இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சதாசிவ மூர்த்தி

Sadasiva Murthy refers to a specific form of Lord Shiva that embodies the concept of Sada-Shiva, meaning "Eternal Shiva" or "Everlasting Shiva." This form represents Shiva as the ultimate, unchanging reality and the source of all creation, preservation, and destruction.

சதாசிவ மூர்த்தி

சடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் கைகளைக் கொண்டவர். இவறுடைய வலக்கையில் சூலமும், மழுவும், கட்வங்கமும், வாளும், பீஜா பூரகமும், வச்சிரமும், அபயமுத்திரையும் கொண்டு காட்சியளிக்கும். இடக்கையில் நாகம், பாசம், நீலோற்பலம், அங்குசம், டமருகம், வரதம், மணிமாலை, பரிவட்டம் எனக்காணப்படும். இவர் ஸ்படிக நிறத்துடன் காட்சிக்கொடுப்பவர். மேலும் தியான பூஜைக்காக சகளத்திருவுருவத்துடன் காட்சியளிப்பவர்.

இவரது இடைப்பாகத்தில் சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரமனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் அடங்கியுள்ளனர். இம் முர்த்திகள் ஐவரும் அடங்கியள்ள நிலையை நாம் கன்மசா தாக்கியம் என்போம். இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் சதாசிவ மூர்த்தியாவார். சாந்த சொருபீயான இவரே அனைத்திற்கும் காரணகர்த்தாவாவார். இந்த மூர்த்தி ஈசானம், தத்புருடம், வாமம், அகோரம், சத்யோஜாதம் முதலான ஐந்து திருமுகங்களுடன் எழுந்தருளியிருப்பவர். முனிவர் கௌசிகரின் பொருட்டு இவரது சத்யோகஜாத முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்னும் ஐந்து ஆகமங்களை அருளினார்.

காசிபமுனிவருக்காக வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்ற ஆதமங்களை அருளினார். பரத்வாஜருக்காக அகோரமுகத்திலிருந்து விசயம், நீச்சுவாசம், சுவயம்புவம், ஆக்நேயம், வீரம் ஐந்து ஆகமங்களையும் அருளினார். கௌதம முனிவரின் பொருட்டு தத் புருட முகத்தினின்று ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிஷ்பம் என்ற ஐந்து ஆகமங்களையும் அருளினார்.

முடிவில் அகத்தியருக்காக ஈசான முகத்திலிருந்து புரோத்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேச்சுவரம், கிரணம், வாதுளம் எனும் எட்டு ஆகமங்களையும் அருளினார். இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டிய தலம் சிதம்பரமாகும். இங்குள்ள கோயில் பிரகாரத்தில் ஐந்து பீடங்கள் உள்ளன.

இங்கே சதாசிவமூர்த்தி அருளிபாலிக்கிறார். இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தால் அபிசேகம் செய்து வில்வ இலை அர்ச்சிக்க அனைத்து மூர்த்திகளையும் வணங்கிய, அர்ச்சித்த பலன் கிடைக்கும். மேலும் சோமவாரத்தில் மிளகு சீரக சாதத்தால் நைவேத்தியம் செய்ய மறுபிறவியில்லை எனும் நிலையை அடையலாம். இங்குள்ள சிவபெருமானை திருநீரால் அபிசேகம் செய்ய சகல நன்மையும் உண்டாகும்.


Features of Sadasiva Murthy:

Eternal Nature:

Sadasiva signifies the eternal and timeless nature of Shiva. Unlike other forms of Shiva that may emphasize particular aspects of his divine functions, Sadasiva represents the unchanging, absolute reality that underlies all existence.

Symbolism:

Sadasiva is often depicted with certain key attributes:
Three Eyes: Symbolizing the past, present, and future.
Ashes (Vibhuti): Representing the transitory nature of the physical world and the ultimate reality beyond it.
Crescent Moon: Signifying the cycle of time and the phases of creation and destruction.

Significance in Hinduism:

Transcendence and Immanence:

Sadasiva Murthy combines both transcendental and immanent aspects of the divine. As Sadasiva, Shiva is beyond all temporal limitations and is the source from which everything emanates. This form emphasizes the duality of Shiva's presence: both immanent in the universe and transcendent of it.

Role in Creation:

In many Hindu traditions, Sadasiva is considered the ultimate form of Shiva from which all other forms and manifestations arise. He embodies the essence of creation, preservation, and destruction in their purest form.

Worship and Depictions:

Temples and Icons:

Sadasiva Murthy may be depicted in temples alongside other forms of Shiva, such as Rudra or Shankara, highlighting the different aspects of his divine functions. In some traditions, specific rituals or prayers are dedicated to invoking the presence of Sadasiva for spiritual advancement and understanding of the eternal truth.

Devotional Practices:

Devotees might engage in meditation, chanting, and specific rituals aimed at recognizing the eternal nature of Shiva. These practices are intended to align the devotee's consciousness with the eternal reality that Sadasiva represents.

Conclusion:

Sadasiva Murthy represents Lord Shiva in his most fundamental, eternal form. This depiction emphasizes Shiva’s nature as the unchanging, absolute reality behind the transient world. Worship of Sadasiva helps devotees to understand and connect with the divine essence that transcends all temporal and material aspects of existence.



Share



Was this helpful?