இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


புஜங்கத்ராச மூர்த்தி

Bhujangatraas Murthy (புஜங்கத்ராச மூர்த்தி) is a form of Lord Shiva associated with his ability to conquer fear, particularly the fear evoked by serpents (Bhujanga meaning "serpent" and Traas meaning "fear" or "terror"). This form depicts Shiva in a fearless state, either holding or subduing serpents, symbolizing his dominance over fear, death, and ignorance.

புஜங்கத்ராச மூர்த்தி

தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில் திருமாலும் அவ்வனம் சென்று முனிவர்களின் தவத்தையும், துணைவியரின் கற்பையும் சோதித்தனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகிணி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும் தங்களது தவ வலிமையால் அறிந்தனர்.

அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர். அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம் உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த முனிவர்கள் பெரும் கோபம் கொண்டனர்.

மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர். அந்த பாம்பு உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய நான்து பற்களில் கடும் விஷத்துடன் சிவபெருமானை அடைந்தது அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில் ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன் சேர்ந்து விடும்படி கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம்(கைவளை, காப்பு) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து கொண்டு காட்சிக் கொடுத்தார். தாருவனத்து முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)

புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம். இவரை வணங்கினால் ராகு தோஷம் நிவர்த்தியடையும். இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில் வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். இங்குள்ள சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம் விலகும்.


Features of Bhujangatraas Murthy:
Serpents as Symbolic Elements:

In this form, Lord Shiva is typically depicted with serpents around his body, such as coiled around his neck, arms, or legs. Despite the intimidating presence of these serpents, Shiva remains calm and composed, reflecting his mastery over fear and danger.

Fearlessness:

The name Bhujangatraas suggests that Shiva has transcended the fear associated with serpents, which are often seen as symbols of danger and death. Shiva’s fearlessness signifies his supreme power over even the most terrifying aspects of life.

Symbolism:

Conquering Fear: The form of Bhujangatraas Murthy represents the idea that one can overcome all fears—whether they be physical, emotional, or spiritual—by invoking Shiva’s power and protection.

Transcendence Over Death: Serpents, often associated with death and danger, are shown as subdued by Shiva, symbolizing his transcendence over death and his ability to protect his devotees from harm.

Spiritual Liberation: Serpents also symbolize Kundalini energy in Hindu philosophy. In Bhujangatraas Murthy, Shiva is depicted as the controller of this energy, leading to spiritual liberation and self-realization.

Significance in Hinduism:
Protection from Fear:

Bhujangatraas Murthy is worshipped for protection from fear, danger, and obstacles. Devotees pray to this form of Shiva to overcome fear in their personal lives, whether it be fear of death, physical threats, or emotional challenges.

Mastery Over Life’s Challenges:

By worshipping Bhujangatraas Murthy, devotees seek strength and courage to face life’s hardships, knowing that Shiva’s grace will help them rise above fear and insecurity.

Worship and Depictions:
Temples and Icons:

Bhujangatraas Murthy is depicted in some temples, especially those dedicated to Lord Shiva, with serpents prominently featured in his iconography. This form highlights Shiva’s fearlessness and his ability to dominate even the most fearsome creatures.
In artistic depictions, Shiva is often calm, in a meditative or standing posture, with serpents coiled around him, emphasizing his transcendence over fear and his control over dangerous forces.

Devotional Practices:

Devotees who struggle with fear or who are facing perilous situations in their lives may offer special prayers to Bhujangatraas Murthy for protection and courage. Reciting mantras dedicated to Lord Shiva, such as the Maha Mrityunjaya Mantra, is common in worship related to this form.

Conclusion:

Bhujangatraas Murthy symbolizes Lord Shiva’s absolute mastery over fear, particularly fear associated with serpents, danger, and death. This form reflects Shiva’s ability to grant fearlessness and courage to his devotees, guiding them through life’s challenges with his protective grace. Worship of Bhujangatraas Murthy helps individuals transcend fear and gain spiritual strength, emphasizing Shiva’s role as the ultimate protector and liberator from fear and death.



Share



Was this helpful?