Muruga Nayanar is a revered saint among the 63 Nayanmars, who were devoted followers of Lord Shiva and are celebrated in Tamil Shaivism. His life and devotion are noted for their deep commitment to Shiva and his significant contributions to the devotional literature of Tamil Nadu.
திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம் பெரும் திருத்தலம் ! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில், அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார் ! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார்.
எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார். முருகநாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார்.
திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம், கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.
இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம், பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார்.
இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருகநாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருகநாயனாரின் திருமடத்திற்கு திருஞான சம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள்.
அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர். இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார், இறைவன் அருளிய பேரொளியிலே திருஞான சம்பந்தர் புகுந்தபோது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.
குருபூஜை: முருக நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
முருகனுக்கு அடியேன்.
Key Aspects of Muruga Nayanar
Background and Early Life:
Origin: Muruga Nayanar was born into a Brahmin family in Tamil Nadu, where he grew up with a deep devotion to Lord Shiva. His early life was marked by a strong adherence to the principles of Shaivism and a deep respect for Shiva's devotees.
Devotional Practices: From a young age, Muruga Nayanar was known for his rigorous spiritual practices and dedication to Lord Shiva. He embraced a life of simplicity and devotion, often focusing on the worship and service of Shiva.
Life and Acts of Devotion:
Devotion to Shiva: Muruga Nayanar's devotion was exemplified by his steadfastness in worshiping Lord Shiva, even in the face of adversity. His life was characterized by deep piety, ritual observance, and an unwavering commitment to his spiritual path.
Service to Devotees: He was known for his generosity and service to fellow devotees of Shiva. Muruga Nayanar's acts of kindness and support to those who followed the same spiritual path were seen as an extension of his devotion to Shiva.
Significant Incidents:
Miraculous Devotion: One of the key stories associated with Muruga Nayanar is his devotion during a period of personal struggle. He is said to have performed extraordinary acts of devotion and penance, which led to miraculous occurrences that affirmed his deep connection with Lord Shiva.
Spiritual Legacy: His life and practices contributed to the broader understanding of Shaivism and the importance of devotion and service. Muruga Nayanar's story is often cited as an example of true devotion and the transformative power of faith.
Role in Shaivism:
Model of Devotion: Muruga Nayanar's life is considered a model of devotional practice and integrity. His unwavering commitment to Shiva and his compassionate actions towards other devotees are central themes in his story.
Influence on Devotional Literature: His life and teachings are featured in various devotional texts and hymns that celebrate the Nayanmars. These works highlight the virtues of devotion, humility, and selfless service, reinforcing the principles of Shaivism.
Iconography and Commemoration:
Depictions: In iconography, Muruga Nayanar is often depicted in a meditative pose or engaged in acts of worship, symbolizing his deep devotion and spiritual discipline.
Festivals and Rituals: Muruga Nayanar is honored during festivals dedicated to the Nayanmars, particularly in Tamil Nadu. These celebrations often include recitations of his hymns, devotional songs, and narratives of his life, serving to inspire and guide devotees.
Conclusion
Muruga Nayanar is a significant figure in Tamil Shaivism, known for his deep devotion to Lord Shiva and his exemplary life of faith and service. His story serves as an inspiration to followers of Shaivism, illustrating the power of devotion and the impact of sincere spiritual practice. Through his example, Muruga Nayanar continues to influence and inspire the Shaivite community, emphasizing the importance of unwavering commitment to the divine and compassionate service to others.