இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கஜயுக்த மூர்த்தி

Gajayukta Murthy (கஜயுக்த மூர்த்தி) refers to a form of Lord Shiva that is depicted with an elephant or having the elephant as a significant symbol. The term "Gaja" means "elephant" and "Yukta" means "associated with" or "having." In this form, Shiva is often shown with an elephant-headed feature or with elephants as his attendants, symbolizing specific attributes or roles.

கஜயுக்த மூர்த்தி

கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் ஏற்றவன். அவன் மேருமலையின் மேல் நான்முகனை நினைத்து கடும்தவம் மேற்க்கொண்டான். உடன் நான்முகன் தோன்றினான் கயாசுரன் யாராலும் அழிவில்லா நிலையும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது.

ஆனால் சிவனை மட்டும் எதிர்ப்பாயானால் நீ இறப்பாய் என்ற கடுமையான தண்டனையும் கிடைத்தது. அவன் தனதுவேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான். இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான ஐராவத்தின் வாலைப் பிடித்திழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான்.

பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அவரைத் தேடி காசிக்கு சென்றனர். அங்கே யொரு ஆலயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடன் வீற்றிருந்தார். வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான் முன் இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் வாங்கிய தயாசுரன் இங்கு வந்து கொண்டுள்ளான்.

அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும் என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதது சிவபெருமான் என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலயவாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடுரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார். அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீ சுவாலைகள் தெரித்தது.

கயாசுரனை தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச்சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார். அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்த மடைந்தார். கயாசுரனின் தொல்லை நீக்கப் பெற்றோர் நிம்மதியுடன் தங்களது இருப்பிடம் சென்றனர். கஜாசுரனுடன் சண்டையிட்டு வென்றதால் அவரது பெயர் அவரது பெயர் கஜயுக்த மூர்த்தி யாகும். அவரை தரிசிக்க திருவழுவுர் செல்ல வேண்டும்.

இங்கே தாரகாபுரத்து முனிவர்கள் யாகத்தில் தோன்றிய யானையைச் சிவனாரே அழிக்க ஏவினார். சிவபெருமான் இதனால் அணிமாசித்தி மூலம் யானையின் உடலில் சென்று, பின் உடலைக் கிழித்தப் படி வெளி வந்தார். எனவே அவரை கஜசம்கார மூர்த்தி என்றும் அழைப்போம். இங்குள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு அபிசேக ஆராதனை செய்ய சனீஸ்வர தோஷம் விலகும். ஏழரை சனியின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 12 அமாவாசை காலையில் விஸ்வ ரூப தரிசனம் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். அருகம்புல் அர்ச்சனையும், பாயாச நைவேத்தியமும் சோம வாரங்களில் கொடுக்க எதிரி தொல்லை தீரும். கஜசம்கார மூர்த்திக்கு எழுமிச்சை சாறு அபிசேகம் செய்தால் மரண பயம் தீரும்.



Concept and Representation:
Elephant Symbolism:

The elephant, as a symbol, represents wisdom, strength, and the removal of obstacles. In Hinduism, elephants are revered for their attributes and are associated with various deities, including Lord Ganesha. When associated with Shiva, the elephant may symbolize his power and his ability to overcome challenges.

Iconography:

Gajayukta Murthy may be depicted with an elephant-headed feature or alongside elephants. The depiction can vary, but it generally highlights the divine attributes associated with elephants, such as strength and wisdom.

Symbolism of Gajayukta Murthy:
Strength and Power:

The elephant is a symbol of immense strength and power. In this form, Shiva represents these qualities, emphasizing his ability to control and direct great forces within the universe.

Wisdom and Knowledge:

Elephants are also seen as symbols of wisdom and intelligence. Gajayukta Murthy can symbolize the divine wisdom that Shiva imparts and his role as the ultimate source of knowledge.

Removal of Obstacles:

Much like Lord Ganesha, who is known for removing obstacles, Gajayukta Murthy may represent Shiva’s power to overcome and eliminate challenges and obstacles in the lives of his devotees.

Significance in Hinduism:

Spiritual Strength:

Worshipping Gajayukta Murthy is believed to bestow spiritual strength and the ability to overcome difficulties. This form emphasizes the importance of harnessing inner strength and wisdom to navigate through life's challenges.

Divine Wisdom:

The association with the elephant highlights Shiva’s role as a source of divine wisdom. Devotees may seek blessings for enhanced understanding and clarity in their spiritual journey.

Overcoming Obstacles:

Gajayukta Murthy signifies the removal of obstacles and difficulties. This form of Shiva is worshipped to seek assistance in overcoming personal or spiritual challenges.

Worship and Depictions:
Temples and Icons:

Gajayukta Murthy may be depicted in various temples dedicated to Shiva, especially those that emphasize his attributes of strength and wisdom. Temples may feature idols or images of Shiva with elephants or with elephant-like features.

Devotional Practices:

Devotees may offer prayers, perform rituals, and make offerings to Gajayukta Murthy to seek blessings for overcoming obstacles and gaining strength and wisdom. Chanting specific mantras associated with Shiva and elephants can be part of devotional practices.

Conclusion:

Gajayukta Murthy represents Lord Shiva with an association to elephants, symbolizing strength, wisdom, and the ability to remove obstacles. This form highlights Shiva’s divine power and wisdom, making it a potent symbol for overcoming challenges and gaining spiritual insight. Worshipping Gajayukta Murthy helps devotees seek strength, wisdom, and assistance in navigating through life's obstacles.



Share



Was this helpful?