இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பதஞ்சலி முனிவர்


இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும், பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார், திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன். உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.

படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர் பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
3. ஒளிமயமானவரே போற்றி!
4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
5. கருணாமூர்தியே போற்றி!
6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
7. பூலோகச் சூரியனே போற்றி!
8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
10. இன்மொழி பேசுபவரே போற்றி!
11. இகபரசுகம் தருபவரே போற்றி!
12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

நிவேதனம்: இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.

பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:
1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்
2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்
3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்
4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்
5. நன் மக்கட்பேறு உண்டாகும்
6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்
7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்
8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்
9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும்.

பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.


Patanjali Muni is a revered figure in Hindu tradition, known primarily for his monumental contributions to the fields of yoga, grammar, and medicine. He is often referred to as Maharishi Patanjali and is best known for compiling the Yoga Sutras, a foundational text on yoga philosophy and practice.

Key Contributions

Yoga Sutras:

Yoga Philosophy: Patanjali's most famous work is the Yoga Sutras, a collection of 196 aphorisms (sutras) that form the basis of classical yoga. The Yoga Sutras outline the eightfold path of yoga, known as Ashtanga Yoga, which includes ethical disciplines, physical postures (asanas), breath control (pranayama), and meditation techniques aimed at achieving spiritual liberation (moksha).

Eight Limbs of Yoga: The eight limbs described by Patanjali are:

Yama: Ethical restraints (non-violence, truthfulness, etc.).
Niyama: Observances (purity, contentment, etc.).
Asana: Physical postures.
Pranayama: Breath control.
Pratyahara: Withdrawal of the senses.
Dharana: Concentration.
Dhyana: Meditation.
Samadhi: A state of deep meditation and union with the divine.

Mahabhashya:

Sanskrit Grammar: Patanjali is also credited with authoring the Mahabhashya, a major commentary on Panini’s work on Sanskrit grammar, particularly the Ashtadhyayi. The Mahabhashya is a critical and analytical commentary that explains and elaborates on Panini's rules of grammar, making it a crucial text for the study of Sanskrit.

Charaka Samhita:

Medicine (Ayurveda): In some traditions, Patanjali is also associated with contributions to Ayurveda, particularly in relation to the Charaka Samhita, although this is debated among scholars. The Charaka Samhita is one of the foundational texts of Ayurveda, the ancient Indian system of medicine.
Legend and Mythology
Origin: According to various legends, Patanjali is believed to be an incarnation of Adi Sesha, the divine serpent on whom Lord Vishnu rests. It is said that he descended to earth to teach humanity the science of yoga and grammar.
Symbolism: Patanjali is often depicted in iconography with the lower half of his body as a coiled serpent, symbolizing his connection to Adi Sesha and his mastery over both yoga and grammar. His form represents the union of spiritual and intellectual pursuits.

Influence and Legacy

Yoga Tradition: Patanjali’s Yoga Sutras have had an enduring influence on the practice and philosophy of yoga. His teachings are considered authoritative in the field of yoga and continue to be studied and practiced by yogis and spiritual seekers around the world.
Sanskrit Scholarship: His Mahabhashya remains a critical text for students and scholars of Sanskrit grammar. It has played a pivotal role in preserving and transmitting the linguistic tradition of Sanskrit.

Cultural Impact: Patanjali is revered not only as a sage but also as a divine figure who contributed significantly to the spiritual and intellectual heritage of India. His works continue to inspire and guide practitioners of yoga, students of Sanskrit, and those involved in the study of ancient Indian sciences.
Temples and Worship

Temples: While Patanjali is not worshipped widely in the same manner as other deities, there are certain temples, particularly in South India, where he is venerated. His teachings are often revered in spiritual and yoga centers.
Patanjali Muni's contributions to yoga, grammar, and potentially Ayurveda mark him as one of the most influential figures in the history of Indian philosophy and science. His works continue to guide and inspire millions of people in their spiritual and intellectual pursuits.



Share



Was this helpful?