Blessing: Recognizing his devotion and service, Lord Shiva is said to have blessed him with divine grace. This acknowledgment highlights the importance of his contributions to the Shaivite tradition.
Role in Shaivism:
Exemplar of Devotion and Service: Sirappuli Nayanar’s life serves as a model of true devotion and service. His story illustrates that genuine spirituality involves dedicated worship and support for sacred practices.
Symbol of Humility and Faith: His acts of piety and service embody the values of humility and unwavering faith. He represents how true spirituality is expressed through commitment and selfless actions.
Iconography and Commemoration:
Depictions: Sirappuli Nayanar is often depicted in the attire of a devotee or temple servant, engaged in acts of worship or service. His iconography reflects his life of devotion and dedication.
Festivals and Rituals: He is honored during Nayanmar festivals and other Shaivite observances. His story continues to inspire devotees to embrace the values of devotion, humility, and service in their spiritual practices.
Conclusion
Sirappuli Nayanar is celebrated for his profound devotion to Lord Shiva and his dedicated service to Shiva temples. His life exemplifies the essence of true spirituality through selfless acts, humility, and unwavering commitment. Through his story, Sirappuli Nayanar continues to inspire followers of Shaivism to lead lives of piety, service, and devotion to the divine.