Aiyadigal Kaadavar Kon Nayanar is one of the venerated 63 Nayanmars in Tamil Shaivism, celebrated for his deep devotion and significant contributions to the worship of Lord Shiva. His life story highlights his unwavering commitment to the Shaivite tradition.
உலகம் புகழ அரசோச்சிய பல்லவர்களின் தலைநகரமாகிய காஞ்சியில் பல்லவப் பேரரசருள் ஒருவராய் விளங்கியவர்தான் ஐயடிகள் காடவர்கோன் என்பவர். வெண்கொற்றக்குடை நிழலில் அமர்ந்து நீதிபிறழாமல் சைவ சமயத்தை வளர்த்து ஆட்சிபுரிந்து வந்தார். இவ்வேந்தர் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினாற்போல் பக்தியிலும், இறை வழிபாட்டிலும் மேம்பட்டு விளங்கினார். அரனாரின் திருவடித் தொண்டினைப் பேணி அரசாண்டார்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். நல்ல தமிழ்ப் புலமை மிக்க இப்பூபாலன் வெண்பா பாடும் திறம் பெற்றிருந்தார். வண்ணத் தமிழ் வெண்பாவால் வேணி பிரானை வழிபட்டார். ஐயடிகள் காடவர்கோன் வடமொழியையும், தென்மொழியையும், இயல், இசை, நாடகத்தையும் வளர்க்க அரும்பாடு பட்டார். சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் தோறும் சென்று திருசடை அண்ணலை வழிபட எண்ணினார்.
சிவ வழிபாட்டில் சித்தத்தைப் பதிய வைத்த மன்னர்க்கு அரசாட்சி ஒரு பெரும் பாரமாகத் தெரிந்தது. ஆட்சிப் பொறுப்பைத் தமது குமாரன் சிவ விஷ்ணு விடம் ஒப்புவித்தார். குமாரனுக்கு முடிசூட்டி மகிழ்ந்த மாமன்னன் ஒருநாள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிவயாத்திரையைத் தொடர்ந்தார். பற்பல தலங்களுக்குச் சென்று, எம்பெருமானை உள்ளங் குழைந்து உருகி துதித்து, ஆங்காங்கே தம் புலமையால் வெண்பா பல புனைந்தருளிய காடவர்கோன் நாயனார், கண்ணுதலார் திருவடி நீழலை அடைந்து இன்புற்றார்.
குருபூஜை: ஐயடிகள் காடவர்கோன் நாயனாரின் குருபூஜை ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்.
Key Aspects of Aiyadigal Kaadavar Kon Nayanar
Background and Early Life:
Origin: Aiyadigal Kaadavar Kon Nayanar was from Tamil Nadu. While specific details about his early life are not extensively documented, he is known for his deep religious dedication.
Social Status: He came from a modest background, and his life was characterized by devotion to Lord Shiva.
Life and Devotion:
Devotion to Shiva: Aiyadigal Kaadavar Kon Nayanar is renowned for his intense devotion to Lord Shiva. His life was marked by a strong commitment to Shiva worship and the Shaivite community.
Acts of Piety: His devotion was expressed through various forms of service and rituals. His life was dedicated to maintaining the sanctity of Shiva worship and supporting the Shaivite tradition.
Significant Incidents:
Incident of Devotional Service: Aiyadigal Kaadavar Kon Nayanar is remembered for his dedication to the services of Shiva temples and the performance of sacred rituals. His contributions were instrumental in upholding the traditions of Shaivism.
Divine Blessing: Lord Shiva is said to have blessed him with divine grace in recognition of his devotion and service. This blessing underscores the importance of his dedication to the Shaivite path.
Role in Shaivism:
Exemplar of Devotion and Service: Aiyadigal Kaadavar Kon Nayanar’s life serves as an example of true devotion and service. His story illustrates that genuine spirituality involves dedicated worship and active support for religious practices.
Symbol of Humility and Faith: His acts of piety and service embody the values of humility and unwavering faith. He represents how true spirituality is expressed through commitment and selfless actions.
Iconography and Commemoration:
Depictions: Aiyadigal Kaadavar Kon Nayanar is often depicted as a devotee engaged in acts of worship and service. His iconography reflects his life of devotion and dedication to Shiva.
Festivals and Rituals: He is honored during Nayanmar festivals and other Shaivite observances. His story continues to inspire devotees to embrace values of devotion, humility, and service in their spiritual practices.
Conclusion
Aiyadigal Kaadavar Kon Nayanar is celebrated for his profound devotion to Lord Shiva and his dedicated service to Shiva temples. His life exemplifies true spirituality through selfless acts, humility, and unwavering commitment. Through his story, Aiyadigal Kaadavar Kon Nayanar continues to inspire followers of Shaivism to lead lives of piety, service, and devotion to the divine.