நன்னெறி என்பது நல்ல வாழ்வியல் நெறிமுறைகள் அல்லது ஒழுக்கத்தைக் குறிக்கிறது. இதனை தமிழில் பல்வேறு அறநெறிகள், நீதிநெறி நூல்கள் ஆகியவை எடுத்துரைக்கின்றன. நன்னெறி என்பது ஒரு மனிதன் அவன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய உயரிய நெறிகள், ஒழுக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆகும்.
நன்னெறி பற்றிய கருத்துக்கள்:
நல்லொழுக்கம்: நல்லொழுக்கம் என்பது நன்னெறியின் முக்கிய அம்சமாகும். ஒழுக்கமான செயல்கள், நேர்மை, பொறுமை, தன்னிலை அறிதல், பிறர் விரோதமின்றி வாழ்வது போன்றவற்றை நன்னெறி வலியுறுத்துகிறது.
தர்மம்: தர்மம் அல்லது அறம், நன்னெறியின் அடிப்படை மூலமாகும். இது ஒவ்வொருவரும் பிறருக்கு இழிவில்லாமல், தமது கடமைகளைச் செய்ய வேண்டிய ஒழுக்கம் ஆகும்.
தன்னலம் இல்லாமல் பிறருக்கு உதவி: நன்னெறி பிறரின் நலனுக்காக செயல்படுதல், கருணை செலுத்துதல் போன்றவற்றை வலியுறுத்துகிறது.
நன்னெறி என்றால் ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து, சரியான வழியில் வாழ்ந்து, பிறருக்கு உதவி செய்வது மற்றும் தர்மம், அறம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு வாழ்வது என்பதாகும்.
Nanneri refers to good moral principles or virtuous conduct. It represents the ethical guidelines that one should follow to lead a righteous and moral life. In Tamil literature, numerous works emphasize Nanneri as a key to personal and social harmony.
Principles of Nanneri:
Good conduct: The foundation of Nanneri is behaving with integrity, patience, self-awareness, and living without causing harm to others.
Dharma (Righteousness): Dharma is central to Nanneri, guiding individuals to fulfill their duties without selfishness or harm to others.
Selflessness and helping others: Nanneri encourages helping others without selfish motives, promoting compassion and service to society.
In essence, Nanneri is about living a life grounded in ethics, helping others, and upholding righteousness and virtue.
நன்னெறி
கடவுள் வாழ்த்து
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.
நூல்
1 . உபசாரம் கருதாமல் உதவுக
என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும்
சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து?
2 . வன்சொல்லும் இனிமையாகும்
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.
3 . இனிய வழியறிந்து ஒருபொருளை அடைக.
தங்கட்கு உதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட்கு உரியவரால் தாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினால் செய்தனைய கொங்காய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.
4 . செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியதாம்
பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல்நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
5 . நட்பிற்பிரியலாகாது
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.
6 . தம்பதிகள் ஒற்றுமை
காதல் மனையாளும் காதலும் மாறின்றித்
தீதில் ஓருகருமம் செய்பவே - ஓதுகலை
எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்ல்தான்
கண்ணிரண்டும் ஒன்றையே காண்.
7 . கல்விச் செருக்குக் கூடாது
கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனையசெக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
8 . ஆறுவது சினம்
உள்ளம் கவர்ந்தெழுந்து ஓங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.
9 . துணையுடையார் வலிமையுடையார்
மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தான் மருவின் - பலியேல்
கடவுள் அவிர்சடைமேல் கட்செவி யஞ்சாதே
படர்சிறைய புள்ளரசைப் பார்த்து.
10. தன்னலம் கருதலாகாது
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.
11. அறிஞர் ஐம்புலன்கட்கு அடிமையாகார்
பொய்ப்புலன்கள் ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.
12. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.
13. அன்பொடு உதவுக
பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்றமுலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
14. செல்வச் செருக்குக் கூடாது
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
கலையா யாவர் செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண்டு ஊதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.
15. அன்பற்ற செல்வம் பயனற்றது
இல்லானுக்கு அன்பிங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் யிருந்துமவர்க் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழிலார்க்கு ஏது விளக்கு
16. மேலோர் இழிந்தோர்க்கும் உதவுவார்
தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.
17. வள்ளல்கள் வறுமையிலும் உதவிபுரிவார்கள்
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகைமறுப்பரோ - பைந்தொடிஇ
நின்று பயனுதவி ில்லா அரம்பையின் கீழ்க்
மன்றும் உதவும் கனி.
18. இன்சொல்லையே உலகம் விரும்பும்
இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.
19. நல்லார் வரவு இன்பம் பயக்கும்
நல்லோர் வரவால் நகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துங் கழற்கால் வர.
20. பெரியோர் பிறர் துன்பம் கண்டிரங்குவார்
பெரியவர்தம் நோய்போல் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவார் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கழலுமே கண்.
21. இலக்கணம் கல்லார் அறிவு கற்றார் அறிவுக்குமன் செல்லாது
எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை.
22. அறிவுடையோர் உயர்குலத்தவர் அறிவிலார் இழிகுலத்தவர்
ஆக்கும் அறிவான் அல்லது பிறப்பினால்
மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்க
பவர்ஆர் அரவின் பருமணிகண்டு என்றும்
கவரார் கடலின் கடு.
23. மனவுறுதி விடலாகாது
பகர்ச்சி மடவார் பயிலநொன்பு ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியுமே.
24. ஓருவர்தம் நற்குணத்தையே பேசுதல் வேண்டும்
உண்டு குணமிங்கு ஒருவர்க்கு எனினும்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்பும் கனி.
25. மூடர் நட்புக் கூடாது
கல்லா அறிவின் கயவர்பால் கற்றுணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையில் புகுமொண் பொருள்.
26. உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெறியவராவார்
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ விளம்பு.
27. அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்
கைம்மாறு கவாமல்கற் றறிந்தோர் மென்வருந்தித்
தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.
28. அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்
முனிவிலும் நல்குவர் முதறிஞர் உள்ளக்
கனிவிலும் நல்கார் கயவர் - நனிவிளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை.
29. ஆண்டவர் அடியார் எதற்கும் அஞ்சார்
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாக - நடுக்கமுறார்
பண்ணின் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான்.
30. இறப்புக்குமுன் அறம்செய்க
கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.
31. பிறர் துன்பம் தாங்குக
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவர் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று தாங்கும் கடிது.
32. பகுத்தறிவற்றவர் அறங்கள் பயன்படா
பன்னும் பனுவல் பயந்தோர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்
காழென்று உயர்திண்கதவுவலியுடைத்தோ
தாழென்று இலதாயின் தான்.
33. பெரியோர்க்குப் பாதுகாப்பு வேண்டுவதில்லை
எள்ளா திருப்ப இழிஞர் போற்றற்குரியர்
விள்ளா அறிஞரது வேண்டாரே தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுளம் அன்றிக்
கரைகாப்புளதோ கடல்.
34. அறிவுடையவர் பழிக்கு அஞ்சுவர்
அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பால்
செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சுமோ இருளைக்கண்டு.
35. மேன்மக்கள் அறிவுடையோரையே விரும்புவர்
கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும்
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப்பழம்.
36. தக்கார்கே உதவுக
தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்குதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புலலுக்கு யிரைப்ரோ போய்.
37. பெரியேர் முன் தன்னை புகழலாகாது
பெரியோர் முன் தன்னைப் புனைந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர் முலையோய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
38. நல்லார் நட்பு நன்மை பயக்கும்
நல்லார்செயுங் கோண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார்செயுங் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய்முற்றின் தினதீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய்முற்றின் என்னாகிப் போம்.
39. மூடர் நட்பு கேடு தரும்
கற்றறியார் செய்யுங் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் யள்ளதே - பொற்றொடிஇ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
40. புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார்
பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத்தாம் மற்றெவ்வார் - மின்னுமணி
பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணும் கண்ணொக்குமோ காண்.