இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அக்னி புராணம்

The Agni Purana (அக்னி புராணம்) is one of the eighteen Mahapuranas in Hinduism, named after Agni, the god of fire. This Purana is a comprehensive text that covers a wide range of topics including mythology, cosmology, rituals, law, medicine, and more. It serves as an important resource for understanding various aspects of Hindu culture, religion, and philosophy.


அக்னி புராணம்

1. தோற்றுவாய்:

18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் 15,000 ஸ்லோகங்கள் கொண்டது. நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் பகவான் ஸ்ரீஹரியைக் குறித்து ஓர் அற்புத யாகத்தைத் தொடங்கினர். அதைக் காண வந்த சூதமுனிவரைப் பார்த்து முனிவர்கள் பிரமம் எனப்படும் பரம்பொருளின் சொரூபத்தை விவரித்துக் கூறுமாறு வேண்ட, அவரும் விளக்கிக் கூற ஆரம்பித்தார்.

மகாவிஷ்ணுவே பிரமம், பரம்பொருள் ஆவார். இந்த அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தவர் அவரே. தன்னையே ஒருவன் பிரமமாக உணரும் போது பிரம்ம சொரூபத்தை அடைகிறான். இந்த ஞானம் பெற இரண்டு வழிகள் உள்ளன.

1) யாகம் முதலனா கர்மாக்களைக் கடைபிடிப்பது.

2) கேள்வி ஞானம். அதாவது, பரம்பொருளைப் பற்றிச் சாஸ்திரங்கள் மூலம் அறிந்து, பகவானின் அவதார ரகசியங்களைக் கேட்டும் அறிதல் என்றார். அக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் அக்கினி புராணம் முதலில் பரந்தாமன் ஹரி சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றிக் கூறலானார். அவை மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, கிருஷ்ண, புத்த, கல்கி அவதாரங்கள். முதல் ஐந்து பற்றி பல புராணங்களில் (குறிப்பாக விஷ்ணு, பாகவதம், மச்ச, கூர்ம, வராக, வாமன புராணங்களில் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளன.

நரசிம்மாவதாரம் பிரகலாதன் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ராமாவதாரம் இராமாயணத்திலும், கிருஷ்ணாவதாரம் பாகவதத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கல்கி புராணம் தனியாக விவரிக்கப்படுகிறது. பரசுராம அவதாரமும் வேறொரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. புத்தர் அவதாரம் கவுதமபுத்தர் என்ற பவுத்த மத நிறுவனருடையதே.
கல்கி அவதாரம் இனிவர உள்ளது. ஆனால், அது பற்றியும் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.எனவே, கல்கி புராணம் என்பதும் 18 புராணங்களில் ஒன்றாகப் பரிணமிக்கின்றது.

2. கிருஷ்ணாவதாரம் - குறிப்புகள்

பாகவதம் தசம ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணனைப் பற்றிய சில விவரங்கள் வெவ்வேறு நிலையில் விஷ்ணு புராணம், நாரத புராணம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளன. அக்னி புராணத்தில் அவை யாவும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணன் மனைவியர்களில் எழுவர்பட்ட மகிஷியாவர். அவர்களுள் சத்தியபாமைக்காக தேவலோகத்திலிருந்து பாரிஜாத மரம் கொண்டு வந்தது குருகுலவாசம் முடிந்து குரு தக்ஷிணையாக அவரது இறந்த மகனை உயிருடன் கொண்டுவந்தது, ருக்மிணியின் குமாரம் பிரத்தியுத்மன் அசுரனால் தூக்கிச் செல்லப்படல், அசுரனைக் கொன்று விட்டு அவன் மாயாவதியுடன் துவாரகை திரும்புதல், மற்றும் உஷை, அநிருத்தன் திருமணம், பிரம்பனையும், துவிவிதன் என்ற வானரனையும் பலராமன் வதம் செய்தது, பாண்டவர்களுக்குப் பல நேரங்களில் பலவிதமாக உதவி அருள் செய்தது, பாரதப் போர், அசுவத்தாமனால் உப பாண்டவர்கள் கொல்லப்படுதல், உத்தரை கர்ப்பம் அழியாமல் உத்தரையைக் காப்பாற்றியது. கடைசியில் அவர் தன் சோதிக்குத் திரும்பியது முதலியவை சுருக்கமாக கூறப்பட்டுள்ளன.

3. சுவயம்பு மனுவின் சந்ததி

பகவான் விஷ்ணு தன் உந்திக் கொடி கமலத்தில் பிரமனைத் தோற்றுவித்து அவர் மூலம் அண்ட சராசரங்களை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரம்மன் தம்முடைய தேகத்தை ஆண், பெண் என இரு கூறாக்கி மக்களை வளர்க்க முற்பட்டார். சுவயம்பு என்பவனாகிய முதல் மனு சதரூபை என்ற பெண்ணை மணந்து அவளிடம் பிரிய விரதன், உத்தானபாதன் ஆகிய இரண்டு பிள்ளைகளையும், உத்தானபாதன் சுருதி என்ற மனைவியிடம் உத்தமன் என்ற பிள்ளையையும், சுநீதி என்பவளிடம் துருவன் என்ற பிள்ளையையும் பெற்றான். துருவன் வரலாறு-(விஷ்ணு புராணத்தில் விரிவாக உள்ளது காண்க). இதற்குப் பிறகு இவர்கள் வம்சத்தில் பலர் தோன்றி வளர்ந்து மக்கள் பெருக்கத்தை உண்டாக்கியது. இவ்வம்சத்தில் வந்த பிரசேதசுர்கள் மரங்களைத் தீயிட்டு அழிக்க, சந்திரன் மகள் மாரீஷையை மணந்து மரங்களை வெட்டாமல் தடுத்தான். மாரீஷையிடம் தக்ஷன் பிறந்தான்.

தக்ஷனிடம் பிறந்தவர்களிலே சசிதேவியைப் பரமசிவனுக்கும், இருபத்தேழு விண்மீன்கள் அவன் மகள்களாகப் பிறக்க-அவர்களைச் சந்திரனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியப முனிவருக்கும் மணம் செய்து வைத்தான்.

4. காசியபருடைய சந்ததி

சாக்ஷúஷ மன்வந்தரத்தில் காசியபருக்கு அதிதியிடம் தேவர்களும், வைவசுவத மன்வந்தரத்தில் பன்னிரண்டு ஆதித்தர்களும் பிறந்தனர். காசியபருக்கு இரணியாட்சன், இரணியகசிபு என்பவர்களும், மற்றும் அநேக புத்திரர்களும் பிறந்தனர். காசியபரின் மனைவி சுரசை என்பவளுக்கு ஆயிரம் பாம்புகள் தோன்றின. கத்துரு என்பவளுக்கும் ஆயிரம் பாம்புகள் தோன்றின. குரோதை என்பவளுக்குக் கொம்புள்ள மிருகங்கள், தறை என்பவளுக்கு நீர் வாழ்வன, பறவைகள், சுரபிக்குப் பசுக்கள், எருமைகள், இலை என்பவளுக்குப் புல் பூண்டுகள், கவதை என்பவளுக்கு யக்ஷர்கள், ராக்ஷசர்கள், முனி என்பவளுக்கு அப்சரசுகள், அரிஷ்டை என்பவளுக்குக் கந்தர்வர்கள் ஆகியோர் பிறந்தனர். தாமரை காசியபரிடம் ஆறு பிள்ளைகளும் மற்றும் காகங்களும், குதிரைகளும், ஒட்டகங்களும் பிறந்தன. வினதை என்பவளுக்கு அருணனும், கருடனும் பிறந்தனர். பின் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் பல குழந்தைகள் பிறந்திட காசியபரின் சந்ததி வளர்ந்தது. மருத்துக்களும் இந்த சந்ததியைச் சேர்ந்தவர்களே.

5. பிரமனிடமிருந்து தோன்றிய படைப்புக்கள்

பிராகிருத சிருஷ்டியில், பிரமனிடமிருந்து தோன்றிய மகத்

1) தன் மாத்திரைகள் என்ற பூதங்கள்.
2) வைகாசிகள் எனப்படும் இந்திரியங்கள். இந்த மூன்றுக்குப் பின் முக்கியமாக சிருஷ்டிகள்.
3) திர்யச் சுரோதம் அசையாப் பொருள்கள்.
4) பறவை, மிருகங்கள்.
5) தேவர்கள் முதலியோர், தேவசர்க்கம்.
6) அரோவச் சுரோதசுக்கள்.
7) தமஸ், சத்வகுணங்கள் கூடி உண்டான அனுக்கிரங்கள்.
8) 4 முதல் 8 வரை உள்ள ஐந்தும் வைகிருத சிருஷ்டியாகும்.

பிரமனுடைய படைப்புகளில் கவுமாரம் என்பது கடைசி ஒன்பதாவது சிருஷ்டியாகும். பிருகு, க்யாதி என்பவளையும், மரீசி, சம்பூதி என்பவளையும், அத்திரி அனுசூயையும், வசிஷ்டர் ஊர்ஜை என்பவளையும், அக்கினியின் பத்தினி சுவாஹை, அதர்மனின் மனைவி அம்சை, இத்தகைய சேர்க்கையால் மக்கள் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற்றன. பிரமன் கண்களில் நீர் விட ருத்திரன் தோன்றினான்.

6. தெய்வ ஆராதனை முறை பலன்கள்

வைணவத்தில் முதலில் விஷ்வக் சேனரைத் துதிக்க வேண்டும். விஷ்ணு ஆராதனையில் முதலில் அச்சுதனையும், அடுத்து ததா, விதாதா, கங்கா முதல் ஞானம், கர்மயோகம் ஆகியவற்றிற்கு வாழ்த்துக் கூற வேண்டும். பின்னர் சந்தோஷம், சத்தியம் முதல் வசுதேவன் மற்றவர்களையும் வாழ்த்துக் கூறி வணங்க வேண்டும். அடுத்து விஷ்ணுவை முடிமுதல் அடிவரை, மற்றும் பஞ்சாயுதம் ஆகியவற்றையும் போற்றிக் கொண்டாட வேண்டும். பிறகு திருமேனியில் உள்ள அலங்காரப் பொருள்கள் மற்றும் தேவதைகளை வணங்கித் துதிக்க வேண்டும். அடுத்து ஈசானன், அவரது ஆயுதங்கள், ரிஷபம் ஆகியவற்றை இந்த வட்டத்தில் துதிக்க வேண்டும். சிவனை ஆராதிக்கையில் நந்தி முதல் பலவித சக்திகள், தர்மம் மற்ற தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அடுத்து வாமை முதல் சிவை வரை உள்ள அம்பிகைகளை முறைப்படி துதிக்க வேண்டும். சூரிய ஆராதனையில் முதலில் திண்டி, உச்சைசிரவஸ் ஆகியோரைப் பின்னர் தீப்தை முதல் பிமலை ஆகியோருக்கு நமஸ்காரம் சொல்ல வேண்டும். பிறகு மந்திரம் கூறி சூரியனின் ஆசனம், கிரணம் போன்றவற்றை முறையே வணங்க வேண்டும்.

மந்திரங்களால் ஆராதித்தல்

தெய்வ ஆராதனையின் போது முதலில் புறத்தூய்மை மிகமிக அவசியம். மந்திரங்களைச் சொல்லும் போதும் ஜபிக்கும் போதும் ஓம் சேர்த்தே சொல்ல வேண்டும். எள்ளால், நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரித்து நீராட வேண்டும். தியானம், ஜபம் ஆகியவற்றிற்கு முன் ஆசமனம், பிராணாயாமம் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். கரநியாசம், அங்கநியாச முறைகளால் பகவானை வணங்கி, பின்னர் முத்திரைகளைக் காட்டி உபசாரங்கள் செய்ய வேண்டும். இதுவரை கூறப்பட்டவை விஷ்ணுவை மந்திரங்களால் ஆராதிக்கும் முறை.

ஹோமம் செய்தல்

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அளவுகளில் ஓமகண்டம் தயார் செய்து, கைப்பிடி நீளமாகவும் கரண்டிப் பகுதி குழிவாகவும் உள்ள மரக்கரண்டி கொண்டு அக்னியில் நெய்யை ஓமம் செய்ய வேண்டும். ஹோமம் தொடங்கும் முன் குண்டத்தினுள்ள நெருப்புக்கு அக்கினியின் சாந்நித்தியம் ஏற்படச் செய்ய வேண்டும். ஹரியைத் தியானித்து சமித்துக்களை எடுத்து அக்கினியில் சமர்ப்பிக்க வேண்டும். குண்டத்துக்குக் கிழக்கே மூன்று தர்ப்பங்களை வைக்க வேண்டும். ஓமத்துக்கான மரக்கரண்டி, நெய், அன்னம், தர்ப்பை ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். கும்பத்தில் நீரை மந்திரித்து அப்புனித நீரால் எல்லாவற்றையும் புரோக்ஷிக்க வேண்டும். அக்கினி குண்டத்தின் முன் நெய்யை வைக்கவும். தர்ப்பையால் நெய், ஹோமக் கரண்டி ஆகியவற்றைச் சுத்திகரித்த பின்னர் ஹோமத்தைத் தொடங்க வேண்டும். ஹோமம் செய்யத் தகுதி பெற்றவனே அதைச் செய்ய வேண்டும். ஹோமம் முடித்து பகவான் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும். விஷ்ணு பூஜைக்கு அறுபத்திநான்கு உபசாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

7. மனிதனுக்கான கர்மாக்கள்

ஒவ்வொருவனுக்கும் விதிக்கப்பட்ட கர்மாக்கள் நாற்பத்தெட்டு. அவை முக்திக்குச் சாதகமானவை. திருமணம் முடிந்ததும் கர்ப்பாதானம், பும்சவனம், சீமந்தம்; குழந்தை பிறந்ததும் ஜாதகர்மம், நாமகரணம், அன்னப் பிரசானம்; குடுமி வைத்து உபநயனம் ஆகியவை.

பிரம்மச்சாரி ஏழு வகை விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும். வைஷ்ணவி, பரிதி, பௌதிகி, ஸ்நௌதிகி முடித்து கோதானம். கிரகஸ்தாஸ்ரமவர்க்கு இவற்றுடன் யாக, யஜ்ஞமும் சேர்ந்து ஏழு ஆகும். ஆவணி, மார்கழி, சித்திரை, ஐப்பசி மாதங்களில் செய்யப்படும் பார்வண சிராத்தங்கள் எட்டு. ஆதானம், அக்னிஹோத்திரம், தசம், பவுர்ணமாசகம், சாதுர்மாஸ்யம், பசுவந்தனம், சவுத்திராபணி ஆகிய ஏழும் ஹரி யக்ஞங்கள். அக்குனிஷ்தோமம், அத்யக்கினி, ஸ்தோமம், உக்தம், சோடசம், வாஜ்பேயகம், அதிராத்திரம், அப்தயாமம் ஏழும் சோமஸம்ஸ்தம் ஆகும். மேலும் ஹிரண்யநங்ரி, ஹிரண்யம் போன்று ஆயிரக்கணக்கில் சொல்லப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறந்து விளங்குவது அசுவமேத யாகம். உயிர்களிடம் இரக்கம், பிழை பொறுத்தல், எளிமை, சுத்தம், சுறுசுறுப்பு, பிறர் நலம் பேணுதல், தாராளம், பொருளில் பற்றற்று இருத்தல் எனச் சீவம் எட்டு வகை ஆகும். கர்மாக்களைச் செய்து, பகவானை அர்ச்சித்து, பகவான் நாமத்தை உச்சரிப்பதால் ஒருவன் நற்கதி அடைகிறான்.

8. ஆலயம் எழுப்புதல்

இறைவனுக்கு ஆலயம் எழுப்புபவன் முற்பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுகிறான். ஆலயம் எழுப்ப நினைத்தாலே பாவ விமோசனம் உண்டு. கிருஷ்ணனுக்குக் கோயில் கட்டுபவரை ஆதரிப்பவர்கள் பாப விமோசனம் பெற்று அச்சுதன் லோகம் அடைவர். ஹரிக்கு ஆலயம் எழுப்புவதனால் தன் வம்சத்தில் தனக்கு முன் தோன்றியவர்கள், பின் தோன்றுபவர்கள் ஆகிய அனைவரும் விஷ்ணுலோகம் அடைவர். ஆலயம் எழுப்புவதனால் பிரம்மஹத்தி பாவம் விலகும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். ஓர் ஆலயம் எழுப்பினால் சொர்க்கம், மூன்று எழுப்பினால் பிரம்ம லோகம், ஐந்துக்கு கைலாயம், எட்டு எழுப்பினால் வைகுந்தம் அடைவர். சகல சவுபாக்கியங்களுடன் வாழ்ந்து பிறவாப் பேரின்பம் அடைவர். ஏழை (அ) பணக்காரன், சிறிய (அ) பெரிய கோயில் கட்டுவோர்க்கும் ஒரே விதமான பலன்கள் கிட்டும். திருமாலுக்கு ஆலயம் எழுப்புவோரின் குடும்பம் வைகுந்தத்தில் ஆனந்தமாக இருக்கும். தான் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியைக் கொண்டாவது கிருஷ்ணன் கோயில் எழுப்ப வேண்டும். செல்வத்தை ஆலயம் எழுப்புவதில் செலவு செய்பவன் வைகுந்தம் அடைகிறான். அவனுக்கு மறுபிறவி இல்லை.

9. இறைவன் திருமேனி பிரதிஷ்டை

ஆலய நிர்மானம் முடிந்த பிறகு அதில் இறைவன் திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். மண், மரம், செங்கல், கருங்கல், ஐம்பொன், தங்கம் ஆகியவற்றினால் பிரதிமைகள் செய்யப்படுகின்றன.

யமனுடைய ஆணை

இறைவனுக்கு ஆலயம் எழுப்பியவனை, திருமேனியைச் செய்து அளிப்பவனை நரகத்துக்கு அழைத்து வரக்கூடாது. இறைவனைச் சிந்திப்பவர்கள், அவர் புகழ்பாடுபவர்களை, நாள்தோறும் அர்ச்சித்து வழிபடுபவர்களையும் தூரத்தில் காணும் போதே நெருங்காது விலகிவிட வேண்டும். ஆலயம் எழுப்பியவனது வம்சனத்தினரைக் கூட நெருங்கக் கூடாது. மத்திய தேசம், அதைச் சார்ந்த பிரதேசங்களில் உள்ள பிராம்மணர் ஆலய கும்பாபிஷேகம் ஆகிய காரியங்களைச் செய்யலாம். அவர்கள் தமது ஞானத்தால் பிரம்மனாகவே ஆகின்றனர். எனவே, அவர்களையே ஆச்சாரியனாகக் கொள்ள வேண்டும். பிரதிஷ்டை செய்யப்படும் இறைவன் திருமுகம் நகரத்தை நோக்கி இருக்க வேண்டும்.

விஷ்ணுவுக்கு எந்த இடத்திலும் ஆலயம் அமைக்கலாம். ஆலயம் எழுப்பவேண்டிய நிலத்தைச் சுத்தமாக்கி சமன்படுத்த வேண்டும். பூத பலிகர்மா செய்ய வேண்டும். தயிர், மாவு, கோதுமை, பொரி, உளுந்து, ஆகியவற்றை நிவேதனம் செய்து அஷ்டாக்ஷரி மந்தரத்துடன் பிரார்த்தனை செய்து நிலத்தை உழ வேண்டும். வாஸ்து பூஜை, மற்ற தேவதா பூஜைகள் செய்ய வேண்டும். புரோகிதருக்குப் பசு, ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றைத் தானம் செய்ய வேண்டும். வைஷ்ணவர்கள், சிற்பிகளைக் கவுரவிக்க வேண்டும்.

ஆலய நிர்மாணத்திற்கான செங்கற்கள் 12 விரல்கடை நீளமும், 4 விரற்கடை அகலமும் இருக்க வேண்டும். பொருள்களை மந்திரங்கள் கூறி தூய்மைப்படுத்தி உபயோகிக்க வேண்டும். ஹோமம் வளர்த்து முறைப்படி பூஜை செய்து, பிராயச் சித்தம் முதலான ஹோமங்களைச் செய்து முடிக்க வேண்டும். பூமாதேவி ஆராதனம், கடைக்கால் போட்ட பின் புரோகிதருக்கு தானங்கள் அளிக்க வேண்டும். வாஸ்து யஜ்ஞம் மறுபடியும் ஒருமுறை நடத்த வேண்டும். ஆலயத்தில் மண்டபங்கள், பிராகாரம், மதிற்சுவர் ஆகியவை முறைப்படி அமைக்கப்பட வேண்டும். இறைவன் திருஉருவங்கள் வடிவமைக்க மண், கம்பளி, இரும்பு, ரத்தினங்கள், கல், சந்தனம், மலர்கள் ஆகியவற்றில் ஒன்றை உபயோகிக்கலாம். மலைகளிலிருந்து பாறை கொண்டு வரப்பட வேண்டும். கிடைக்காவிடில் சிம்ம வித்தை என்ற கர்மாவை உரிய மந்திரங்களுடன் செய்யப்பட்டு, அகப்படும் பாறையைக் கொண்டு வர வேண்டும்.

ஒரு சிறு பந்தலில் பாறையை வைத்து பகவானை வேண்டிக் கொண்டு வேலையைத் தொடங்க வேண்டும். வேலை செய்யாத நேரங்களில் பாறைகளைத் துணியால் மூடிவைத்திருக்க வேண்டும்.

ஹயக்ரீவர் இறைவன் திருமேனியைப் பாறையிலே செதுக்குவதற்கான அளவு விவரங்களைக் கூறியுள்ளார். தேவியின் திருஉருவத்தைச் செதுக்குவதற்கான அளவுகளையும் கூறுகிறார். சாலக்கிராமங்கள் பற்றி விவரிக்கிறார். ஸ்ரீமந்நரநாராயணனின் திருநாமங்களில் சிலவற்றின் பெயரில் பலவகையாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு வகைக் கல்லுக்கும் நிறம், தோற்றம், அளவு, குறிகள் முதலியன தனித்தனியே சொல்லப்பட்டுள்ளன.

10. கடவுளர் திருமேனி அமைத்தல்

1. மச்சாவதாரம் : மீன் போன்ற உடலமைப்பு.

2. கூர்மாவதாரம் : ஆமை வடிவம்.

3 அ. வராகம் : பன்றியின் முகம், மனித உடல்; வலது புறத்தில் கதாயுதம் மற்ற ஆயுதங்கள்; இடப்புறம் லக்ஷ்மி, சங்கம், தாமரைமலர், லக்ஷ்மி முழங்கையில் அமர்ந்திருக்க வேண்டும். பூமியும் அதனைத் தாங்கும் அனந்தாழ்வாரும் மூலத்தருகே இருக்க வேண்டும்.

ஆ. வராக உருவத்தை அமைப்பதில் இரண்டாம் வகை : நான்கு கைகளில் ஒன்றில் வாசுகியைப் பற்றியிருத்தல்; இடக்கையினால் பூமியைத் தூக்கி இருத்தல்; காலடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல்; வலப்புறம் சக்கரம், வாள், தண்டம், அங்குசம், இடப்புறம் சிங்கம், தாமரை மலர்; கதை, பாசம் வலப்புறத்தில் கருடனது தோற்றம்; விச்வரூபத்துக்கு நான்கு முகங்கள் இருபது கைகள் அமைக்கப்பட வேண்டும்.

4. நரசிம்மம் : மனித உடல், சிங்க சிரம்; நான்கு கைகள்-இரண்டில் கதையும், சக்ராயுதமும்; மற்ற இரண்டும் அசுரன் உடலைக் கிழித்துக் கழுத்தில் மாலையாக அணிவது போல் இருத்தல். மடியில் அசுரனின் உயிரற்ற உடல் கிடத்தப் பெற்றிருக்க வேண்டும்.

5. வாமனன் : குள்ளமான தோற்றம். ஒரு கையில் தண்டம், மற்றொன்றில் குடை; நான்கு கைகளுடன் கூடியதாகவும் செய்வதுண்டு.

6. பரசுராமர் : கைகளில் கத்தி, கோடரி, வில், அம்புகளுடன்

7. ஸ்ரீராமர் : இருகைகளில் வில் அம்பு. நான்கு கைகளானால் மற்ற இரண்டில் கத்தியும், சங்கும் கொண்டிருக்க வேண்டும்.

8. பலராமர் : இரண்டு (அ) நான்கு கைகள். இரண்டானால் ஒன்றில் கதை, மற்றொன்றில் கலப்பை. நான்கு கைகளானால் இடதுபுறம் மேல்கையில் கலப்பை, கீழ் சங்கும், வலப்புறம் மேற்கையில் முசலம், கீழே சக்கரம்.

9. கிருஷ்ண பகவான் : இரண்டு கைகள், அல்லது ஒன்றில் புல்லாங்குழல் கொண்டை, அதில் மயிற்பீலி, மிக அழகிய வடிவம்.

10. புத்தர் : எளிய அழகிய உருவம், சாந்தமுகம். இடுப்பில் சிறுதுணி. மேல்நோக்கிய இதழ்கள் கொண்ட தாமரையில் அமர்ந்திருத்தல், நீண்ட காதுகள், நிர்மல இதயம், முகம்.

11. கல்கி : கையில் வில்லும், அம்புராத்துணியைத் தாங்குதல். அந்தணர் கோலம்-நான்கு கைகளில் கத்தி, சக்கரம், ஈட்டி, அம்பு-குதிரை மீது இருத்தல்-சங்கத்தால் போர் முழக்கம் செய்யும் அந்தணர்.

12 அ. விஷ்ணு : வலப்புறம் மேல் கையில் கதையும், கீழ்க்கையில் சங்கும், இடப்புறம் மேல்கையில் சக்கரம், கீழ்க்கை அபயஹஸ்தம். இருபுறங்களில் பிரம்மனும் ஈசனும் இருக்கலாம்.

ஆ. எட்டுக் கைகளுடன் கருடன் மீது ஆரோகணம். வலப்புறம் மூன்று கைகளில் கத்தி, கதை, அம்பு. இடப்புறம் மூன்று கைகளில் வில், கடகம், கமலம் ஆகியவை. மற்ற இருகரங்கள் அபயம் அளித்தல், அருளுதல் நிலை.

13. பிரத்யும்னன் : வலப்புறக் கைகளில் வஜ்ராயுதம். சங்கும், இடப்புறக் கைகளில் வில்லும், அம்பும்-நான்கு கைகளில் கதையும் கூட இருக்கும் (பிரத்யும்னன்-கிருஷ்ணன், ருக்மிணி மகன்)

14. அநிருத்தன் : (கிருஷ்ணனின் பேரன்) தோற்றம் நாராயணன் போல். நான்கு கைகள்.

15. பிரம்மன் : நான்கு கைகள், நான்கு முகம், நான்கு திக்குகளை நோக்கியவாறு அன்ன வாகனத்தில் அமர்ந்திருத்தல்; வலப்புறக் கைகளில் ஜபமாலை, ஹோமக் கரண்டி; இடக்கைகளில் கமண்டலம், சிறுநெய் பாத்திரம்-வலப்பக்கம். சரசுவதியும், இடப்பக்கம் சாவித்திரியும் அமைந்திட வேண்டும்.

16. பள்ளிகொண்ட பரந்தாமன் : பாற்கடலில் பாம்பணை மீது சயனித்திருத்தல், முக்காலங்களைக் குறிக்கும் மூன்று கண்கள். நாபியில் இருந்து நீண்ட காம்பு. தாமரையில் நான்கு முகங்களொடு பிரமன், லக்ஷ்மி அருகில் பாதங்களை வருடிக்கொண்டு இருத்தல், விமலை தலைப்பக்கம் சாமரை வீசுவதாக அமைத்தல்.

17. ருத்திரகேசவன் என்ற விஷ்ணு : வலப்பக்கம் மகாதேவர் உருவம். இடப்பக்கம் விஷ்ணுவின் உருவம். வலப்புறம் இரு கைகளில் சூலம், மண்டை ஓடு, இடப்பக்கம் கரங்களில் கதை, சக்கரம். வலப்புறத்தில் கவுரி, இடப்புறம் லக்ஷ்மி இருக்க வேண்டும்.

18. ஹயக்ரீவர் : நான்கு கைகளில் சங்கும், கதை, தாமரைமலர், வேதங்கள், இடது பாதம் சர்ப்பராஜன் அனந்தன் மீதும்; வலது பாதம் ஆமையின் மீதும் இருக்க வேண்டும்.

19. தத்தாத்ரேயர் : இருகரங்களோடு, இடது மடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல்.

20. விஷ்வக்சேனர் : நான்கு கைகளில் சக்கரம், கதை, கலப்பை, சங்கம்.

21. சண்டிகை : இருபது கரங்கள்; வலக்கரங்களில்-சூலம், கத்தி, ஈட்டி, சக்கரம், பரசம், ஜேதம், அபேதம், அபோதம், அபயம், டமரு, சக்திகம். இடப்பக்கம் கைகளில்-கடகம், கோடரி, அங்குசம், வில், மணி, கொடி, கதை, தண்டம், கண்ணாடி, முத்தாரம் ஆகியவை. பாதத்தின் அடியில் தலை துண்டிக்கப்பட்ட எருமை வடிவம்; துண்டிக்கப்பட்ட கழுத்திலிருந்து அசுரன் மிகுந்த கோபத்தோடு வாளை உருவிக்கொண்டு சீறிப் பாய்வதாக இருக்க வேண்டும். நின்று கொண்டிருக்கும் தேவி வலது பாதத்தைச் சிங்க வாகனத்தின் மீதும் இடது பாதத்தை அசுரன் தோளின் மீதும் வைத்து அழுத்திவளாய், அவளது கரத்திலே நாக பாசத்தை இறுக்கும் பாவனையாக அமைய வேண்டும். அசுரன் புஜத்தைச் சிங்கம் பாய்ந்த நிலையில் கவ்விக் கொண்டிருக்க வேண்டும். சண்டிகை உருவுக்கு மூன்று கண்கள் இருக்க வேண்டும்.

சண்டிகையின் உருவங்கள் நவதத்துவங்களை விளக்கும் வகையில் ஒன்பது வகையில் உள்ளன. அவை ருத்திரச்சண்டி, பிரசண்டி, சண்டோக்ரை, சண்டநாயகி, சண்டி, சண்டவதி, சண்டரூபி, ஆதி சண்டிகை, உக்கிர சண்டி. இவை அனைத்தும் சிங்க வாகனத்தின் மீது 16 கரங்களுடன் வடிவமைக்கப்பட வேண்டும்.

22. துர்க்கை : துர்க்கையின் ஒன்பது தோற்றங்களும் நின்ற நிலையில் வலது முழங்கால் முன்புறம் எடுத்து வைக்கப்பட்டதாய், இடதுகால் பின்னால் இருப்பதாக அமைக்கப்பட வேண்டும்.

23. சரசுவதி : சரசுவதியின் கைகளில் புத்தகம், ஜபமாலை, வீணை இருத்தல் வேண்டும்.

24. கங்காதேவி : கையில் குடம், மற்றொரு கையில் தாமரை. மகரம் என்னும் நீர் வாழினம் அவளது வாகனம்.

25. யமுனை : குடம் ஏறுநுதல், ஆமை, முதுகில் ஆரோகணம்.

26. பிராம்மி : குண்டம், அட்சய பாத்திரம், ஜபமாலை, ஓமக்கரண்டி, நான்கு கைகள், அன்ன வாகனம்.

27. சங்கரி : ஒரு கையில் வில் அம்பு; மற்றொன்றில் சக்கரம்; காளை வாகனம்.

28. கவுமாரி : இரண்டு கைகள். ஒன்றில் ஈட்டி. மயில் வாகனம்.

29. வராகி : வலப்பக்கம் தண்டம், கத்தி, கதை, சங்கும்; இடப்புறம் கைகளில் சக்கரம், பூமி, தாமரை மலர் ஆகியவை. எருமை வாகனம்.

30. இந்திராணி : ஆயிரம் கண்கள். இடது கையில் வஜ்ராயுதம்.சாமுண்டி-மனித உடல் மீது அழுத்திய பாதம், மூன்று கண்கள், மெலிந்த உருவம்; கோபத்தினால் மயிர்கள் குத்திட்டிருத்தல். இடுப்பில் புலித்தோல்; இடது கைகளில் ஈட்டி, மண்டை ஓடு, சூலம். வலப்பக்கம் இரு கைகளில் சிறு வாள்கள்.

31. விநாயகர் : மனித உடல், யானை, தலை, பெரிய தும்பிக்கை, உருண்டை வயிறு, மார்பில் பூணூல் உபவீத நிலை.

32. முருகன் : இளைய தோற்றம். அழகிய உருவம். இரண்டு கைகள். மயில் வாகனம்-இரு பக்கம் இரண்டு தேவியர்-ஒன்று (அ) ஆறு முகங்கள். பன்னிரண்டு கரங்கள். கிராமம் (அ) வனத்தில் திருக்கோயில் அமைந்தால் இருகரங்கள், வலது கையில் சக்திஆயுதம், இடது கையில் (சேவல்).

33. ருத்திர சண்டிகை : எட்டுக் கரங்கள், வில், கேதம், குக்குடக்கொடி, மண்டை ஓடு, கட்டாரி, சூலம், பாசக்கயிறு ஆகியவை கரங்களில். இடதுபுறம் ஒரு கை அபயஹஸ்தம். இடுப்பில் யானைத்தோல்-மண்டை ஓடு, மேகலையாக சிறு சிறு முரசுகள்-கால்கள் நாட்டிய நிலை. ருத்திர சாமுண்டியும் அவளே.

அ. மகாலக்ஷ்மி : உட்கார்ந்த நிலையில் நான்கு முகங்களான மகாலக்ஷ்மி.

ஆ. சித்த சாமுண்டி : மூன்று கண்கள், பத்துக் கரங்கள் இருந்தால் சித்த சாமுண்டி. தோற்றம் : சிவந்த நிறம், கைகளில் பாசம், அங்குசம்.

34. பைரவி : பன்னிரண்டு கைகள். க்ஷõமை தேவியின் உருவம், வயது முதிர்ந்த நிலை, இருகரங்கள், அகன்றவாய்-சுற்றிலும் நரிகள்.

35. க்ஷமதாரி : முழந்தாளிட்ட நிலை-நீண்ட பற்கள்.

36. யக்ஷணிகள் : பணிப்பெண்கள்-சஞ்சலமற்ற கண்கள் அப்சரசுகள்-அழகிய மங்கையின் உருவம்

37. நந்தீசன் : ஒரு கையில் ஜபமாலை, மற்றொன்றில் சூலம்; தேவியின் பணியாளன்.

38. மகாகாளி : சுத்தி, மனிதன் தலை, கதை, கட்கம் கரங்களில்.

39. சூரியன் : ஒற்றை சக்கரத்தேர்; ஏழு குதிரை. இரு கரங்களில் தாமரை மலர்கள், வலப்புறத்தில் குண்டி எனும் அதிகாரி மைகூடு, பேனா கொண்டு புத்தகத்தில் எழுதுவது போல். இடப்புறத்தில் பிங்களன் என்ற காவலன் தண்டத்துடன். இருபுறமும் இரு பெண்கள் சாமரம் வீசுதல்; அருகில் சாயாவி. மற்றும் பாஸ்கரன், 12 மாதங்களில் 12 வித சூரியன் வடிவம். சந்திரன், செவ்வாய், புதன், பிரகஸ்பதி, சனி, ராகு, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, குபேரன், விஸ்வகர்மா, க்ஷத்திரபாலகர்கள், யோகினிகள், எட்டுத் திக்குகளில் உள்ள தேவதைகள், பைரவன், கிருத்திவாசன், வீரபத்திரன், லலிதா எனப் பல்வேறு வடிவமைப்புகளும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன.

11. லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல்

லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்; மையப்பகுதி விஷ்ணு பாகம், நுனிப்பகுதி சிவபாகம். இதில் சிவபாகம் சற்றுப் பெரியதாக இருக்க வேண்டும்.

லிங்கத்தை அமைத்தல் :

1) உப்பினாலும், நெய்யினாலும் செய்தல்,
2) துணி, மண் ஆகியவற்றாலும் தற்காலிகமாக அமைத்து வழிபடல்.
3) சுட்ட மண்ணினால் லிங்கம் அமைத்தல்.
4) மரம், பாறை ஆகிய ஒன்றால் செய்யப்படுவது மிகச் சிறந்தது.
5) பவழம், தங்கம் ஆகியவற்றால் ஆன லிங்க வழிபாடு அதிக பலன்களைத் தரும்.
6) வெள்ளி, பித்தளை, செம்பு, துத்தநாகம், பாதரசம் ஆகியவற்றால் ஆனவை புனிதமானவை.
7) உலோக நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட லிங்கங்களை வழிபடுவோர் புகழ், வெற்றி அடைவர். அவர்கள் மனோரதம் நிறைவேறும்.

ஈசன் எங்கும் ஆராதிக்கப்படுவர். சாஸ்திர முறைப்படி, குறிப்பிட்ட அளவுகளில் லிங்கங்களை அமைக்க வேண்டும். பரமன் ஆராதனைக்கான இடம் ஆலயமுன் அமைதல் வேண்டும். பஞ்ச கவ்யத்தால் அனைத்தும் தூய்மைப்படுத்தல் படவேண்டும். ஆராதிப்பவர்கள் பவித்திரம், மோதிரம், கங்கணம் அணிந்திருக்க வேண்டும். முறையான மரக்கொம்புகளாலேயே பந்தல் அமைக்க வேண்டும். நரசிம்ம மந்திரத்தால் பூ பரிக்கிரகம் செய்த பின் சடங்குகளைச் செய்ய வேண்டும். பந்தலின் வடமேற்கு மூலையில் ஹோம குண்டம் அமைக்கப்பட வேண்டும். எந்தத் தெய்வம் பிரதிஷ்டை ஆனாலும் உடன் அரி, அயன், அஷ்டதிக் பாலகர்களையும் ஆராதனம் செய்து பூஜிக்க வேண்டும். முடிவில் சாந்தி ஹோமம் புரோகிதர்க்கு கோதானம், சுவர்ணதானம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் பஜனை, தியானத்தில் ஈடுபட வேண்டும். பக்தி, சிரத்தையுடன் பரமனை ஆராதிக்க வேண்டும். திருஉருவை பிரதிஷ்டை செய்பவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு வைகுந்தவாசத்தை அணிகிறார்கள்.

12. ஆலயங்களுடன் திருக்குளங்கள்

ஆலயத் தடாகங்கள் வருண சாந்நித்யத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக வருணன் திருஉருவைத் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவற்றால் அமைக்க வேண்டும். வலதுகரம் அபயஹஸ்தம், இடதுகையில் நாகபாசம்-அன்ன வாகனம்-அவரைத் தொடர்ந்து நதிகள், சர்ப்பங்கள் வருவதாக உருவாக்க வேண்டும். குடத்தில் வருணனை ஆவாகனம் செய்ய வேண்டும். வருண சாந்நித்தியத்தை உண்டாக்க வேண்டும். புரோகிதரைக் கொண்டு ஹோமகுண்டம் அமைத்து ஹோம காரியங்களைச் செய்ய வேண்டும். புனித குடங்களில், புனித நீர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். அக்குடங்களில் கிழக்குக் கடல் நீர், தென்கிழக்கு கங்கை நீர், தெற்குக்கு மழைநீர், தென் மேற்குக்கு ஊற்று நீர், மேற்குக்கு ஆற்று நீர், வடமேற்குக்கு நதி நீர், வடக்குக்குக் காய் கனிகள் பிழிந்த நீர், வடகிழக்குப் புனித தீர்த்தநீர் என்று நிரப்பி ஆராதிக்க வேண்டும் (எல்லாக் குடங்களிலும் ஆற்று நீரையும் நிரப்பலாம்.)

விதிப்படி பூஜைகள் முடித்து குடங்களின் நீரை கிழக்கிலிருந்து தொடங்கி உரிய மந்திரங்கள் கூறி விஷ்ணுவின் அம்சமான வருண சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஷாடசோபசாரங்கள் சமர்ப்பித்து, சிலையைத் தடாகத்தின் நடுவே நீருக்குள் பூமியில் புதைத்து விட வேண்டும். அதனால் நீர் புனிதமாகும், வருணன் சாந்நித்தியமும் ஏற்படும். பஞ்ச கவ்யத்தை எடுத்து மந்திரத்துடன் தடாகத்தில் நீரில் சேர்க்க வேண்டும். குளம் வெட்டி புனித நீரை உண்டாக்குபவர் ஒரு நாளிலேயே பல அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியத்தை அடைவர். குளம் வெட்டுவது சிறந்த தானம். அத்துடன் நந்தவனத்தையும் அமைக்க வேண்டும். இதனால் சொர்க்க வாசம் ஏற்படும்.

13. நீராடும் விதி முறைகள்

நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகத் தியானம் செய்து கொள்ள வேண்டும். ஸ்நானங்கள் பல வகை. தன் இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறிது நேரம் கண் மூடி நிற்க தேகம் சூரியக் கிரணங்களால் புனிதமடைகிறது. மழை நீரிலும் இந்த ஸ்நானம் செய்யலாம். இது அக்னயக ஸ்நானம். உடலை மண்ணைக் கொண்டு தூய்மை செய்து கொள்வது மலஸ்நானம் எனப்படும். அதன் பின்னர் நீராடல் விதிஸ்நானம் கோதூளி கொண்டு தூய்மை பெறுவது மகேந்திர ஸ்நானம் ஆகும். கலசமந்திரம் (அக்கினி (அ) வருணன்) எனப்படும் ஒன்பது மந்திரங்களை உச்சரித்து தலையில் நீர் ஊற்றி கொள்ளும் ஸ்நானம் மந்திர ஸ்நானம் எனப்படும். விஷ்ணுவுக்குப் புனிதமான மந்திரத்தைக் கூறி, தேவைப்படும் போதெல்லாம் மனத்தில் தியானித்தல் மனோஸ்நானம்.

மூன்று காலங்களிலும் சந்தியை வழிபட வேண்டும். பரம சந்தியை எனப்படும் சந்தியா தேவியை ஞானிகள் இரவில் தம் இதயத்தில் இருந்து தியானிப்பர். வலது கை ஆள்காட்டி விரல் நுனியில் பிதுருக்கள் இடம், சுண்டு விரலின் நுனிப்பகுதி பிரஜாபதியின் இடம், கட்டை விரல் நுனிப்பகுதி பிரமன் இடம். இடது உள்ளங்கை அக்கினிக்குப் புனித இடம். வலது உள்ளங்கை சோமனுக்கானது. விரல்கள் சேரும் இடங்கள் மகரிஷிகளுக்குப் புனித இடம். நீராடும் போது அகமர்ஷணம் என்னும் கர்மா செய்வதால் நம் தேகம் பாவம் நீங்கி புனிதமடைகிறது. மேலும், அக்கினிதேவன் வசிஷ்டருக்கு சிவன், சூரியன், கபிலைப் பசு ஆராதனை விவரம் கூறினார். ஆச்சாரியார் சீடனுக்கு தீøக்ஷ அளிக்கும் முறையையும் கூறினார். அதற்கு முன் அகார மந்திரத்தால் சாந்தி ஓமம் செய்ய வேண்டும்.

14. சப்த த்வீபங்கள் (தீவுகள்)

ஏழு த்வீபங்களும் ஏழு கடல்களால் சூழப்பட்டு உள்ளன. ஜம்புத்வீபம் உப்புக் கடலாலும், சால்மலி மதுக்கடலாலும், குசம் நெய் கடலாலும், கிரவுஞ்சம் தயிர்க்கடலாலும், சாகம் பாற்கடலாலும், புஷ்கரம் நன்னீர் கடலாலும் சூழப்பட்டுள்ளன. ஜம்புத்வீபத்தின் அதிபதி அக்னீத்திரன், பிலக்ஷத்தீவின் அதிபதி மேதாதி, சால்மலித் தீவுக்கதிபதி வபுஷ்மா, குசத் வீபத்துக்கு அதிபதி ஜியோதிஷ்மான், கிரவுஞ்சத் தீவுக்கு அதிபதி தியுதிமான், சாகத் தீவுக்கு அதிபதி பவியன், புஷ்கரத்தீவுக்கு அதிபதி சவனன் ஆகியோர்.

(இது பற்றிய விவரங்களுக்கு விஷ்ணுபுராணம் காண்க.)

15. தீர்த்தயாத்திரை க்ஷத்திரங்கள்

தீர்த்த யாத்திரை எல்லோர்க்கும் பொது. தற்போது சுற்றுலாப் பயணம் என்று அதற்கொரு இலாகாவை ஏற்படுத்தி நம் நாட்டவர் அன்றி அயல் நாட்டவரையும் அது ஈர்த்துள்ளது. நம் பண்பாட்டின்படி புண்ணிய க்ஷத்திரங்களுக்குச் சென்று, அங்குள்ள புனித நீரிசல் ஸ்நானம் செய்து அங்குள்ள ஆலயங்களில் உள்ள கடவுளரைத் தரிசிப்பதே தீர்த்த யாத்திரை எனப்படுகின்றது. அங்கு சுவர்ண தானம், கோதானம் கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும்.

புஷ்கரம் : புண்ணிய க்ஷத்திரங்களில் புனிதமானது, உயர்ந்தது புஷ்கரம். புஷ்கரத்தினுள்ளேயே பல புனித இடங்கள் உள்ளன. இங்கு பிரம்மன் மற்றத் தேவதைகளோடு வசிக்கிறார். கார்த்திகை மாதப் பவுர்ணமி அன்று இரவு அதன் கரையில் அன்னதானம் செய்பவன் எல்லாப் பாவங்களிலும் விடுபட்டு பிரம்ம லோகம் அடைவான். புஷ்கரத் தீர்த்தத்தில் நீராடுபவன், அதன் கரையில் பிதுருக்களையும், தெய்வங்களையும் ஆராதிக்கின்றவன் நூறு அசுவமேத யாகங்களின் பலன் பெறுவான்.
ஓர் ஆண்டுகாலம் இங்கு வசித்து நீராடி, பெற்றோர்க்குச் சிரார்த்தம் செய்தால் கடந்த தலைமுறையினரும் நரகலோகம் விட்டு உத்தம லோகம் அடைவர். இங்கு ஜம்பு மார்க்கம் என்ற புண்ணியத்தலமும், தண்டு விசாஸ்ரயம் என்ற ஆலயமும் உள்ளன. கன்னியாஸ்ரமம் என்ற தலம் அதனருகே உள்ளது. பல புண்ணிய ஸ்தலங்களைத் தரிசித்ததன் பலனை இது தரும். சோமநாத ஆலயம், பிரபாஸ க்ஷத்திரம், நர்மதை, சர்மண்வதி, சிந்து நதி, சரஸ்வதி நதி ஆகியவை புனிதமானவை. துவாரகை, கோமதிதீரம், பிண்டாரகம் ஆகிய தலங்களுக்கு யாத்திரை மனோபீஷ்டம் சித்திக்கப்பெறும். பூமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பஞ்ச நதிகள், பீம தீர்த்தம், ஹிமாலயம் ஆகியவை ஒன்றுக்கொன்று இணையான தலங்கள் (கோயில்கள் புனிதமானவை). விநாசினி நாகோத்பேதம், அகர்த்தனம் ஆகிய இடங்களில் உள்ள குரு க்ஷத்திரத்தில் விஷ்ணு முதலான தேவதைகள் அங்கே இருப்பிடம் கொண்டுள்ளனர். இங்கே வசிப்பவன் பகவானை அடைவான். இன்னும் வடக்கே பல தலங்கள் கூறப்பட்டிருப்பினும் காசி க்ஷத்திரம் உயர்ந்தது; மேலானது.

ராஜக்கிரகம், சாலக்கிராமம், காளி கட்டம், வாமனதீர்த்தம், ஸ்ரீபர்வதம், மலையபர்வதம், தண்டகாரணியம், சித்ரகூடம், அவந்தி, அயோத்தி, நைமிசாரண்ய வனங்கள் போன்றவற்றிற்கு புண்ணிய யாத்திரை அகத்திலும் புறத்திலும் ஆனந்தம் தரும். கங்கையின் பெருமையை அனைவரும் அறிவர். கங்கைக் கரையில் உள்ள காசி மிகவும் சிறப்பானது. காசி பற்றிய பல செய்திகள் லிங்க புராணம், சிவபுராணங்களில் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீபர்வதம் என்ற மலையில் தேவி, மகாலக்ஷ்மி வடிவில் தவம் இயற்ற விஷ்ணு காட்சி தந்து அவள் விருப்பம் நிறைவேற அனுக்கிரகித்தார். எனவே அது ஸ்ரீபர்வதம் எனப் பெயர் பெற்றது (ஸ்ரீ=லக்ஷ்மி) இம்மலைச் சரிவில் செய்யும் தவம், ஜபதபம் நிலையான பலனளிக்கும். இறுதிக்காலத்தை இங்கு கழிப்பவர்கள் சிவலோகத்தை அடைவர். ஹிரண்யகசிபும் மகாபலியும் இம்மலையில் அருந்தவம் செய்து பகவான் அருள்பெற்றனர்.

16. கயாக்ஷத்திரச் சிறப்பு

சிறப்பு க்ஷத்திரங்களில் ஒன்று கயா க்ஷத்திரம். கயாசுரன் பகவானைக் குறித்துத் தவம் செய்தான். அவன் முன் திருமால் தோன்றி அவன் வேண்டியவாறு அவன் உடல் எல்லாவற்றிலும் புனிதத்தலமாகும் வரத்தைப் பெற்றான். கயாசுரன் எல்லோரையும் அடக்கினான். தேவர்கள் இவனைக் கண்டு நடுங்கினர். அவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் பிரமனிடம் அசுரனை அடைந்து புனித காரியத்துக்காக அவனது உடலைத் தருமாறு யாசகம் கேட்கச் செய்தார். பிரமன் அவனிடம் தான் செய்யப்போகும் யாகத்துக்கு அவனது புனிதஉடலைத் தருமாறு வேண்டிட, அவனும் அவ்வாறே செய்ய அவன் மண்டை ஓட்டை எடுத்து அதையே ஓமகுண்டமாக்கி வழிபாட்டை முடிக்க விஷ்ணு அவர் முன் தோன்றி ஓமத்தில் பூர்ணாகுதி செய்யச் சொல்ல அசுரன் உடல் மெல்ல அசையத் தொடங்கியது.

அப்போது விஷ்ணு தருமனிடம் எல்லாத் தேவர்களும் இந்தப் பாறையை பிடித்துக் கொள்ளட்டும். தனது கதாயுதத்தின் சக்தியும், மற்றவர்களின் ஆயுதசக்தியும் ஆக தெய்வ சக்தி நிறைந்தது அது என்றார். தருமராஜனும் அந்தப் பாறையைக் கையில் ஏந்திக் கொண்டான். ஒருநாள் மரீசி முனிவர் தன் மனைவி தரும விரதையைக் கால்களைப் பிடித்து விடுமாறு பணிக்க, அவர் அவ்வாறு பணிவிடை செய்யும் போது பிரம்மன் அங்கு வர அவள் பணிவிடையை நிறுத்தி பிரமனை வரவேற்று உபசரிக்க, இதனால் கோபம் கொண்ட முனிவர் அவளைப் பாறையாகும்படி சபித்தார். அவள் பல்லாண்டுகள் விஷ்ணுவைக் குறித்து தவம் செய்து தன் சாபத்தை நீக்கி அருள வேண்டினாள். விஷ்ணு, முனிவர் சாபத்தை மாற்ற முடியாது. எனினும், அவர்கள் அனுக்கிரகம் உண்டு என்றும், அவளைக் கொண்டு கயாசுரனை அவள் இருப்பிடத்திலேயே கட்டுப்படுத்தி வைப்பதாகவும் கூறினார். அப்போது தருமவிரதை அரி, அயன், அரன், கவுரி, லக்ஷ்மி ஆகியோர் அந்தப் பாறையின் மீது அமர்ந்திருக்கும் பேற்றினைக் கேட்டுப் பெற்றார்கள். அதில் அனைத்துத் தேவர்களின் சாந்தித்தியமும் இருக்குமாறு செய்தார். விஷ்ணு கதாமூர்த்தியாகி அவனுடைய அசைவைத் தடுத்து நிறுத்தினார்.

கதன் என்ற அசுரனை விஷ்ணு கொன்றார். அவன் எலும்பினால் விசுவகர்மா ஒரு ஆயுதத்தைச் செய்து விஷ்ணுவுக்கு அளிக்க, அது கதாயுதம் எனப்பட்டது. அதை ஏந்திய பெருமாள் கதாதரர் எனப்பட்டார். விஷ்ணு கதாதரமூர்த்தியாகி பாறை மீது அமர அது நகராமல் நின்றுவிட்டது. அசையமுடியாமல் போன கயாசுரன் வருத்தமுற்று விஷ்ணுவை வேண்ட திருமால் வரம் அளித்தார். உன்னை ஒரு புனித காரியத்துக்காகவே நிலை நிறுத்தினோம். மும்மூர்த்திகளும் உன் அருகிலேயே இருப்பார்கள். தல யாத்திரை இடங்களில் இது மிகவும் சிறந்தாகும். உன்னிடம் வருபவர்கள் மிக்க ஆனந்தம் அடைவர். பிரமன் யாகத்தைப் பூர்த்தி செய்து அந்தணர்களுக்கு எல்லாம் தானங்கள் அளித்தார். ஆனால், பேராசை கொண்ட அந்தணர்களை வசதி இன்றி திண்டாடுமாறு சபித்தார் பிரமன். அவர்கள் விமோசனம் வேண்ட அங்கு வரும் யாத்திரிகர்களின் ஆதாரத்தால் அவர்கள் பிழைப்பர் என்றும், அங்கு செய்யப்படும் பிதுரு காரியங்கள் சிறந்த பலன் அளிக்கும் என்றும் பிரம்மா அருளினார். அன்று முதல் அவ்விடம் கயை எனப்பெயர் பெற்றது.

17. கயாக்ஷத்திரத்தில் கர்மாக்கள் செய்தல்

கயா யாத்திரையை சாஸ்திரம் அறிந்தவர்களின் உதவியோடு விதிமுறைப்படி செய்து முடிக்க வேண்டும். தம் வம்சத்தில் யாரேனும் ஒருவர் கயைக்கு வந்து சிராத்தம் செய்து தங்களைக் கரைசேர்க்க மாட்டார்களா என்று மூதாதையர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

முக்திபெற நான்கு வழிகள்.

1. பகவானின் மகிமைகளை அறிவது
2. பிதுருக்களுக்கு கயையில் சிரார்த்தம் செய்வது
3. மாட்டுக் கொட்டிலில் உயிரை விடுவது
4. புனிதத் தலத்தில் வசிப்பது.

இங்கு என்றும் ஈமச்சடங்குகளைச் செய்யலாம். கயையை அடைந்து உத்தரமானசம் தன்னில் நீராடி அதன் கரையில் பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் தெற்கிலுள்ள தக்ஷிணமான சத்தில் நீராடி, சூரியனைப் பிரார்த்தித்து அனுக்கிரகம் பெற வேண்டும். இங்கே முடிநீக்கும் இடம் முண்டப்பிரிஷ்டம் எனப்படும். அதற்கு வடக்கே கங்காளம் என்ற புனித தீர்த்தம் உள்ளது. உத்தரமானசத்துக்குப் பிறகு நாகர்ஜுனா நதியில் நீராட வேண்டும். அடுத்து, பால்கு நதியில் நீராடி சிரார்த்தம் முடித்து கதாதரரைத் தரிசிக்க வேண்டும். பின்னர் மதங்க தீர்த்தம், பிரமகூபம் ஆகியவற்றில் நீராடி கர்மாக்களைச் செய்ய வேண்டும். அடுத்து போதி விருக்ஷ தரிசனம். முதல் நாள் உத்தரமானதும், இரண்டாம் நாள் தக்ஷிணமானதும் மூன்றாம் நாள் பிரம்மசரஸ், நான்காவது நாள் பால்குந்தியில் நீராடி கர்மாக்களைச் செய்ய வேண்டும்.

விசாலன் வரலாறு

விசாலன் என்ற மன்னனுக்குப் புத்திரப் பேறு இன்மையால் அந்தணர்கள் அறிவுரை கேட்டு கயா க்ஷத்திரம் அடைந்து கயசிரசு என்ற இடத்தில் பிண்டம் அளித்தான். அப்போது அவன் முன் வெண்மை, சிவப்பு, கருப்பு நிறங்களுடைய மூன்று உருவங்கள் தோன்றின. அந்த மூன்றும் அவனுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்றனர். அவை அந்தத் தலத்தில் கர்மாக்கள் செய்து அவர்களுக்காகப் பிண்டம் சமர்ப்பித்தால் அவர்கள் நரகம் விடுத்து சொர்க்கம் சேர்வர் என்றனர். அவ்வாறே அவன் செய்ய அவன் மனைவி கருவுற்று அநேக புத்திரர்கள் பிறந்தனர். தன் குடும்பத்தினரைச் சம்சார பந்தத்திலிருந்து விடுபடச் செய்ய விரும்புபவர் கயையில் தேவர்களுக்குத் திருப்தியாகக் கர்மாக்களைச் செய்ய வேண்டும்.

ஐந்தாம் நாள் நீராடி ஜனார்த்தனனைப் பிரார்த்திக்கும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வட விருட்சத்தின் அடியில் வடேசுவரரைத் தரிசிக்க வேண்டும். இவ்வாறே மகாநதியில் நீராடி காயத்திரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். வைதரணி நதியில் நீராடி, ஜனார்த்தனனைப் பிரார்த்தித்து தனக்காகப் பிண்டம் இட்டுக் கொள்ள வேண்டும். சொர்க்க வாசம் பெற அது உதவும். மேலும், அங்கு பல தீர்த்தங்களும், பல தெய்வ வடிவங்களும் உள்ளன. அவற்றை எல்லாம் தரிசித்து, கர்மாக்களைச் செய்து கயா க்ஷத்திரத்தை வலம் வந்து அன்னதானம் அளித்தல் சிறப்புடையது.

18. விண்ணில் உள்ளவை

இப்பேரண்டத்தில் பூமிக்குக் கீழே பாதாள லோகங்கள் உள்ளன. அவை அதலம், விதலம், நிதலம், சுபஸஅதிமது, மகாக்ஷணீயம், சுதலம், அக்ரயம் என ஏழாகும். பாதாள லோகங்களுக்குக் கீழே நரகம் உள்ளது. சூரியனது கிரணங்களால் ஆகாயம் முழுவதும் ஒளிர்வதால் அது நபஸ் எனப்படும். சூரியன் தனது ஒற்றைச் சக்கர ரதத்தில் பவனி வருகையில் காயத்திரி முதலிய ஏழு குதிரைகள் இழுத்து வருகின்றன. விஷ்ணுவே சூரியனாக விளங்குகிறார். சந்திரன் மூன்று சக்கர ரதத்தில், பச்சை நிறப் பத்துக் குதிரைகளால் இழுக்கப்படுகிறது. சந்திரனுக்கு 15 கலைகள் உள்ளன.

செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, ராகு ஆகிய கிரகங்களின் ரதங்களும் எட்டு குதிரைகளாலேயே இழுக்கப்படுகின்றன. கிரகங்களுக்கு வெகுதூரத்தில் சப்தரிஷி மண்டலம் உள்ளது. அதற்கு பல லக்ஷம் மைல்கள் தள்ளி மகர்லோகம் உள்ளது. அதற்கு அப்பால் ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் (அ) பிரம்ம லோகம், அடுத்து விஷ்ணுபதம் என்னும் வைகுந்தம் உள்ளன. இவ்வாறு விளக்கி வந்த அக்கினி தேவர், அடுத்து வான சாஸ்திர முறைப்படி மங்கள கர்மாக்கள் பலவற்றை விளக்கிப் பின்னர் அறுபது வருஷங்களைப் பற்றியும், அந்தந்த ஆண்டு பலன்கள் பற்றியும் விளக்கினார். பிரபவ முதல் அக்ஷய வரை உள்ள அறுபது ஆண்டு பலன்களையும் விவரித்து உரைத்தார். அடுத்து ஓர் அரசன் போரில் வெற்றி பெறச் செய்ய வேண்டிய ஹோம காரியம், கிரிசக்ரவிரதம் ஆகியவை பற்றிக் கூறி அவற்றின் பலன்களையும் விளக்குகிறார் அக்கினிதேவன்.

19. மன்வந்தரங்கள், மனுக்கள்

மன்வந்தரங்கள் பதினான்கு. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒருவர் மனுவாகவும், ஒருவர் இந்திரனாகவும், எழுவர் சப்தரிஷிகளாகவும் இருப்பர். இவை அனைத்தும் ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேறாகும். மனுவும், சப்தரிஷிகளும், தேவர்களும், இந்திரனும் மனுவின் புதல்வர்களும் எம்பெருமானுடைய சங்கல்ப காரியத்தை நிறைவேற்றும் அதிகார புருஷர்கள். பதினான்கு மனுவந்தரங்கள் கழியும் போது ஆயிரம் யுகங்களின் அளவுள்ள ஒரு கற்ப காலம் முடிவடையும். இது ஒரு பகற்காலம்; இதே அளவு இரவுகாலம் கழிந்த பிறகு பிரம்ம சொரூபத்தை அனுஷ்டித்து எழுந்தருளியிருப்பவனும் முதல் சிருஷ்டி கர்த்தாவும் சகல சொரூபியுமான ஸ்ரீஜனார்த்தன பகவான் மூவுலகையும் உட்கொண்டு யோகு துயில் கொள்வார். பிறகு விழித்து முன்போல் உலகைப் படைப்பார்.

(இதன் விரிவை விஷ்ணு புராணத்தில் காண்க.)

20. வேதங்கள், வருணாசிரம தர்மங்கள்

எம்பெருமான் துவாபர யுகந்தோறும் வியாசராகத் தோன்றி மக்கள் நலனுக்காக ஒன்றாக இருக்கும் வேதத்தை நான்காகப் பிரித்து அருள்கிறார். அவை ருக், யஜுர், சாம, அதர்வணம் என்னும் நான்காகும். ஒன்றாக இருந்த யஜுர் வேதம் நான்காகப் பிரிக்கப்பட்டது. ரிக் வேதம் பல சம்ஹிதைகளாகப் பிரிக்கப்பட்டது. சாமவேதம் பல சாகைகளாகப் பிரிக்கப்பட்டது. அதர்வண வேதமும் பல சாகைகளாகப் பிரிக்கப்பட்டது. இவை குருவின் வழியாக பிரதான சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டன. உபதேசம் பெற்றவர்கள் மேலும் பலருக்கு உபதேசம் செய்து வருகின்றனர்.

வருணாசிரம தர்மங்கள்

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணத்தார்கள் நான்கு வகையினர். அவர்களுடைய கடமைகளையே வருணாசிரம தர்மங்கள் என்று சொல்கின்றனர். பிராமணர்களின் தொழில் யஜ்ஞ, யாகாதிகளான கர்மங்களைச் செய்தல், பிறருக்குச் செய்து வைத்தல், சீலமுள்ள ஒழுக்கத்துடன் பிறர் அளிக்கும் தானங்களை ஏற்றல், வாழ்நாள் முழுவதும் தர்ம சாஸ்திரங்கள் அறிந்து அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல். க்ஷத்திரியர்கள் மக்களைக் காப்பாற்றி, துஷ்டர்களைத் தண்டித்து நாட்டில் அமைதியை உண்டாக்குதல். வைசியர்கள் வியாபாரம் நடத்துதல், தானியங்களைப் பயிரிடுதல், விளைச்சலைப் பெருக்குதல், பசுக்களை ரக்ஷித்தல். நான்காம் வருணத்தார் மேற்கூறிய மூவர்க்கும் பணிகள் செய்து உதவியாக இருத்தல்.

(மேலும் விரிவான விவரங்களுக்கு-விஷ்ணு புராணம் காண்க.)

21. தினமும் செய்ய வேண்டிய கர்மாக்கள்

நாம் பொதுவாக எல்லோரும் செய்யும் காரியங்கள் பலப்பல. அவை முந்தையோர் கண்ட முறையில் செய்யப்படுவன. சில சமயச் சடங்குகளும் அதில் அடங்கும். விடியற்காலையில் துயிலெழுதல். எழும்போதும் படுக்கப்போகும் போதும் இறைவனைத் தியானித்தல். மலஜலம் கழித்தல், பல் தேய்த்தல், நீராடல், தூய உடை உடுத்தல்-தானதருமங்கள் செய்தல்-பிறருக்கு உதவுதல். மும்மலச் சுத்தியாய் இறைவனைத் தியானித்துக் கொண்டே இருத்தல். மரியாதைக்குரியவர், கர்ப்பிணி, பாரம் சுமப்போர், முதியோர்களுக்கு முதலில் வழிவிட வேண்டும். தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள முறைகளிலேயே செல்வம் சேமிக்க வேண்டும். இரவில் கையில் விளக்குடன் பயணம் செய்தல் நலம். குறுக்கே பேசக்கூடாது. வஞ்சகர்கள் உறவு கூடாது. நோய் வருமுன் காத்தல் வேண்டும். வந்தால் தக்க மருத்துவரை நாடி அவர் அறிவுரைப்படி மருந்து, உணவு உட்கொள்ள வேண்டும்.

ஆலயங்களுக்குள் நல்லொழுக்க நெறிகளின்படி நடந்து கொள்ள வேண்டும். முறைப்படி இறைவனை வணங்கி, தியானிக்க வேண்டும். தூய்மையான பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். எந்தெந்தப் பொருளை எப்படி எப்படி தூய்மைப்படுத்த வேண்டுமோ அவ்வாறு செய்ய வேண்டும். உணவு உண்டபின் வாயை நீர் ஊற்றி நன்கு கொப்பளிக்க வேண்டும். நல்லொழுக்கம், நல்லாச்சாரம், நித்ய கர்மானுஷ்டானங்களைக் குறித்த காலத்தில் குறித்தபடி செய்தல் நன்மை பயக்கும்.

22. தீட்டு காக்கும் முறை

ஒரு குடும்பத்தில் நிகழும் ஜனன, மரணங்களுக்கான தீட்டு காக்கும் முறை அனுசரிக்கப்படுகிறது. பிறப்பு தீட்டை விருத்தி தீட்டு என்பர். சாவுத்தீட்டு பிராமணனுக்குப் பத்து நாட்கள், க்ஷத்திரியனுக்கு பன்னிரண்டு நாட்கள், வைசியருக்கு பதினைந்து நாட்கள், மற்றவர்க்கு ஒரு மாதமும் ஆகும். பிறந்த குழந்தை பிராமண குழந்தையானால் ஒரு நாள், க்ஷத்திரிய குழந்தைக்கு மூன்று நாட்கள், மற்ற குழந்தைகட்கு ஆறு நாட்கள் தீட்டு. குழந்தை இறந்தால் பல் முளைக்காவிடில் அன்று பகலுடன் தீட்டு முடியும். சூதகரணம் (அ) குடுமி வைக்காலிருப்பின் ஒரு நாள் தீட்டு. உபநயனம் போன்ற சமயச் சடங்குகள் நிறைவேறாமல் இருந்தால் மூன்று நாட்கள். அதன் பின்னர் மரணமானால் குழந்தைக்கு பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டும்.

நான்காம் வருணக் குழந்தை மூன்று வயதுக்குள் இறந்தால் ஆறாவது நாள் தீட்டு விலகி விடும். மூன்று முதல் ஆறு வயதானால் பன்னிரண்டு நாட்களுக்கும், அதற்கு மேல் இறக்கும் குழந்தைக்கு ஒரு மாதமும் தீட்டு உண்டு. மணமான பெண் மாமனார் வீட்டில் இறந்தால் தகப்பனாரின் உறவினருக்குத் தீட்டு இல்லை. மாமனார் வீட்டில் பிரசவமானால் தந்தை உறவினருக்கு ஓர் இரவில் தீட்டு விலகும். அவள் தந்தை வீட்டில் இறந்தால் மூன்று நாள் தீட்டு காக்க வேண்டும். தீட்டுக்கான இரண்டு நிகழ்வுகள் இருப்பின் இரண்டுக்கும் ஒரே நாளில் தீட்டு தீர்ந்து விடும். இரண்டு வெவ்வேறு நாள்களில் சேர்ந்தால் பின் நிகழ்வுக்கான காலத்தின் முடிவில் தான் தீட்டு விலகும். உறவினர் அயல் நாட்டில் மரணமானால் பத்துநாட்களுக்குள் தெரிந்தால் மீதமுள்ள நாட்கள் வரை தீட்டு. பத்து நாட்களுக்குப் பின் ஓராண்டுகளுக்குப் பின் தெரிந்தால் கேட்ட நாளிலிருந்து மூன்று நாட்கள் தீட்டு. அதற்கு மேற்பட்டால் கேட்டவுடன் ஸ்நானம் செய்தால் தீட்டு போய்விடும். குறைப் பிரசவமானால் எத்தனை மாதம் கர்ப்பமோ அத்தனை நாட்கள் தீட்டு.

23. நீத்தார் கடன்

மறைந்தவரின் பன்னிரண்டாவது நாள் சபிண்டீகரணம் என்பர். அன்று அவர் ஆத்மா முன்னோர்களுடன் சேர்கிறது. அன்று நான்கு பிண்டங்கள், ஒன்று மறைந்தவர்க்கு, மற்ற மூன்று, மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு. அவ்வாறே நான்கு கலன்களில் நீர் வைக்க வேண்டும். இறந்தவர்களுக்கான பிண்டத்தை மற்ற மூன்றுடனும் மந்திரம் கூறி சேர்க்கவேண்டும். அதே போல் நீரும் ஒன்றுடன் மற்றொன்று எனக் கலக்கப்பட வேண்டும். பெண் பிண்டங்கள் கலக்கப்படும் போது மந்திரங்கள் இல்லை. ஆண்டுதோறும் நினைவு நாளன்று சிரார்த்தம் செய்து நீத்தாருக்குப் பிண்டம் போட வேண்டும். அப்போது வருத்தமுறக்கூடாது. தற்கொலை அல்லது வேறு காரணங்களால் அகாலமரணம் நேர்ந்தால் மற்றவர்கள் தீட்டுக் காக்க வேண்டாம். உறவினர் அல்லாதார் பிணத்துடன் சுடுகாடு சென்றால் பிணத்தை எரிப்பதற்கு முன்னே நீராடலாம். சென்று திரும்பியவனும், பெண்களிடம் மகிழ்ந்து இருந்தவனும் நீராட வேண்டும். அந்தணர் பிணத்தை அவர்களே சுமந்து செல்ல வேண்டும். அனாதை அந்தணர் பிணத்தை சுடுகாட்டில் எரிக்க ஏற்பாடு செய்பவர்கள் சொர்க்கம் அடைவர்.

சிதைக்கு தீ மூட்டியதும் மறைந்தவன் உறவினர் அதனை இடம் வலமாகச் சுற்றி வர வேண்டும். உடுத்தியுள்ள உடுப்புடனே குளிக்க வேண்டும். நீத்தார் திருப்திக்காக மும்முறை நீர் ஏந்திவிட வேண்டும். வீட்டிற்குள் நுழையும் போது கால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அன்று இரவு அற்ப ஆகாரம் உண்டு. தரையில் படுத்துறங்க வேண்டும். பத்தாம் நாள் முகக்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். குறைப்பிரசவக் குழந்தை, பல் முளைக்காத குழந்தை புதைக்கப்பட வேண்டும். அதற்கு நீர்க்கடன்கள் ஏதும் இல்லை. அனாதைப் பிணத்தைத் தீண்டினால் மூன்றில் ஒரு பங்கு நாட்கள் தீட்டு. பிராம்மணனுக்கு மூன்று நாட்கள், க்ஷத்திரியனுக்கு நான்கு நாட்கள், வைசியனுக்கு ஐந்து நாட்கள், மற்றவர்களுக்குப் பத்து நாட்கள். திருமணமாகாத பெண் இறந்தால் அன்றிரவோடு தீட்டு விடும். மணத்துக்கு பிறகு இறந்தால் மூன்று நாட்கள். அவளுடைய திருமணமான சகோதரிக்கு இரண்டு நாட்கள்.

மணமாகாத பெண் தன் தந்தையைச் சேர்ந்தவர்களுக்கு நீர்க்கடன்கள் முடிக்க வேண்டும். மணமானவள் தன் கணவனின் பெற்றோர்க்கும், அவர்களைச் சார்ந்து பித்ருக்களுக்கும், தன் தந்தையைச் சேர்ந்தவர்களுக்கும் நீர்க்கடன் செய்ய வேண்டும். பிராமணனுக்கு பிராமண மனைவி மூலம் குழந்தை பெற்றால் பத்து நாட்கள் தீட்டு, க்ஷத்திரிய மனைவி குழந்தையானால் ஒரு நாள், வைசிய மனைவியின் குழந்தைக்கு மூன்று நாட்கள். இதர ஜாதி மனைவி மூலம் குழந்தை பிறந்தால் ஆறு நாட்கள் தீட்டு. குழந்தை இறந்தாலும் தீட்டு அவ்வாறே. மருமகள், பெண் வயிற்றுப் பேரன், சகோதரி மகள், மைத்துனன் அவன் மகள் இறந்தால் நீராடியதும் தீட்டு விலகி விடும். தாய்வழிப் பாட்டன், பாட்டி, ஆசாரியார் ஆகியோர் இறந்தால் மூன்று நாள் தீட்டு. தற்கொலை செய்து கொள்வோர் நூறாயிரம் ஆண்டு நரகவாசம் அனுபவிக்க வேண்டும். பெற்றோர்களால் கைவிடப்பட்டவனின் பெற்றோர் இறந்தால் செய்தி கேட்டதும் நீராடினால் போதும். எனினும் ஓராண்டு முடிந்தவுடன் சிராத்த காரியங்களைச் செய்யலாம்.

இறந்தவன் தாயாதிகள் பிணத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றதால் நீராடிய பின் அக்னியைத் தொட்டும், சிறிது நெய் உட்கொண்டும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். பத்து அன்று விருந்து உட்கொள்ள வேண்டும். வறிய பிராமணன் உடலை ஒருவன் சுமந்து சென்றால் ஸம்ஸ்காரத்துக்குப் பின் குளித்தால் போகும். பிணம் எடுத்துச் செல்லப்பட்ட பின் வீட்டை கழுவுதல், சுண்ணாம்பு அடித்தல் மூலம் கிரகத் தூய்மை ஏற்படுகிறது. இறந்தவன் மகன் சிதையில் உள்ள உடலின் முகத்திலே எரிந்து கொண்டிருக்கும் சமித்துக்களால் மும்முறை மந்திரம் சொல்லித் தொட வேண்டும். மற்றவர்கள் உடல் மீது நீரைத் தெளித்து உதகக் கிரியையைப் பூர்த்தி செய்ய வேண்டும். பிண்டங்கள் பிராமண உயிர்க்குப் பத்தும், க்ஷத்திரியனுக்குப் பன்னிரண்டும், வைசியருக்குப் பதினைந்தும், மற்றவர்க்கு முப்பதும் போட வேண்டும். பிள்ளையில்லாவிடில் பிள்ளை வயிற்றுப் பேரன் கொள்ளி போடலாம். பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்கும் போது புண்ணியாகவசனத்தின் போது பிராமணர்களுக்குப் பசு, தங்கம், ஆடைகள் தானம் செய்ய வேண்டும்.

ஹரியைத் தியானித்தவாறே உயிரை விட்டவன் சொர்க்கம் அடைவான். கங்கையில் எலும்பு, சாம்பல் கரைக்கப்பட்ட கணம் முதல் அவனுடைய ஆத்மா மேலுலகை நோக்கிப் பயணம் தொடங்குகிறது. தற்கொலை போன்ற அகால மரணம் அடைந்தவர்களுக்கு நாராயண பலி கொடுக்கலாம். அந்த ஆத்மா கரையேறும். மயான வைராக்கியம் அடையாதவன், தானும் இறந்து விடுவோம் என்று எண்ணாதவன் முட்டாள். மரண நேரம் எப்போது விதிக்கப்பட்டிருக்கிறதோ அப்போது தான் மரணம் நிகழும். மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. நாம் சட்டையை மாற்றுவதுபோல் ஆத்மா உடலை மாற்றிக் கொள்வதே மரணம். எனவே அதற்காக வருந்தக்கூடாது.

24. வானப் பிரஸ்த ஆசிரமம், சந்நியாச ஆசிரமம்

1. வானப் பிரஸ்தாசிரமத்தை மேற்கொள்வோர் காட்டிலே வசித்து, அங்கு கிடைக்கும் காய், கனி, கிழங்குகளை உண்டு, தெளிந்த ஊற்று நீரை அருந்தி, மூன்று வேளை நீராடி, யாசகம் கேட்காமல், பெறாமல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வாழ வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இருக்கும் ஒருவன், பேரன் பேத்திகளைப் பெற்ற பிறகு வானப் பிரஸ்தாசிரமத்தைத் தனியாகவோ, மனைவியுடனோ மேற்கொள்ள வேண்டும். ஒருவன் வாழ்க்கையின் நான்காவது கட்டம் சந்நியாச ஆசிரமம். பந்த பாசங்களை நீக்கி, முற்றும் துறந்த தவசிகளுடைய சந்நியாச ஆசிரமத்தை அதாவது துறவறத்தை மேற்கொள்ள வேண்டும். எந்த இடத்திலும் நிலையாகத் தங்கக்கூடாது. ஒரு வேளை மட்டுமே கிடைத்த உணவைக் கொள்ள வேண்டும். மரநிழலே தங்குமிடம். கையில் உள்ள திருஓடே உண்கலம். மரணம் அடையும் வரை நியதியோடு வாழ வேண்டும்.

உண்மையே பேச வேண்டும். புனிதமான காரியங்களையே செய்ய வேண்டும். மரக்கலம் (அ) மண்கலத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். எப்போதும் பிறருக்கு நன்மை செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பிறர் துன்பத்தை தன் துன்பமாகக் கொண்டு உதவ வேண்டும். தெய்வீகம் அடைய பத்துச் சற்குணங்கள் தேவை. தெய்வப்பற்று, சகிப்புத்தன்மை, சுயக்கட்டுப்பாடு, பேராசையின்மை, புனிதத்தன்மை, தன்னடக்கம், எளிமை, அறிவு பெற்றிருத்தல் ஆகியவை. சந்நியாசிகள் நான்கு விதம். ஆசிரமத்தில் இருப்பவர் குடீரகர் மற்றும் வாகடர்கள், அம்சர்கள், பரமஹம்சர்கள். ஐந்து யாமங்கள், ஐந்து நியமங்கள் கொண்டிருக்க வேண்டும். பத்மாசமிட்டு அமர வேண்டும். பிராணாயாமம் செய்தல் வேண்டும். பிரத்தியாகாரம், தியானம், தாரணை கொண்டு ஆத்மாவைப் பிரம்ம சொரூபத்துடன் ஐக்கியப்படுத்திவிடும் சமாதி. ஆத்மா, பகவான், பரப்பிம்மம் என்னும் பிரம்மத்தோடு ஐக்கியமாவது முக்தி ஆகும்.
பொதுவான விஷயங்கள் சில

தரும சாஸ்திரம் :

விஷ்ணு, யாஜ்ஞவல்கியர், ஹரிதர், அத்திரி, யமன், வியாசர், பிரஹஸ்பதி ஆகியோர் விளக்கிக் கூறி உள்ளவையே தருமசாஸ்திரம் ஆகும்.

சிராத்தம் :

முந்தையோர் கண்ட நெறிமுறையில் சிரத்தையுடன் செய்வதே சிராத்தம். இது விருத்தி சிராத்தம், ஏகோதிஷ்ட சிராத்தம், சபிண்டீகரணம் எனப் பலவகை. கயையில் செய்யும் சிரார்த்தம் கயா சிரார்த்தம்-சிறந்தது.

நவக்கிரக யஜ்ஞம்

சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், பிரகஸ்பதி, சுக்கிரன், சனி, ராகு, கேது என்பவை நவக்கிரகங்கள் என்பதை யாவரும் அறிவர். நவக்கிரக உருவங்களை வடித்தல்: சூரியன்-செம்பில்; சந்திரன்-படிகம்; அங்காரகன்-சிவப்பு நிறம்; புதன்-சந்தன மரம்; வியாழன் (குரு) தங்கம்; சுக்கிரன்-வெள்ளி; சனி-இரும்பு; ராகு கேது-ஈயம் ஒன்பதையும் தங்கத்திலேயும் செய்யலாம்.

கிரகத்துக்கேற்ப ஓம சமித்துக்கள்

சூரியன்-எருக்கு; சந்திரன்-பலாசு; அங்காரகன்-கருங்காலி; புதன்-நாயுருவி; பிரகஸ்பதி-அரசு; சுக்கிரன்-அத்தி; சனி-வன்னி; ராகு-அருகம்புல்; கேது-தர்ப்பை. சமித்துக்களில் இருபத்தெட்டு (அ) நூற்றி எட்டு, தேன், தயிர், நெய்யில் தோய்த்து ஹோமகுண்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தணர்களுக்கு அறுசுவை உண்டி அளித்து கோ தானம், வஸ்திர தானம், போன்றவற்றை தட்சிணையுடன் தரவும். ஒருவன் தனக்குப் பாதகமாக இருக்கக் கூடிய கிரகங்களைப் பக்தியுடன் ஆராதித்தால் அவற்றால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.

25. பாபங்கள், பிராயச்சித்தம்:

ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ இழைத்துவிட்ட தவறுக்காக மனமுருகி வருந்துவது பிராயச்சித்தம் எனப்படும். அவ்வாறு செய்வதன் மூலம் மறுபடியும் அத்தகைய தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. அழையாதார் வீட்டில் நுழைந்து புசிக்கும் பிராமணன் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து உபவாசம் (அ) கிருச்ச சாந்த்ராயனம் என்ற கர்மாவைக் கடைப்பிடிக்க வேண்டும். தீட்டுக் காலத்தில் பிறர் இல்லத்தில் உணவு கொள்வதால் ஏற்படும் தோஷம் நீங்க கிருச்ச விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அமாவாசையன்று மது அருந்துவதால் ஏற்படும் தோஷம் நீங்க விராஜா பத்தியம் என்ற கர்மாவைச் செய்ய வேண்டும். உப பாவங்கள் எனும் செயல்களைப் புரிந்தவர்கள் சாந்திராயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

ஒருவன் வேண்டுமென்றே ஒரு குற்றத்தைச் செய்தால் அவனைச் சாதிப்பிரஷ்டம் செய்ய வேண்டும். தெரியாமல் செய்து விட்டால் பிரஜாபத்தியம் என்ற கர்மாவை மேற்கொண்டால் போதும். இப்பகுதியில் ஏராளமான தவறுகள் பற்றியும் அவற்றிற்கு பிராயச்சித்தமும் சொல்லப்பட்டுள்ளன. சில மட்டுமே காட்டப்பட்டன. பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் கடுமையானதாக இருக்கும். அதைவிடச் சற்று குறைவாக க்ஷத்திரியனுக்கும், அதைக் காட்டிலும் குறைவாக வைசியனுக்கும், மற்றவர்களுக்குத் தண்டனை அதைவிடக் குறைவாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

26. பிராயச்சித்த விரதங்கள்

1. மகாபாதகன் ஒரு மாதக் காலத்துக்கு புருஷஸூக்தம் கூற வேண்டும்.

2. அகர்ஷண மந்திரத்தை மும்முறை உச்சரித்தல், வாயு, யமனுக்குõன மந்திரங்கள், காயத்திரி மந்திரமும் உச்சரித்தலால் சாதாரணக் குற்றங்களிலிருந்து ஒருவன் விடுபடலாம்.

3. கிருச்ச விரதம்-மொட்டை அடித்துக் கொண்டு, நீராடி, ஹோமம் செய்து ஹரியை வழிபட வேண்டும். பகலில் நின்று கொண்டும், இரவில் உட்கார்ந்து கொண்டும் கழிக்க வேண்டும்.

4. சாந்திராயன விரதத்தைக் கடைப்பிடிப்பவன் ஒரு நாளைக்கு எட்டுப்பிடி-காலையில் 4 பிடி, மாலையில் 4 பிடி என்று உணவு கொள்ள வேண்டும்.

5. தப்தகிருச்சம் : முதல் மூன்று நாட்கள் மூன்று கை வெந்நீர், அடுத்த மூன்று நாட்கள் மூன்று கை சூடான பால், அதற்கடுத்த மூன்று நாட்கள் சூடான நெய் அதே அளவு, கடைசி மூன்று நாட்கள் காற்றே ஆகாரம்.

6. கிரச்ச சந்தானபன விரதம் : ஒரு பகல், ஓர் இரவு சுத்த உபவாசம்.

7. பாரகயஜ்ஞ கர்மாவுக்கு பன்னிரண்டு நாட்கள் உபவாசம்.

8. பிராஜாபத்யம்-ஒரு வேளை உணவு மட்டும். மூன்று நாட்களுக்கு.கிருச்ச விரதம் : ஒரு பிராம்மணன் மேற்கொள்வதை விட க்ஷத்திரியன் ஒரு மாதம் குறைவாகவும், வைசியன் இரண்டு மாதம் குறைவாகவும் விரதம் கொள்ள வேண்டும்.

9. பல கிருச்சத்துக்கு ஒரு மாத காலம் பழ உணவு மட்டும்; ஸ்ரீ கிருச்சத்துக்குப் பேயத்தி பழம் மட்டும் உணவு.

10. பத்மாக்ஷம்-1 மாதகாலம்-நெல்லிக்காய் மட்டும் உணவு.புஷ்ப கிருச்சத்துக்கு மலர்கள், பத்திர கிருச்சத்துக்கு இலைகள், மூல கிருச்சத்துக்கு மலர், தோய கிருச்சத்துக்கு நீர் ஆகாரம்-இவற்றைத் தனியாகவோ, தயிர் (அ) மோர் கலந்தோ உட்கொள்ளலாம்.

11. வாயல்யம் என்ற பிராயச்சித்தம் : எல்லாப் பாபங்களையும் நசிக்கச் செய்யும்-ஒரு மாதகாலம்-நாள் ஒன்றுக்கு ஒரு பிடி அன்னம்.

12. கிருச்சம், ஆக்நேயம்-பன்னிரண்டு நாட்கள் ஒரு கையளவு நல்லெண்ணெய் உட்கொள்ள வேண்டும். பாபங்களை விலக்கிக் கொள்ளவும், செல்வம் பெறவும், மரணத்துக்குப்பின் விண்ணுலகு அடையவும் ஒருவன் கிருச்சவிரதம் மேற்கொள்ளலாம்.காயத்திரி மந்திரம், பிரணவ மந்திரம், நாராயணன், சூரியன், நரசிம்மர் மூலமந்திரங்களும் பாபங்களைப் போக்கக் கூடியவை.

சந்திராயன விரதத்தை மேற்கொள்ளுபவன் பவுர்ணமியன்று 15 கவளம், அடுத்த நாள் முதல் 14, 13 என்று குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை அன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் ஒரு கவளம் மட்டும் உட்கொண்டு அது முதல் ஒவ்வொன்று கூட்டி பவுர்ணமி அன்று 15 கவளம் உட்கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு இரண்டு அமாவாசை வந்தால், அது மலமாசம், அந்த மாதங்களில் விரதம், ஓமம், பிரதிக்ஞை-திருவுருவப் பிரதிஷ்டை கூடாது. ஒரு பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமி வரை உள்ள நாட்கள் கொண்டது சாந்திர மாசம்; முப்பது நாட்களை உடையது சவுர மாசம்; சூரியன் ஒரு ராசியில் தங்கி இருக்கும் காலம் சவுர (அ) சூரிய மாதம்; 27 நாட்களைக் கொண்டது நட்சத்திர மாதம் எனப்படும். விரதகாலத்தில் தரையில் உறங்க வேண்டும். ஜபங்களை விடாமல் செய்ய வேண்டும். பிராமணர்களுக்குத் தக்ஷிணை, தானம் தர வேண்டும். பசு, சந்தனக்கட்டை, பாத்திரங்கள், நிலம், குடை, கட்டில் போன்றவை தானப் பொருள்களாகும்.

27. விரதங்கள்

1. பிரதமை விரதம் : அமாவாசை பவுர்ணமி அடுத்த நாள் பிரதமை. சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம். வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு நீண்ட ஜடைகளுடன் இருக்க வேண்டும். பகவானுக்குப் பாயச நிவேதனம் செய்ய வேண்டும். இதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.

2. துவிதியை விரதம் : இந்த விரதத்தால் ஒருவன் அடுத்த பிறவியில் முக்தி அடைவான். பிரதமை விரதம் முடித்து அடுத்த நாள் யம விரதம் மேற்கொள்ள வேண்டும். கார்த்திகை மாதம் அமாவாசை அடுத்த துவிதியையில் விரதம் தொடங்கி ஓர் ஆண்டு அனுஷ்டிப்பவர்க்கு நரகம் இல்லை.

சூன்ய சயன விரதம் : ஆவணி மாதத்தில் துவிதியை திதியில் தொடங்கி இந்த விரதம் அனுஷ்டித்தல் நலம். ஸ்ரீமந் நாராயணனுக்குரிய விரதம் இது. விஷ்ணு, லக்ஷ்மியையும் சேர்த்து இவ்விரதம் செய்ய தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்வும், முக்தியும் பெறுவர்.

காந்தி விரதம் : கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் துவிதியையில் தொடங்கி அனுஷ்டித்தால் தேக காந்தியும், நலவாழ்வும் பெறுவான்.

விஷ்ணு விரதம் : தை மாதம் அமாவாசை அடுத்த துவிதியையில் தொடங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். முதல் நாள் அன்னம் தேய்த்து ஸ்நானம், இரண்டாம் நாள் கருநிற எள் தேய்த்து நீராடல், மூன்றாம் நாள் வாசனைப் பொருள்கள் தேய்த்து நீராடல், நான்காவது நாள் சர்வ ஒளஷதணி என்ற மருந்து பொருள்கள் கொண்டு நீராடல்.
விஷ்ணுவையும், சந்திரனையும் ஆராதித்தல் வேண்டும். சந்திரன் அஸ்தமனத்திற்குப் பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இதைப் பதினெட்டு நாட்கள் அனுஷ்டித்தால் வாயுவின் அருளொடு, விரும்பும் பொருள்கள் தடையின்றி கிடைக்கும்.

3. திருதியை விரதம் : சித்திரை திருதியை அன்று கவுரி சிவனை மணந்த நாள். அன்று மங்கல ஸ்நானம் செய்து கவுரி, சிவன் இருவரையும் வழிபட வேண்டும். இருவரையும் அர்ச்சித்தல், தானங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மார்கழியின் வளர்பிறை துவிதியையில் தொடங்கி தேவியை வழிபட்டு அந்தணத் தம்பதிகளுக்கு உணவளித்து, தானங்கள் அளித்தல்; மற்றும் இருபத்து நான்கு அந்தணர்களுக்கு உணவளித்தல் உகந்தது. இதனைச் சவுபாக்கிய சயன விரதம் என்பர்.
சவுபாக்கிய விரதம் : பங்குனி வளர்பிறை திருதியையில் தொடங்கிச் செய்தல். உப்பில்லா உணவு உட்கொள்ளுதல், அந்தணத் தம்பதியருக்கு உணவு அளித்துத் தர்மங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மாசியிலும் செய்யலாம்.
தமனசத் திருதியை விரதம் : இதில் தேவியை மருக்கொழுந்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஆத்ம திருதியை விரதம் : மாசி வளர்பிறை திருதியையில் தொடங்கி மாதம் ஒரு அம்பிகையை (கவுரி, காளி, உமா, பத்திரை, துர்க்கை, காந்தி, சரஸ்வதி, வைஷ்ணவி, லக்ஷ்மி, பிரகிருதி, சிவை, நாராயணி வழிபடுவோர் சொர்க்க வாசம் பெறுவர்.)

4. சதுர்த்தி விரதம் : சந்தோஷ வாழ்வும், மோக்ஷ சாம்ராஜ்யமும் தரும். மாசி வளர்பிறை சதுர்த்தி அன்று கணபதி பூஜை செய்து உபவாசம் இருக்க வேண்டும். மறுநாள் பஞ்சமி பகவானுக்கு எள்ளோரை நிவேதனம். மற்றும் மலர்கள் சாத்தி கொழுக்கட்டை நிவேதனம். புரட்டாசி சதுர்த்தி விரதம் சிவலோகம் அளிக்கும். பங்குனியில் இதற்கு அவிக்ஞா சதுர்த்தி என்று பெயர். சித்திரையில் சதுர்த்தி மனமகிழ்ச்சி அளிக்கும்.

5. பஞ்சமி விரதம் : உடல் நலம், சொர்க்கவாசம், மோக்ஷம் அளிக்கும் பஞ்சமி அன்று வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்திரன், ஐராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகிய சர்ப்ப வழிபாடு. ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி விரதம் நீண்ட ஆயுள், திரண்ட செல்வம், புகழ், ஞானம் தரும்.

6. ஷஷ்டி விரதம் : சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பர். அதாவது ஷஷ்டி விரதம் புத்திரபாக்கியம் அளிக்கும். கார்த்திகை மாத வளர்பிறை ஷஷ்டி விரதம் வழிபாடு சிறந்தது. அன்று பழம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். புரட்டாசி வளர்பிறை சஷ்டி கந்தசஷ்டி ஆகும். மாசிமாத வளர்பிறை சஷ்டி கிருஷ்ண ஷஷ்டி ஆகும். அன்று இருக்கும் விரதம் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் தரும்.

7. சப்தமி விரதம் : ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சப்தமி அன்று தாமரை மலர் கொண்டு சூரியனை வழிபட்டால் ஆனந்தமய வாழ்வு, அடுத்த பிறவியில் முக்தி உண்டாகும். மாசி மாத சப்தமி விரதம் உள்ளவரை துன்பம் அண்டாது. புரட்டாசி மாதமும் அவ்வாறே. தை மாத விரதம் சக்தி உண்டாகும்; பாபம் தொலையும். மாசி மாத தேய்பிறை சப்தமி விரதம் மனோமாத தேய்பிறை சப்தமி விரதம் மனோபீஷ்டம் நிறைவேறும். பங்குனி மாத வளர்பிறை சப்தமி நந்தா சப்தமி விரதபலன் தெய்வ பக்தி வளரும். உத்தமலோக வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

8. அஷ்டமி விரதம் : புரட்டாசி மாத அஷ்டமி, ரோகிணியின் அஷ்டமி-அன்று கிருஷ்ணாஷ்டமி ஆகும். இது ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி என்றும் கூறப்படும். அபாயம் நீங்கும். சந்ததி வளரும். சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி அன்று பிரம்மன் அஷ்டமாதாக்களை வழிபட்டார். அன்று கிருஷ்ண வழிபாடு செல்வம் அளிக்கும். ஒவ்வொரு மாத அஷ்டமியிலும் ஒவ்வொரு கடவுளை வழிபாடு செய்யலாம். பகவானை ஆராதித்தல், தானதருமம் செய்தல் வேண்டும்.
சந்ததி விரதம் : சுக்ல பட்சம் (அ) கிருஷ்ணபட்ச அஷ்டமி புதன் அன்று வந்தால் அன்று அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.

புதாஷ்டமி விரத பலன்-கதை

கவுசிகன், சகோதரியுடன் காணாமல் போன எருதைத் தேடிச் செல்ல ஓரிடத்தில் தேவலோக மாதர்கள் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பசிக்கு உணவு கேட்க, அவர்கள் விரதம் ஒன்று கூற அதை அனுஷ்டித்து உணவும், காணாமல் போன காளையையும் பெற்றான். அவன் சகோதரி விஜயை யமன் மணந்தான். அவன் பெற்றோர்கள் நரகில் அவதிபட்டு வந்தனர். கவுசிகன் அரசனாகி புதாஷ்டமி விரதம் இருந்த பலனால் அவனது பெற்றோர்கள் நரகம் நீங்கியது. அதுகேட்ட விஜயையும் அந்த விரதம் இருந்து அதன் பலனால் மரணத்திற்குப் பின் பேரின்ப வாழ்வு பெற்றாள்.

9. நவமி விரதம் : ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ நவமி அன்று இருந்த விரதம் இருந்து தேவியை ஆராதிக்க வேண்டும். நவமி விரதங்களிலே மிகவும் சிறந்தது அனார்த்தன நவமி விரதம். அரசன் தேவியை நவதுர்க்கை வடிவில் வழிபட வேண்டும். அரசன் நீராடி எதிரியின் உருவை இரண்டாக வெட்ட வேண்டும். தான தருமங்கள் செய்ய வேண்டும். வெற்றிபெறுவான்.

10. தசமி விரதம் : ஒருவேளை உணவு. விரத முடிவில் கோதானம், சுவர்ண தானம் செய்ய வேண்டும். அவன் தெய்வபக்தி நிறைந்தவனாய், பெருந்தலைவனாய் விளங்குவான்.

11. ஏகாதசி விரதம் : உத்தம பொருள்கள் கிடைக்கும், மகிழ்ச்சி தரும். அடுத்த பிறவியில் மோக்ஷம் கிட்டும். ஏகாதசி நியம நிஷ்டைகளுடன் உபவாசம் இருந்து துவாதசி பாரணை செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசி அன்று பூசநட்சத்திரம் கூடி வந்தால் அது பாப நாசினி எனப்படுகிறது. சர்வபாபங்களும் விலகும் விரதம் இது. ஏகாதசி (அ) துவாதசி அன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அது விஜயதிதி ஆகும். தெய்வ அருள் கிட்டும். பங்குனி மாத ஏகாதசி, பூசம் இணைந்து வந்தாலும் விஜயதிதி எனப்படும். ஏகாதசியில் விஷ்ணு ஆராதனை-திரண்ட செல்வம், சந்தான விருத்தி, வாழ்வின் முடிவில் வைகுந்தம் கிட்டும்.

12. துவாதசி திதி : இவ்விரதம் அனுஷ்டிப்பவன் சுகபோகங்கள் பெறுவதுடன் அடுத்த பிறவியில் மோக்ஷமும் அடைவான். சித்திரை மாத சுக்கிலபக்ஷ துவாதசி மதன துவாதசி எனப்படும். அன்று விஷ்ணு பகவானை மன்மதனாக எண்ணி வழிபடல் வேண்டும். மனோ பீஷ்டம் அனைத்தும் நிறைவேறும். மாசி மாத சுக்கில துவாதசி பீம துவாதசி ஆகும். அன்று நாராயணனை ஆராதித்தால் சுகயோக வாழ்வு கிட்டும். பங்குனி மாத சுக்கில துவாதசி கோவிந்த துவாதசி. ஐப்பசி மாத சுக்கில துவாதசி விசேஷ துவாதசி, மாசி மாதம் அது கோவத்ஸ துவாதசி எனப்படும்.

சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி தில துவாதசி எனப்படும். பங்குனி மாத சுக்கில துவாதசி மனோரத துவாதசி ஆகும். நாம துவாதசி விரதம் அன்று விஷ்ணுவின் நாமங்களைக் கூறி வழிபடல். பங்குனி மாத சுக்கில துவாதசி சுமதி துவாதசி எனப்படும். புரட்டாசியில் அனந்த துவாதசி, தை மாதத்தில் சம்பிராப்த துவாதசி மாசி மாதம் சுக்ல பக்ஷ துவாதசி அகண்ட துவாதசி விரதம்.

13. அனங்க திரயோதசி விரதம் : மாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதியில் அரனைக் காதல் தெய்வமாக வழிபடல். விரதம் இருப்பவன் தேனை உட்கொள்ள வேண்டும். நெய், எள்ளு, அன்னம் ஆகியவற்றால் ஹோமம் செய்ய வேண்டும். தையில் அதே திதியில் யோகேஸ்வரனை ஹோமம் முதலியவற்றால் ஆராதித்தால் சொர்க்கவாசம் அடைவான். மாசி மாதம் திரயோதசியில் மகேச்வரனை வழிபடுவதால் முக்தி கிட்டும். பங்குனியில் நீரை மட்டும் பருகி பகவான் கரோல்கரை ஆராதிக்க வேண்டும். சித்திரையில் கற்பூரம் உட்கொண்டு மகேசுவரனை வழிபட்டால் செல்வத்துக்கு அதிபதி ஆவான்.

வைகாசியில் ஜாதிப்பத்திரி உண்டு மகாரூபனையும், ஆனியில் கிராம்பை உட்கொண்டு உசாகாந்தனையும், ஆவணியில் நறுமணநீர் உட்கொண்டு சூலபாணியையும், புரட்டாசியில் சத்யோ ஜாதரையும், ஐப்பசியில் தங்கம் வைத்திருந்த நீரை உட்கொண்டு தேவதேவனையும், கார்த்திகையில் இலவங்கச் செடியை சமைத்து உட்கொண்டு விசுவேஸ்வரனையும், மார்கழியில் சம்புவையும் ஆராதிக்க வேண்டும்.

14. சதுர்த்தசி திதி விரதம் : கார்த்திகை மாதம் சுக்ல சதுர்த்தசி உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டித்து ஓர் ஆண்டு சிவனை ஆராதித்தால் நீண்ட ஆயுளைப் பெறுவதோடு சகல அபீஷ்டங்களும் நிறைவேறும். சதுர்த்தசி அன்று பழம் மட்டும் உண்டு சிவனை ஆராதிப்பவர் ஆனந்த மயவாழ்வைப் பெற்று, சொர்க்கத்தையும் பெறுவர்.

15. சிவராத்திரி விரதம் : மாசி, பங்குனி மாதங்களுக்கு இடையே கிருஷ்ண பட்ச சதுர்த்தசி அன்று உபவாசமிருந்து, இரவில் கண் விழித்து இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். சிவனை பக்தியுடன் ஆராதிக்க வேண்டும்.

16. பவுர்ணமி விரதம் : நாராயணனையும், சிவனையும் குறித்துச் செய்யப்படுவதாகும்.

அசோக பவுர்ணமி விரதம் : சித்திரை மாதப் பவுர்ணமி அன்று சிவனைப் பூதாகாரராக வழிபட வேண்டும். அடுத்து, பூதேவி வழிபாடு. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஓராண்டு காலம் செய்ய வேண்டும்.

17. அமாவாசை விரதம் : விருஷ விரதம் : ஒவ்வொரு அமாவாசை அன்றும் பிண்டம் இட்டுத் தர்ப்பணம் செய்ய வேண்டும், முழுநாள் உபவாசம். ஓராண்டு செய்பவன் பாபங்களிலிருந்து விடுபட்டு சொர்க்கவாசம் அடைவான். மாசிமாத அமாவாசை அன்று நாராயணனை ஆராதிப்பவன் மனோபீஷ்டங்கள் நிறைவேறும். ஆனி மாத அமாவாசை அன்று சாவித்திரி விரதம்.

18. நட்சத்திர விரதம் : ஒவ்வொரு நட்சத்திரமும் உச்சத்தில் இருக்கும் தினத்தில் ஹரியை ஆராதித்துக் கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. இதன் மூலம் ஒருவன் தன் வாழ்நாளில் எல்லாவித ஆசைகளும் நிறைவேறப் பெறுவான். ஹரியைச் சித்திரை மாதத்தில் நட்சத்திர புருஷனாக வழிபட வேண்டும். அவரது உடலில் 27 நட்சத்திரங்களும் இருப்பதாகப் பாவிக்க வேண்டும். பகவான் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பூசிக்க வேண்டும். கருப்பஞ்சாறு (அ) சர்க்கரை நீர் நிறைந்த பாத்திரத்தில் பகவானை ஆவாகனம் செய்து வழிபட வேண்டும்.

19. சாம்பவயனிய விரதம் : ஒவ்வொரு மாதமும் இவ்விரதம் இருப்பவன் ஹரியை நட்சத்திர புருஷனாக வழிபடவேண்டும். கார்த்திகை, மிருகசீர்ஷம் ஆகிய நட்சத்திரங்களில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி பொங்கலையும், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இனிப்புப் பலகாரங்களையும், கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் அன்னத்தையும் நிவேதனமாய் படைக்க வேண்டும்.

20. அனந்த விரதம் : நட்சத்திர விரதங்களில் அதிக பலனைத் தரும் விரதம் இது. மார்கழி மாதத்தில் மிருகசீர்ஷ நட்சத்திரத்தன்று ஹரியை வழிபட்டு விரதம் இருக்கவேண்டும். அன்றிரவு பகவானுடைய ஆராதனைக்கு பிறகு உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

21. திரிராத்திரி விரதம் : ஒவ்வொரு பக்ஷத்துக்கும் மூன்று இரவுகளில் விரதமோ உபவாசமோ இருப்பதாகும். மூன்று நாட்கள் ஒரு கவளம் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். இதனை முதலில் சுக்ல நவமியில் தொடங்க வேண்டும். முதல் நாள் அஷ்டமி அன்று ஒரு வேளை உணவு இரவு உபவாசம்.

22. தேனு (பசு) விரதம் : பசுவின் வாயிலும், வாலிலும் தங்கத்தைக் கட்டி ஆராதித்து அந்தணர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். நெய்யை சிறிது உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும். பலன் முக்தி கிட்டும்.

23. கற்பக விருக்ஷ தான விரதம் : மூன்று நாட்கள் நெய் மட்டும் சிறிது உட்கொண்டு தங்க கற்பகவிருக்ஷத்தை ஆராதித்து தானம் தருபவன் பிரம்மலோகம் அடைவான்.

24. கார்த்திகை விரதம் : கார்த்திகையில் சுக்ல தசமியில் உபவாசம் இருந்து விஷ்ணுவை ஆராதிப்பவன் வைகுந்தம் அடைவான்.

25. கிருச்ச மகேந்திர விரதம் : கார்த்திகை மாதம் சுக்ல ஷஷ்டியில் முதல் மூன்று நாட்கள் இரவில் பால் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்.

26. கிருச்ச பாஸ்கர விரதம் : கார்த்திகை சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று தயிரை மட்டும் உட்கொண்டு அனுஷ்டித்தால் செல்வம் கொழிக்கும்.

27. சந்தாபன விரதம் : கார்த்திகை சுக்கில பஞ்சமியில் விரதம். கோதுமையால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்ண வேண்டும்.

28. கவுமுத விரதம் : ஐப்பசி சுக்கில துவாதசியில், வயிற்றில் உணவின்றி தாமரை, மற்றும் நறுமண மலர்களால் விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். நல்லெண்ணெய், நெய்யாலான பலகாரங்கள் நிவேதனம். இவையே அன்றி மாத விரதங்கள், ருது காலங்களில் விசேஷ விரதங்கள் அனுஷ்டித்தால் அடுத்த பிறவியில் முக்தி அடைவர்.

29. சரசுவதி விரதம் : ஒரு மாதம் மவுனம். முடிவில் அந்தணர்களுக்கு மணிகள், ஆடைகள், எள் குடங்கள், நெய் நிறைந்த பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்தால் தெய்வீகத் தன்மையை அடைவர்.

30. விஷ்ணு விரதம் : சித்திரை சுக்கில ஏகாதசி அன்று விஷ்ணுவை ஆராதித்து அன்று உபவாசம் இருந்தால், அவரது திருவடியில் ஐக்கியமாகலாம்.

31. சங்கராந்தி விரதம் : சங்கராந்தி அன்று இரவு கண்விழித்து விரதம் இருப்பின் சொர்க்க வாழ்வு கிட்டும். அன்று அமாவாசையும் கூடி வந்தால் சிவன், சூரியன் வழிபாடு தேவலோக வாசம் அளிக்கும்.

32. தீபதான விரதம் : நல்லெண்ணெய் ஊற்றி சுடரொளி விளக்குத் தானம் செய்யின் சிறப்பான வாழ்வும், முக்தியும் பெறுவார்.
தீபத்திரியை தூண்டிய எலி : (கதை) மன்னன் சாருதர்மனின் மனைவி லலிதை. தினமும் அவள் விஷ்ணு ஆலயத்தில் தீபங்கள் ஏற்றி வந்தாள். மற்ற பெண்கள் அவளிடம் தீபதான விரதம் பற்றிக் கேட்க அவள் கூறலுற்றாள். மைத்திரேய முனிவர் சவ்வீரன் என்ற அரசனுக்குக் குருவாக இருந்தார். முனிவர் ஒருநாள் மன்னனிடம் விஷ்ணுவுக்கு ஓராலயம் எழுப்பவேண்டும் என்று கோரிட, அரசனும் உடனே அதற்காகப் பணியைத் தொடங்கினான். அந்த ஆலயத்தைச் சுற்றிலும் எலிகளும், பூனைகளும் இருந்தன. ஒரு எலி ஆலயக் கருவறையில் ஒரு வளையில் வசித்து வந்தது. அது கீழே சிந்திக் கிடந்த படையல் பொருள்களை யாரும் இல்லாத சமயங்களில் இரவு நேரங்களில் தின்று வந்தது. ஒரு நாள் இரவு பூட்டப்பட்டிருந்த கருவறையில் ஒரு விளக்கில் எண்ணெய் குறைந்து சுடர் குறைந்தது. அப்போது அந்தச் சுண்டெலி தீபத்தின் திரியை வெளியில் தள்ளி ஒளிரச் செய்தது. அதாவது ஆலயத்தில் அணைய இருந்த தீபத்தை ஒளிரச் செய்யும் கைங்கரியத்தைப் பலனேதும் வேண்டாமல் செய்தது. அதனால் அந்த எலி மரணமடைந்தவுடன் அடுத்த பிறவியில் விதர்ப்ப நாட்டு அரசன் குமாரத்தி லலிதையாகப் பிறந்தது என்று தன் முன் வரலாற்றைக் கூறினார். ஏகாதசி அன்று ஆலயத்தில் தீபம் ஏற்றுபவன் சொர்க்க வாசம் பெறுவான். அன்றிலிருந்து அனைவரும் ஆலயத்தில் தீபம் ஏற்றும் பணியைத் தொடங்கினர்.

பூக்கள்: தீபம் ஏற்றுவது போல ஸ்ரீஹரியை பலவித நறுமண மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடலாம். பூசைக்குப் பயன்படும் மலர்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பலன் சொல்லப்படுகிறது. மாலதி மலர் மிகச்சிறந்தது. மருக்கொழுந்து ஆனந்த வாழ்வு தரும். மல்லிகை சகல பாவங்களையும் போக்கும். ஜாதி, மலயத்தி, குருக்கத்தி, அலரி, முட்செவ்வந்தி, தகனா, கர்ணீகாரம் ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்தால் வைகுந்த வாசம் அளிக்கும். தாமரை, கோதகி, குந்தம், அசோகம், திலகம், தருசமலர்கள் ஆகியன முக்தி அளிக்கும். சமீபத்திரன், பிருங்கராஜ புஷ்பம், தமாலம், கல்காரம், கருந்துளசி, பொன் துளசி ஆகியவற்றால் அர்ச்சிப்பவன் வைகுந்தத்தில் விஷ்ணுவின் பக்கத்திலேயே இருப்பான். கோகநதம், நூறுவில்லி மலர்மாலை, ரூபம், அர்ஜுனம், வகுளம், சிஞ்சுகம், மணி, கோகானம், சந்தியா, குசம், காசம் ஆகிய மலர்களின் அர்ச்சனை, பாபங்கள் நீக்கும், நெடுநாள் ஆனந்த வாழ்வு அளிக்கும், இறுதியில் மோக்ஷமும் தரும். இவை விஷ்ணு பூஜைக்கு உகந்தவை. மணம் மிக்க பிரம்ம பத்மம், நிலத்தாமரை ஆகியவை கொண்டும் விஷ்ணுவை ஆராதிக்கலாம்.

தர்மராஜனை ஆராதிக்க உதவுபவை குதஜம், சால்மலி, சிலிசம் மந்தாரை, துஸ்துரம் ஆகியவை. பகவானைப் பல வண்ணமிகு, நறுமண மலர்களால் ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது மானச புஷ்பங்கள் ஆகும். அதாவது, எட்டு வகை சிறந்த குணங்களே அந்த மானச மலர்கள். அவை : 1. ஜீவஹிம்சை செய்யாதிருத்தல். 2. தன் கட்டுப்பாடு. 3. உயிர்களிடம் அன்பு. 4. திருப்தியுடன் இருத்தல். 5. தெய்வ பக்தி. 6. பகவானைத் தியானித்தல். 7. வாய்மை. 8. பற்றற்றிருத்தல்.
28. பாபிகளுக்கு நரகத் தண்டனைகள்: நாள்தோறும் இறைவனைப் பக்தியுடன் ஆராதித்து வருபவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலைச் சேர்ந்திடும். ஆனால், பாபிகளின் ஆன்மா நரகத்தை அடைந்து தண்டனை பெறும்.

மரணத்தின் போது உடலை விட்டு ஆன்மா நீங்கி வேறொரு உடலில் புகுகிறது. அவனவன் செய்த கர்மாக்களுக்கேற்ப அவர்கள் மறுபிறவி நிர்ணயிக்கப்படுகிறது. உடலை விட்டு அகன்ற ஆத்மாவை யம தூதர்கள் யமனிடம் அழைத்துச் செல்லுகின்றனர். தீய கர்மாக்கள் செய்தவரின் ஆத்மா யம பட்டணத்தில் தெற்குவாயில் வழியாகச் சென்று நரகத்தை அடையும். நரகங்கள் மகரவிசி, அமரகும்பம், ரௌரவம், மகாரௌரவம், அந்தகாரம், அசிபத்திரவனம், காகோலம், குத்தலம், துர்க்கதம், நிருச்சாசம், மனஜ்வாலம், அம்வரிசம், வஜ்ரசஸ்திரகம், காலசூத்திரம், உக்கிரகந்தம் என்று பலவகை. அவரவர் செய்த தீய கர்மாக்களுக்கேற்ப நரகத்தில் தண்டனைகள் அளிக்கப்படும். தண்டனைகளும் பலவிதமாகின்றன. விலக்கப்பட்ட உணவை உண்டவன் உதிரத்தை அருந்த வேண்டும். நம்பிக்கைத் துரோகி, மூர்க்கன் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் வறுக்கப்படுவான்.

அயோக்கியர்கள் தீயில் பொசுக்கப்படுவர். பிறர் இல்லாளை விரும்பியவன் அவயவங்கள் ரம்பத்தால் அறுக்கப்படும். பிறரை இழித்தவன் கொதிக்கும் வெல்லப்பாகில் தள்ளப்படுவான். பொய்ச்சாட்சி கூறியவன், பிறர் பணத்தைக் கவர்ந்தவன், மது அருந்திய அந்தணன், துவேஷி, நட்பைக் கெடுத்தவன் ஆகியோர் கொதிக்கும் செப்புக்குழம்பில் தள்ளப்படுவர். நரகத்திலிருந்து தப்பவேண்டி நினைப்பவர் ஒரு மாத காலம் உபவாசம், ஏகாதசி விரதம், பீஷ்ம பஞ்சக விரதம் போன்றவற்றை அனுஷ்டித்தால் பலன் பெறலாம்.

29. பலவகை தானங்கள்:

அந்தணர்களுக்குத் தானங்கள் அளிப்போர் இப்பிறவியில் உலக சுகங்களைப் பெறுவதுடன், அடுத்த பிறவியில் முக்தியும் அடைவர். எனவேதான், ஒவ்வொரு பூஜை, விரதம் ஆகியவற்றிற்குப் பின் தானங்கள் வற்புறுத்தப்படுகின்றன. தானங்கள் பலவகை.

1. அக்னிஹோமம், தவ விரதங்கள் கடைபிடிப்பது, வேத நெறியில் நடப்பது, உண்மை பேசுவது, கர்மாக்கள் செய்தல் போன்றவை இஷ்ட தானங்கள் எனப்படும். நீர் நிலைகள் எடுத்தல், ஆலயம் அமைத்தல், அன்னச்சத்திரம் கட்டுதல், பழமரங்கள் நடுதல், சத்திரம் கட்டுதல், போன்றவை, மற்றும் கிரகண காலம், சூரியன் ஒரு ராசியில் பிரவேசித்தல், துவாதசி திதியில் அளிக்கப்படும் தானங்கள் பூர்த்தி தானங்கள் எனப்படும். இவை பன்மடங்கு பலன்களைத் தரும். சிராத்த கர்மங்களின் போதும், அயன புண்ணிய காலங்களிலும் செய்யப்படும் தானங்கள் நான்கு (அ) எட்டு மடங்கு பலன் தரும். கயை, பிரயாகை, கங்கைக் கரை போன்ற புண்ணிய தலங்களில் மற்றவரைத் தேடிச் சென்று தானம் அளிக்க வேண்டும். தானம் கொடுப்பவர், வாங்குபவர், கோத்திரம், பாட்டன், முப்பாட்டன் பெயர்களைக் கூற வேண்டும். இதனால் இரு சாராரின் ஆயுளும் பெருகும். திருமணத்தின் போது பெண்ணுடன், மருமகனுக்குத் தரவேண்டியவை குதிரை, சுவர்ணம், எள்ளு, யானை, பணிப்பெண்கள், வீடு, வாகனம், சிவப்பு நிறப் பசுக்கள், தச மகாதானப் பொருள்கள் ஆகிய பத்து ஆகும்.

கல்வி போதித்தல், பராக்கிரமம், நியமங்கள், பெண்ணை மணம் செய்தல், பிறருக்கு யாகம் செய்து வைத்தல், சீடனிடமிருந்து குரு தக்ஷிணை பெறுதல் ஆகிய செல்வம் சுல்கம் எனப்படும். தீயவழியில் பொருளீட்டி தானம் செய்தால் ஏற்படும் நல்ல பலன்களும், தீமைகளும் அவனைச் சேரும். மணப்பெண்ணுடன் ஸ்ரீதனமாக ஆறு முக்கியப்பொருள்கள் தரப்படும். அவை அத்தியக்கனி (அ) ஹோம குண்டத்தின் முன்பு அளிக்கப்படும் பரிசு பொருள்கள், புருஷன் வீட்டுக்குப் புறப்படும் போது அவளுடைய நண்பர்கள், கணவன் அளிக்கும் பரிசுப்பொருள்கள், தந்தை தரும் பொருள்கள், தாய், சகோதரர் ஆகியோரால் அளிக்கப்படுபவை. தகுதி கொண்டவர்களுக்குத் தக்கப் பொருள்களைத் தானம் செய்ய வேண்டும். ஞானவான், நற்குணவான், தரும ஆர்வம் உடையவர். உயிர்களிடம் கருணை உள்ளவர்களே தானம் பெறத் தகுதி வாய்ந்தவர். தாய்க்கு அளிக்கும் பரிசு நூறு மடங்கு உயர்ந்தது. தானம் பெறுபவன் நீராடி, தூயவனாய் கையில் நிஷ்க்கலன் ஏந்தி நிற்க, தானம் அளிப்பவன் சாவித்திரி மந்திரம் கூறி அப்பொருளின் பெயர், அதனால் திருப்தி அடையும் தெய்வத்தின் பெயர் கூறி தானம் அளிக்க வேண்டும்.

யாருக்கு என்ன தானம் : விஷ்ணுவுக்கு பூமி; பணிப்பெண், வேலையாள். பிரமனுக்கு யானைகள், யமனுக்கு குதிரைகள், சிவனுக்குக் காளை; யமனுக்கு எருமை; நிருத்திக்கு ஒட்டகம், ரௌத்ரிக்குப் பசு, அக்கினி தேவனுக்கு ஆட்டுக்கடா, வாயுவுக்கு காட்டு மிருகங்கள், வருணனுக்கு நீர் பாத்திரம்; பிராமணனுக்கு தானியங்கள், சமைத்த உணவுகள், இனிப்புப் பலகாரங்கள். பிரஜாபதிக்கு நறுமணப் பொருள்கள். பிரகஸ்பதிக்கு ஆடைகள், வாயுவுக்குப் பறவைகள், சரசுவதிக்கு பிரம்ம வித்தைகள், புத்தகங்கள், விசுவகர்மாவுக்குக் கலைகள் தூய்மையானவை. ஒருவன் தேவதைகளைப் பூஜித்து, முன்னோர்களை வணங்கி தானம் அளிக்க வேண்டும். மஹாதானங்கள் பதினாறு உத்தமமானவை.

துலாபுருஷதானம், ஹிரண்ய கர்ப்ப தானம், கல்பக விருக்ஷதானம், ஸஹஸ்ர கோதானம், சுவர்ண தேனு தானம், சுவர்ண ஹஸ்தி தானம், சுவர்ண வாகன தானம், சுவர்ண அசுவதானம், சுவர்ண ரத தானம், பஞ்ச ஹலா தானம், கல்பலதா தானம், சப்த சாகர தானம், ரத்தினதேனு தானம், மஹாபூதகண தானம், இவற்றுள் துலாபுருஷ தானம் மிகவும் சிறந்தது.
பத்துவகை மேரு தானங்கள் : பத்து வகை தானியங்களை அலை போலக் கொட்டி மேருமலையாகக் கொண்டு தானம் செய்வது. உப்பு தருதல்-லவண தானம், வெல்லப் பாகு தருதல்-குளாத்ரி தானம், எள் தருதல்-திலாத்திரி தானம், பஞ்சு தருதல்-பஞ்சுமலை தானம், நெய்குடம் கொடுத்தல்-கிருதாசல தானம், வெள்ளி கொடுத்தல்-ராஜதாசல தானம், சர்க்கரை கொடுத்தல்-சகிக்ராசல தானம். தேனு தானம் (அ) பல பொருள்களைப் பசு வடிவில் தருவது பத்து வகையாகும். தேனு தானம் எனப்படும் கோதானம் செய்வதால் ஒருவன் இப்பிறவியில் நீண்ட ஆயுளையும், செழிப்பான வாழ்வையும் பெறுவதோடு, மரணத்துக்குப் பின் சொர்க்கவாசம் பெறுவான்.

தங்கம், வெள்ளி, செம்பு, அன்னம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கும் போது தனியாக தக்ஷிணை தரவேண்டிய அவசியம் இல்லை. எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானமாகும். பூதானம், வித்தியா தானம் (அ) புத்திர தானம் ஒன்றுக்கொன்று சமமானதாகும். ஆலயத்தில் புராணம் படிப்பவன் எல்லா விதமான பலனையும் பெறுவான். ஆலயத்தைத் தூய்மை செய்தல் பாபம் நீக்கும். தர்ம, நீதி நெறிமுறைகளை அச்சிட்டு வழங்குவதால் எல்லாவித நன்மையும் தரும்.

30. ஆண், பெண் லக்ஷணம்

லக்ஷணங்களுக்கு முன் நம் உடலில் உள்ள பலவகை நாடிகள்-பிராணன்கள் பற்றி அறிதல் உதவியாக இருக்கும். நம் உடலில் ஏராளமான நரம்புகள், இரத்தக் குழாய்கள் உள்ளன. நாபிப் பகுதியிலேயே எழுபத்திரண்டாயிரம் நரம்புகள் உள்ளன. நரம்புகள் எனப்படுபவற்றுள் பத்து நாடிகள் மிகவும் முக்கியமானவை. இடை நாடி, பிங்கலை நாடி, சுஷும்ன நாடி, காந்தாரி நாடி, ஹஸ்தி ஜிஸ்வை நாடி, பிரீதை நாடி, யøக்ஷ நாடி, ஆலம்புஷை நாடி, ஹுஹு நாடி, சங்கிலி நாடி என்பவை அவை. நம்முடலில் தசவித வாயுக்கள் உள்ளன. அவை முறையே பிராண வாயு, அபான வாயு, சமான வாயு, உதான வாயு, வியான வாயு, நாக வாயு, கூர்ம வாயு, கிரிகரன் வாயு, தேவதத்த வாயு, தனஞ்சய வாயு என்பன ஆகும்.

பிராண வாயுவே இதயம் துடிப்பதற்கும், நாம் மூச்சு விடுவதற்கும் காரணமாகும். இது இன்றேல் உடலில் உயிர் தங்காது. அபான வாயு ஜீரணமண்டலக் காவலன் ஆகும். உணவு செரிக்கப்பட்டு உடலில் எல்லாப் பகுதிகளுக்கும் செரித்த உணவு அடைவதற்கும், கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் உதவுவது அபான வாயு ஆகும். உடலில் இரத்தம், பித்தம், வாதம் சமானமாக உதவுவது சமான வாயு; முகத்தினுள்ள தசைகளை இயங்கச் செய்வது உதான வாயு; பூட்டுகளில் இருந்து விக்கல் உண்டாக்குவது  பியான வாயு; இதன் கோளாறு நோய்க்கு ஏதுவாகும். ஏப்பத்தை உண்டாக்குவது நாக வாயு; இமைகளை இயக்குவது கூர்ம வாயு; உணவு செரிக்க ஜடாராக்கினியாக உதவுவது கிரிகரன் வாயு; கொட்டாவிக்குக் காரணம் தேவதத்தன் வாயு; அனைத்து இயக்கங்களைக் கவனிப்பவனும், மரணத்துக்குப் பின் உடல் சுருங்காமல் இருக்கவும் காரணம் தனஞ்சயன் வாயு ஆகும்.

நன்முறையில் நாடி, நரம்புகள், இரத்தஓட்டம், வாயுக்கள் பணி செவ்வனே அமைந்து விட்டால் நல்ல அழகிய அம்சமான உடல் தோற்றம் அமைந்து விடும். உடலும், உள்ள ஒழுக்கமும் நன்கு அமைந்து விட்டால் அதுவே ஸ்திரீ, புருஷ லக்ஷணங்களுக்கு அடிப்படையாகும். சிறந்த வாழ்க்கையை நடத்தக்கூடிய ஒருவனுக்குக் குறிப்பிட்ட எட்டு வகை லக்ஷணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பற்றி அறிந்து கொள்வோம்:

1. ஏகாதிகம் : முறைப்படி நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்து, நல்லொழுக்கம் பெற்றவன் வாழ்வில் சுகமும், மகிழ்ச்சியும் பெறுவான்.

2. துவிசுக்லம் : கண்களும், பற்களும் இரண்டும் வெண்மை நிறம் கொண்டதாய் இருக்க வேண்டும்.

3. திரிகம்பீரம் : திரி=மூன்று. கண்கள், நாபி-ஆழமுடைய நாசி, ஆழ்ந்த பொறுமை என்ற மூன்று ஆழங்களை இது குறிக்கிறது.

4. திரி த்ரகம் : அதாவாது (3*3=9) ஒன்பது குணங்களைக் குறிக்கிறது இது. பொறாமை இன்மை, அஹிம்சை, அனைத்து விடத்தும் அன்பு, பொறுமை, நன்மையே செய்தல், தூய்மை, விருப்பம், கள்ளம் இல்லாமை, மன உறுதி என்ற நற்குணங்களை ஒருவன் பெற்றிருக்க வேண்டும்.

5. திரிப்ரலம்பங்கள் : கைகள், குறி, முதுகு என்ற மூன்றும் நீளமாக அமைந்திருத்தல்.

6. திரிவாவி : வயிற்றின் மீது காணப்படும் மூன்று மடிப்புகள் இவை.

7. திரிவித்தல் : மூன்று முக்கிய விதிகள். அதாவது இறைவன், அந்தணன், தன் முன்னோர்களிடம் பணிவு கொண்டிருத்தலாகும் இது.

8. திரிகாலக்ஞம் : காலம் இயைந்த மூன்று வகை ஒழுக்கங்களைக் குறிப்பது. நேரம் அறிந்து மகிழ்ச்சி அடைதல், லாபம் ஈட்டல், அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் நன்மை தரும். திரிவியாபின் மூன்று வகையில் புகழ் கொண்டு பரந்திருத்தல் இது. தன்னைச் சார்ந்தோர், தன் நாட்டார், உலகினர் என மூன்று நிலையில் புகழ்பெற்று விளங்குவது அவசியம். திரிவிஸ்தீர்ணம்-விஸ்தீர்ணம்=பரப்பு, மார்பு, முகம், முகநெற்றி அகன்றிருப்பதைக் குறிக்கும் இது.

9. சதுர் லேகை : நான்கு வகை குறிகள், இரு கைகள், இருகால்களில் கொடிகள், குடைகள் போன்ற குறிகள் அதிருஷ்டத்தைக் குறிக்கும். முதுகு, மார்பு விரல்களுடைய தசைகள் அகன்றிருப்பதும் நன்மையே.

10. சதுர்தம்ஸ்திரம் : முத்துப்போல் வெண்மை நிறத்தில் முன் நான்கு பற்கள் இருத்தல்.

11. சதுர்கந்தம் : மூக்கு, முகம், அக்குள், விடும் மூச்சுக்காற்று-துர்கந்தமாக இருக்கக் கூடாது.

12. சதுர்கிருஷ்ணம் : (கிருஷ்ணம்=கருப்பு) கண் புருவங்கள், கேசம், இரு கண்விழிகள் (ஆகிய நான்கும்) கருப்பாய் இருத்தல்.

13. சதுர் ஹ்ரஸ்வம் : (ஹ்ரஸ்வம்=குறுகி இருத்தல்) கழுத்து, குறி, முழங்கால், பூட்டுக்கள் குறுகி (அ) சிறுத்து இருத்தல் ஆகும். விரல் நகங்கள் உயர்ந்து மிருதுவாக இருக்க வேண்டும். மெல்லிய தோல், கற்றையான கேச வளர்ச்சி இருக்க வேண்டும்.

14. ஷடோன்னதம் : ஷட் (ஆறு) உன்னதம்) உயர்ந்த கன்னங்கள், உயர்ந்த கதும்பு எலும்புகள், உயர்ந்த மூக்கு இருக்கவேண்டும்.

15. சப்தஸ் நிக்தம் : (சப்த-ஏழு) தோல், தலையில் கேசம், உடலில் மயிர், விரல், நகங்கள், பார்வை, பேச்சு ஆகியவை பரவசம் உடையதாக இருத்தல் வேண்டும்.

16. அஷ்ட வாசம் : (அஷ்டம்-எட்டு) மூக்கு, முதுகெலும்பு, இரு துடைகள், முழங்கால், முழங்கை மூட்டுக்கள் ஆகிய எட்டும் நேராக அமைந்திருக்க வேண்டும்.

17. நவாமலம் : (நவ-ஒன்பது) வாய், மூக்குத் துவாரங்கள், கண் இமைகள், ஆசனவாய், முகம், காதுகள் தூயதாக இருக்க வேண்டும்.

18. தசபத்மம் : (தச-பத்து) நாக்கு, மேல்வாய், கண்விழி நரம்புகள், உள்ளங்கைகள், பாதங்கள், விரல் நகங்கள், குறியின் நுனி, வாய் உதடுகள், தாமரை நிறத்தில் இருக்க வேண்டும்.

19. தசவ்யூகம் : முகம், கழுத்து, காதுகள், மார்பு, தலை, வயிறு, முன் நெற்றி, கைகள், கால்கள் முதலியன வளர்ச்சியோடு இருக்க வேண்டும்.

20. நியக்ரோத பநிமண்டலம் : ஒருவன் நிற்கும் போது உடலின் நீள, அகலம், கைகள் சமமாக இருக்க வேண்டும்.

21. சதுர்த்தச சமாத்வந்தம் : கணுக்கால்கள், ஆடுசதை, இமை பக்கங்கள், விரைகள், மார்புகள், காதுகள், உதடுகள் சமமாக இருக்க வேண்டும்.

22. ஷாடஷம் : பதினான்கு பிரிவு வித்தைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இரு கண்களிலும் நல்ல பார்வை இருக்க வேண்டும். ஒருவனது உடலில் ஒரே மயிர்க்கால்கலிலிருந்து இரண்டு மயிர்கள் வளர்ந்திருந்தால் தீமையைக் குறிக்கும். அதிருஷ்டமுடையவன் குரல் இனிமையாகவும், நடை யானை போலும் இருக்கும். இதற்கு 14 அங்க அமைப்புகளும், எட்டு லக்ஷணங்களும் புகழைத் தேடித் தரும்.

எத்தகைய பெண் அதிருஷ்டசாலி

நல்ல தோற்றம், நல்ல வளர்ச்சி, உருண்ட துடைகள், இடை, அலைபாயும் விழிகள் கொண்டு இளமையுடன் கூடிய பெண் அதிருஷ்டசாலி. நீண்ட அடர்த்தியான கருமை நிற கேசம், எடுப்பான மார்பகம், நெருங்கிய கால்கள், நடக்கையில் சீரான காலடி, உடலில் காணப்படும் மிகையான உரோமங்கள் நீக்கப்பட்டவளுமான பெண்ணும் அதிருஷ்டசாலிதான். அரசுஇலை போன்ற இரகசிய இடம், நடுவில் சிறுபள்ளம் கொண்ட கணுக்கால்கள், கட்டைவிரல் நுனி அளவு உள்ள நாபித் துவாரம் உடைய பெண் புகழத்தக்க அமைப்புகளைக் கொண்டிருப்பவள் ஆவாள். ஒரு பெண்ணின் அடிவயிற்றில் கட்டமான மாற்றமுள்ள மயிர்கள் இருந்தால் அது கஷ்டங்களையே குறிக்கும். ஒரு பெண் அண்டை அயலாருடனும், உறவினருடனும் சண்டை போடுதல், பேராசை கொண்டிருத்தல், துர்நாற்றவாய் இருப்பின் அது அவளுக்குச் சாபக்கேடு ஆகும். குறைபாடுகள் காணப்படினும், மதுக மலர் போன்ற கன்னம், மூக்குக்கு நேரே தனித்த புருவங்கள், கணவனை முழு மனத்துடன் நேசிப்பவள் என்றால் அவளை மனைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

31. கனவு காணுதல்-பலன்கள்

வாழ்க்கையே கனவு. கனவு காண்பதால் நன்மைகள் ஏற்படலாம். பல கனவுகள் இரவில் தூங்கும்போதே காணப்படுகின்றன. அவை தீமையை விளைவிக்கும்.

தீய கனவுகள்: நாபி தவிர மற்ற இடங்களில் தாவரங்கள் வளர்ந்திருப்பது, தலை மொட்டையடிக்கப்பட்டுள்ளது, உடல் முழுவதும் சேறு, ஆடையில்லா நிர்வாண உடல், உயரத்திலிருந்து கீழே விழுதல், தொட்டிலில் இங்கும் அங்குமாக ஆடிக்கொண்டிருத்தல், கம்பி வாத்தியங்களில் இசைத்துக் கொண்டிருத்தல் என்று இவ்வாறு காணப்படும் கனவுகள் தீமையையே குறிக்கும். மேலும் சில : இரும்புத்தாது பொருக்குதல், இறந்த பாம்பு குறுக்கில் கிடத்தல், சண்டாளனைக் காணுதல், செந்நிறப்பூக்கம் பூத்துக் குலுங்குதல் போன்றவை வரப்போகும் துன்பத்துக்கு அறிகுறியாகும். மேலும் கரடி, கழுதை, நாய், ஒட்டகச் சவாரி, சந்திரன், சூரியன் நிலைபெயர்தல், மீண்டும் கர்ப்பவாசம் அடைதல், சிதையில் ஏறுதல், பூகம்பம் போன்ற உற்பாதங்கள், மூத்தோர் சினத்துக்கு ஆளாதல் போன்ற கனவுகள் துன்பத்தையே குறிக்கும். ஆற்றில் மூழ்குதல், சாணி கரைத்த நீரில் நீராடல், கன்னிப் பெண்ணுடல் சல்லாபம், அங்கம் இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற கனவுகள் தீமையையே காட்டுகின்றன.

தெற்கு நோக்கிப் பயணம், பயங்கர நோய் பீடித்திருத்தல், உலோகப் பானை உடைதல், பூதம், பிசாசு, அரக்கர்களுடன் விளையாடுதல் போன்றவையும் தீமையையே அறிவிக்கின்றன. பிறருடைய ஏசல், மிகுந்த கஷ்டம், சிவப்பு நிற ஆடை உடுத்தி இருத்தல், சிவப்பு நிறமாலை, சந்தனம் போன்றவையும் நிகழக்கூடிய தீமையை அறிவிப்பவையே.
பரிகாரம்: பயங்கரக் கனவுகள் கண்டால், விழித்தெழுந்து, கைகால் கழுவி பகவானைத் தியானித்தபடி உறங்க வேண்டும். தீயகனவுகள் ஏற்படின் ஓமம் செய்த, புனித நீரால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். அரி, அரன், அயன், விநாயகர், சூரியன் ஆகியோரை அர்ச்சித்து வழிபடலாம். புருஷஸுக்தம் மனதிலேயே சொல்லிக் கொள்ளலாம்.

பலன்: இரவில் முற்பகுதியில் கண்ட கனவு ஓராண்டிலும், இரண்டாம் பகுதியில் கண்ட கனவு ஆறு மாதத்திலும், மூன்றாம் பகுதியில் கண்ட கனவு மூன்று மாதங்களிலும், நான்காம் பகுதியில் கண்டது பதினைந்து நாட்களிலும் பலன் தரும். விடியற்காலை கனவு பலன் பத்து நாட்களில் தெரியும். ஓர் இரவில் இருமுறை கனவு கண்டால் பின்னதே பலிக்கும்.
நன்மை பயப்பவை: மலை ஏறுதல், அரண்மனை மேல் முற்றத்தில் உலாவுதல், குதிரை, யானை, ரிஷபச்சவாரி, வெண் மலர்கள் பூத்துக் குலுங்குதல் ஆகிய கனவுகள் நன்மை பயப்பவை. வெண்ணிற ஆடை, பூக்கள், நரைத்த முடி போன்றவை நல்ல கனவுகள். கிரகணம், பகைவன் தோல்வி, போரில் வெற்றி, போட்டி, சூதாட்ட வெற்றி, மழையில் நனைதல், நிலம் வாங்குதல் போன்றவை நன்மையைக் காட்டும் கனவுகள். மேலும் பச்சை மாமிசம் உண்ணுதல், இரத்த தானம் செய்தல், மது, போர், சோமபானம் உட்கொள்ளல், குருதியில் நீராடல் போன்றவை நன்மையை அறிவிக்கும் கனவுகள். கையில் கத்தியுடன் நடத்தல், தோட்டத்துக்கு வேலி அமைத்தல், பசு, எருமை, பெண்குதிரை, சிங்கம், யானை, மடியில் பால் அருந்துதல், பெரியோர்கள் தேவர்கள் ஆசி கூறல், பசுக்கொம்பிலிருந்து கொட்டும் நீர் தெளிக்கப்படல் ஆகியவை வரப்போகும் நன்மையைக் காட்டும் கனவுகள்.

சந்திரக் கலையிலிருந்து கீழே விழுதல், சிங்காதனத்தில் முடி சூடுதல், சிரச்சேதக் கனவுகள் கண்டார் அரசுரிமை எய்துவர். மரணம், தீயில் எரிதல், அரசின் பரிசு பெறுதல் ஆகியவையும் நல்லவையே. குதிரை, யானை, காளை காணல், அரசவைக்குச் செல்லுதல், உறவினர்கள் சேர்க்கை, காளை, யானை சவாரி, கொடிக்கம்பம் மீது ஏறுதல், மேல்மாடியில் நடத்தல், நிர்மலமான ஆகாயம், காய் கனிகளுடன் குலுங்கும் மரங்கள் போன்றவை மனமகிழ்ச்சியை அளிக்கக்கூடிய கனவுகள். ஓர் ஆணின் வலது கண் தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடித்தலும் இன்ப அதிருஷ்டம் ஆகும்.

32. சகுனங்கள்:

ஒரு வேலையாக வீட்டை விட்டுப் புறப்படுகையில் காணத்தக்க நற்சகுனங்கள் : கருப்பு நிறமில்லா தானியங்கள், பஞ்சு, வைக்கோல், சாணம், காசுகள் நல்ல சகுனம். பறவைகள் சகுனம் நேரம், அதன் திசை, இடம், செய்யும் ஒலி, ஒளியின் தன்மை, செய்யும் பறவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

பறவை (அ) பட்சி சகுனங்கள்

பரத்துவாசம், கருடன், டேகை, கோட்டான் வலமிருந்து இடம் போனாலும், காகம், நாராயணபட்சி, கன்னி, கிளி, மயில், காக்கை, கொக்கு, குயில் இடமிருந்து வலம் போனாலும் சுபசகுனம்.

பிராணிகள் : அதேபோல் மான், கிளி, அணில், நாய், பூனை, மூஞ்சூறு வலமிருந்து இடம் போனாலும், நரி, குரங்கு, மாடு, எருமை, ஜவ்வாது பூனை இடமிருந்து வலம் போனாலும் அபசகுனம் ஆகும். தூங்கி எழுந்தவுடன் நற்சகுனமாக பார்க்கத் தக்கவை தாமரைப் பூ, தீபம், தணல், தனது வலக்கை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு, கண்ணாடி, சூரியன், கோபுரம், சிவலிங்கம், சந்தனம், கடல், வயல் முகில் ஆழ்ந்த மலை ஆகியவை சுபம் தரும். ஒருவன் புறப்படும்போது இடப்புறம் காகத்தின் குரல் கேட்டாலோ, அவனுடன் இடதுபுறத்தில் பறந்து வந்தாலோ, நன்மை தரும் சகுனம். மாறாக, வலப்புறத்தில் காகத்தின் குரல் கேட்டாலோ, வலப்புறத்தில் பறந்து வந்தாலோ, எதிரில் இடது புறமாகப் பறந்து வந்தாலோ நல்லதல்ல.
புறப்படும் போது காணக்கூடாதவை : சண்டாளன், வெல்லப்பாகு கலன், சாலமரம், மொட்டை மனிதன், எண்ணெய் தேய்த்த உடல், நிர்வாண ஆள், மனநோயாளி, ஆண்மையற்றவன், கர்ப்பிணி, விதவை, கசாப்புக்கடைக்காரன், பறவை வேடன். அரசன் புறப்படும்போது குதிரை காலடி தவறுதல், ஆயுதம் நழுவி விழுதல், ஆடைகள் நழுவுதல், குடை கவிழுதல், தேர் ஏறும்போது கால் தவறுதல் போன்றவை கூடாது. அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் பயணத்தை நிறுத்தி, விஷ்ணுவை ஆராதித்து வழிபட்டு அதன் பின்னரே பயணத்தை மறுபடியும் தொடரவேண்டும்.

அயல்நாட்டுப் பயணத்திலிருந்து திரும்பி வரும் மன்னன் வெண்மலர்கள், நீர் நிறைந்த குடங்கள், முதியோர், பசு, குதிரை, யானை, தேவதை உருவங்கள், எரியும் அக்கினி, பசும்புல், தங்கம், வெள்ளி ஆயுதங்கள், ரத்தினங்கள், பழங்கள், தயிர், பால், கண்ணாடி, சங்கம், கரும்பு, மேக இடி ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்து உள்ளே நுழைய வேண்டும். நாய் ஊளையிடுவது மரண அறிகுறி. அபசகுனம். இரண்டு யானைகள் எல்லோரும் அறிய இன்புறல், பெண் யானை குட்டிபோடல், மதயானை போன்றவையும் மரண அறிகுறிகளே. ஒரு யானை இடது முன்கால் மீது வலது முன் காலை போட்டிருந்தால், வலது புறத்தில் தந்தத்தைத் தும்பிக்கை சுற்றிக் கொண்டிருந்தால் நற்சகுனம். ஒரு குதிரை எதிரியைக் கண்டதும் உடல் சிலிர்த்து, முன் கால்களால் தரையை உதைத்துக் கொண்டு, உக்கிரமாகப் பாய்ந்து சென்றால் வெற்றி நிச்சயம்.

33. ராஜ தருமம், ராஜ நீதி

ராஜ தருமம், ராஜ நீதி பற்றிய விவரங்கள் திருக்குறள், அர்த்தசாஸ்திரம் ஆகிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கே, அக்னி புராணத்தில் கூறியவற்றுள் முக்கியமான சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி அவனது குறிக்கோள் நாட்டு நலனைப் பற்றியே இருக்க வேண்டும். அரசன் தன் தருமத்தில் பிறழாது, நீதி நெறி வழுவாமல் ஆட்சி புரிய வேண்டும். அரசன் பட்டத்துக்கு வந்த ஒரு வருடம் கழித்தே பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். தனக்குரிய மனைவி, அமைச்சர், ராஜகுரு ஆகியவர் சாஸ்திரங்கள் கற்றுணர்ந்தவர்களாகவே கொள்ள வேண்டும். ராஜகுரு மன்னனையும், பட்டத்தரசியையும் எள், அரிசி, தலையில் தேய்த்து மங்கல ஸ்நானம் செய்வித்து ஜயவிஜயிபவ என்ற முழக்கத்துடன் அரியாசனத்தில் அமர்த்த வேண்டும். ராஜ்ஜியாபிஷேகத்துக்கு முன் இந்திர சாந்தி என்னும் யாகத்தைச் செய்து வைக்க வேண்டும்.

பிராமண மந்திரி தங்கக் குடத்தில் நெய் நிரப்பி வந்து அபிஷேகம் செய்விக்க வேண்டும். க்ஷத்திரியனாகில் வெள்ளிக் குடத்தில் மோர் கொண்டும், வைசியனாகில் செப்புக்குடத்தில் தயிர் கொண்டும், மற்றவர் மண் குடத்தில் நீர் ஏந்தியும் முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளிலிருந்து அரசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து குரு புனித குடநீரை அமைச்சர், அதிகாரிகள் தலை மீது தெளிக்க வேண்டும். பின்னர் பல பொருள்களை அவற்றுக்கேற்ற மந்திரங்கள் கொண்டு அபிஷேகம் செய்விக்க வேண்டும். மகுடாபிஷேகம் சாஸ்திர முறைப்படி செய்து வைக்க வேண்டும். படைகளுக்கு பிராமணன் (அ) க்ஷத்திரியனைத் தளபதி ஆக்க வேண்டும். நற்குணம், நல்லொழுக்கம் உள்ளவர்களையே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். சிறந்த அறிவாளி, பேசக்கற்றவர்களைத் தூதுவனாக நியமிக்க வேண்டும். மெய்க்காப்பாளர்கள் வலுவுள்ள, திறமையுள்ள, ஆயுதபாணிகளாக இருக்க வேண்டும். ரத்தினங்களின் மதிப்பு அறிந்தவர், நாணயமானவரைக் கருவூல அதிகாரியாக நியமிக்க வேண்டும். அதேபோல் அரண்மனை வைத்தியர், குதிரை யானைக் காப்பாளர்கள் அந்தந்த வித்தையைக் கற்றுணர்ந்து அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்.

அந்தப்புரத்தில் பெண்களையே பணிப்பெண்களாக நியமிக்க வேண்டும். அங்காங்கு பல துறைகளில், பல நாடுகளில் ஒற்றர்களை நியமித்து ஆட்சி நன்கு அமையுமாறு செய்ய வேண்டும். நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் மிக்க கவனம் செலுத்த வேண்டுமும். ஆறுவித அரண்களை அரசன் பெற்றிருக்க வேண்டும். தனுர் துர்க்கம், மகிதுர்க்கம், நரதுர்க்கம், அக்ஷதுர்க்கம், அப்புதுர்க்கம், கிரிதுர்க்கம். இவை நில அரண், நீர் அரண், காட்டரண், மலையரண் ஆகியவை. ஆலயங்களை நன்கு பராமரிக்க வேண்டும். ஆறில் ஒரு பங்கு வரி வசூலிக்க வேண்டும். தவறு செய்பவர்களைக் கண்டுபிடித்து தவறுகள் நடவாமல் மக்கள் சாந்தியுடன் வாழ மன்னன் அடிகோல வேண்டும். ஒரு மன்னனின் ஆட்சி நிலையாக இருக்க மன்னனது திறமை, தேர்ச்சி உடைய மந்திரிகள், வளமுள்ள நகரங்கள், அரண்கள்,கடுமையான தண்டனை, பிறநாட்டவரிடம் நட்பு ஆகியவை மிகவும் அவசியம். அரசன் சூரியன் போன்ற ஒளியும், சந்திரின் போன்ற குளிர்ச்சியும், குற்ற விசாரணையில் தருமர்; துன்பம் நீக்குவதில் அக்கினி தேவன்; ஏழைகளுக்கு வழங்குவதில் வருணன், மக்களைக் காப்பதில் விஷ்ணுவாக விளங்க வேண்டும்.
திருடன், கொலைக்காரன், சொத்தை அபகரிப்பவன், பொய்யன், வழிபறிச் செய்பவன், மனைவி, உறவினர்களைத் தவிக்க விடுபவன், பெண்களின் கற்பைக் கெடுப்பவன், ஒழுக்கமற்ற வியாபாரி, போன்றவர்களை அவரவர்கள் குற்றங்களுக்கேற்ப நீதிநெறி தவறாமல் தண்டனை அளித்து அவர்களைத் திருத்தி நாட்டை அமைதியுடன் ஆள்வது அரசன் கடமையாகும்.

34. படைகள், படைக்கலன்கள்

மன்னனுடைய குறிக்கோள் போரில் வெற்றி பெறுவதே என்றாலும், தோல்வியுற்று சரணமடைந்த (அ) வீர மரணம் அடைந்த பகை மன்னனையும், அந்த நாட்டை நிர்வகிப்பதிலும் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். போரை உடனே நிறுத்தி, கொள்ளையடிப்பதை நிறுத்துவது, பசு, பிராமணர், பெண்களுக்குப் பாதுகாப்பு, ஆலயப் பராமரிப்பு இவற்றிற்குப் பாதகம் இன்றி நடந்துகொள்ள வேண்டும். போர் முடிந்து அமைதி ஏற்பட்ட பிறகே திறமை காட்டியவர்களுக்கு பரிசுகள், பதவிகள் அளித்து கவுரவிக்க வேண்டும். போரில் படைகளை கட்டுக் கோப்பு குலையாமல் வியூகங்கள் அமைக்க வேண்டும். அவை பல வகை : மகர வியூகம், கருடவியூகம், அர்த்தசந்திர வியூகம், வஜ்ர வியூகம், சகட வியூகம், மண்டல வியூகம், சர்வதோ பத்திரி வியூகம், சூசி வியூகம் என்பவை.

வியூகத்தில் ஐந்து பகுதிகள்-முதலாவது உடல், இரண்டு மூன்றாவது அதன் பக்கங்கள், நான்கு ஐந்து இருபக்கச் சிறகுகள். ஒன்று அல்லது இரண்டு பகுதிகளுக்கு மேல் நேரிடத் தாக்குதல்களில் ஈடுபடாமல், மற்ற பகுதிகள் உதவியாக இருக்க வேண்டும். போரில் உயிருக்குப் பயந்து ஓடுபவன், காயமுற்றவர்களைக் கொல்லக்கூடாது. அந்தப்புர மாதர்களைக் கவுரவமாக நடந்த வேண்டும். வெற்றி முழக்கத்துடன் நாடு திரும்பிய மன்னன் முக்கியமான இரண்டு காரியங்களை உடனடியாகக் கவனிக்க வேண்டும். போரில் மரணமடைந்தவர் குடும்பங்களுக்கும், அங்கவீனமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் தக்க மானியங்கள் அளித்து அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் செல்ல வேண்டும். வெற்றிக்கு இறைவனே காரணம் என உணர்ந்து நன்றி செலுத்த வழிபாடுகள் செய்ய வேண்டும்.

படைக்கலங்கள்

அரசனுடைய சாமரம் தங்கக் கைப்பிடியுடன் குடையின் மீது அன்னம், மயில், கிளி, நாரை ஏதாவதொரு பறவையின் இறகுகளைக் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். அந்தணர் குடை சதுரமாகவும் , அரசன் குடை வட்டமாகவும், வெண்மை நிறத்திலும் இருக்க வேண்டும். காம்பு 28 அடி நீளம் இருக்க வேண்டும். குறுக்குக் கட்டைகள் க்ஷீர மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஓரங்களில் முத்துக்களாலான பதக்கங்களும், குஞ்சங்களும் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். வில்லின் காம்பு இரும்பு, மாட்டுக் கொம்பு (அ) மரத்தினால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அதன் நாண் மூங்கில் நார் அல்லது வேறு பொருள்களால் ஆகியதாக இருக்க வேண்டும். வில்லின் காம்பை தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவற்றால் செய்யலாம். ஆனால், மாட்டுக் கொம்பால் செய்வது உத்தமமானது. மூங்கிலால் செய்யப்பட்ட வில்லே சிறந்தது. மூங்கில் (அ) இரும்பால் அம்புகள் செய்யப்படலாம். அவற்றின் பின்பகுதியில் இறகுகளை அமைத்து எண்ணெயில் ஊறவைக்க வேண்டும்.

ஒரு சமயம் கங்கைக் கரையில் பிரமன் பகவானைக் குறித்து ஹோமம் முதலிய கர்மாக்களால் ஆராதித்து வந்தார். ஓர் அரக்கன் அங்கு வந்து தடைகள் உண்டாக்க எண்ணினான். அப்போது அக்கினிதேவன் தோன்றினார். மற்ற தேவர்களும் அவரை வணங்கினார். அங்கிருந்த விஷ்ணு அக்கினிதேவன் வைத்திருந்த நந்தகம் என்ற கத்தியை வாங்கி அரக்கனை அவனது உடலின் பல இடங்களில் வெட்டினார். வெட்டுப்பட்ட இடங்கள் பூமியிலே விழுந்தன. அவை இரும்பாக மாறின. அவையே பூவுலகில் ஆயுதங்களாகட்டும் என்றார். எனவே ஆயுதங்கள் இரும்பால் செய்யப்படுகின்றன. உத்தமமான வாள் ஐம்பது விரற்கடை நீளம் இருக்க வேண்டும். கத்தி மோதும் போது சிறு மணி எழும்பும் ஓசையைப் போல் ஒலி எழுப்பின் அது சிறந்தது. கத்தியின் வலிமை பற்றிப் பிறரிடம் பேசக்கூடாது.

35. இரத்தின வகைகள்

இரத்தினங்கள் அனேகம். ஆனால் குறிப்பாக, சிறந்த ஒன்பதை மட்டும் நவரத்தினங்கள் என்று குறிப்பிடுவர். மக்களும், மன்னனும் இரத்தினங்களை உபயோகிக்கின்றனர். ஒருவனுக்கு செழிப்பான, வளமான வாழ்வு அமைய முத்து, நீலம், வைதுர்ஜம், இந்திரநீலம், சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல், ஸ்படிகம், புஷ்பராகம், ஜ்யோதிராம், ராஜபட்டம், ராஜமயம் ஆகிய இரத்தின வகைகளை அணிய வேண்டும். ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற கந்தகம், முத்து சிப்பி, கோமேதகம், ருத்ராக்ஷம், பவழம், நாகரத்தினம் தங்கத்தில் பதித்து அணிய வேண்டும். குறையின்றி, உட்புறமிருந்து ஒளி வீசி, நன்கு பதிக்கப்பட்ட இரத்தினம் நல்ல அதிருஷ்டம் அளிக்கும். ஒளியற்று, பிளவுபட்டு, சொர சொரப்பானவற்றை ஒருபோதும் உபயோகிக்கக் கூடாது.

பிறை போன்றதாய், அறுகோணமாய், எளிதில் உடையாததாய், நீரோட்டம் உடையதும், உச்சிகால சூரியனைப் போன்ற ஒளி கொண்டதுமான இரத்தினங்களையே உபயோகிக்க வேண்டும். மரகதக்கல் தூய்மையானதாய், குளிர்ச்சி ஒளி கொண்டு, கிளிபோல் பச்சைநிறம் கொண்டிருக்க வேண்டும். உட்புறம் தங்க நிறப் படிகங்கள் கொண்டிருக்க வேண்டும். பதுமராகம் ஒளியுடன் கூடிய சிவப்பு நிறம் கொண்டிருக்கும். சிப்பிகளில் காணப்படும் முத்துக்கள் சிவப்பு நிறத்தை உடையனவாகவும் வெள்ளை நிறச் சிப்பிகளில் உள்ள முத்துக்கள் வெண்மையாகவும் இருக்கும். மூங்கில், யானை, கரடி, கன்னப்பொறிகள், மீன்கள் மூளையிலும் முத்துக்கள் உண்டாகும். வெண்மை நிறம், வெளிப்பொருளைப் பார்க்கும் தன்மை, எடை, உருண்டை முத்துக்களில் கவனிக்க வேண்டும். இந்திர நீலக்கல்லைப் பாலில் அமிழ்த்தினால் பாலும் நீலமானால் அது நல்லது. வைடூர்யம் சிவப்பு, நீல நிறங்களில் விதுர நாட்டில் எடுக்கப்படுகிறது.

36. தனுர் வேதம்

அக்கினி தேவன் வசிஷ்ட முனிவருக்கு தனுர் வேதம் என்னும் வில் வித்தையைப் பற்றிக் கூறலுற்றார். தேரோட்டுனர், யானை வீரர், குதிரை வீரர், மற்போர் வீரர், காலாட்படையினர் என்று வீரர்கள் ஐந்து வகையினர். (பொதுவாக நால்வகைச் சேனை என்றும் சொல்வர். ரத, கஜ, துரக, பதாதி; தேர், யானை, குதிரை, காலாள்.) ஆயுதங்களும் ஐந்து வகையாகும். பொறிகள் கொண்டு எறியப்படுபவை, கைகளால் எறியப்படுபவை, கையை உபயோகித்துப் பின்னர் நிறுத்திக் கொள்ளப்படுபவை, கைகளில் நிலையானவை. துவந்த யுத்தத்தில் கைகள் மட்டுமே. மேலும் போர்க்கருவிகள் நீளமானவை, வளைவானவை என இரண்டு வகை. முதல் வகை-அம்புகள், தீப்பந்தங்கள். இரண்டாவது-ஈட்டி, கவண்கல். மூன்றாவது-சுருக்குக் கயிறு. நான்காவது-வாள், கத்தி, வில், அம்பு.

வில்போரே சிறந்ததாகக் கருதப்படுகிறது. பிராமணன், க்ஷத்திரியன் இருவரும் தனுர் வித்தையைக் கற்பிப்போர் ஆவர். வில்லைக் கையில் ஏந்தி நாணை இழுத்துப் பூட்டி எய்வதற்குத் தக்க பயிற்சி வேண்டும். அம்பை எய்த மறுகணம் கை பின்னுக்குச் சென்று அடுத்ததைத் தொடுக்க வேண்டும். விரைவைப் பொருத்து ஒருவன் வெற்றி அடைவான். இப்பயிற்சியில் இலக்குகள் மூன்று வகை

1. நேர் பார்வைக்குக் கீழாகவும், மேலாகவும் உள்ள இலக்குகள் துஷ்கரம் எனப்படும்.

2. தலைக்குக் கீழே தூரத்தில் உச்சிக்கும் இடையே உள்ளவை சித்ர துஷ்கரம் ஆகும்.

3. ஒளியற்ற கூறிய முனை உடையதாய் நேர் பார்வைக்கும் அடிவானத்துக்கும் கீழே உள்ளது த்ரிதம்.

இலக்கு நோக்கி இடப்பக்கமிருந்தும், வலப்பக்கமிருந்தும், குதிரை மீது இருந்தும் குறி தவறாது எய்ய சிறந்த திறமைக்கேற்ற பயிற்சி தேவையாகும். நகர்ந்து செல்லும் பொருள்கள், சுழலும் பொருள்கள் ஆகியவற்றையும் குறி தவறாது அடிக்கும் திறமை பெறுதல் அவசியம். இவ்வாறு பலவகையிலும் போர்க்களத்தில் வில்லேந்தி அம்பெய்தி குறி தவறாமல் செலுத்தி, மற்றும் அவற்றிற்கான தேவதா மந்திரங்களை உச்சரித்து எய்தல் போன்ற சகல வித்தைகளும் கற்றவன் வில்லுக்கு விசயன் என்று பெயர் பெறுவான்.

37. அபிஷேக வகைகள், பலன்கள்

காயத்திரி மந்திரத்தை நீரிலிருந்து ஜபித்தாலும், பிராணாயாமத்துடன் ஜபித்தாலும் மந்திரத்தைக் கூறி ஹோமம் செய்தாலும் மனோ பீஷ்டங்கள் நிறைவேறும். இடுப்புவரை நீரில் சென்று பிரணவ மந்திரத்தை நூறுமுறை ஜபித்து, புனித நீரைச் சிறிது உட்கொண்டால் தோஷங்கள் நீங்கி புனிதம் ஏற்படும். நாட்டில் நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம் போன்ற உற்பாதங்கள் நிகழும் போது அக்கினியை ஆராதிக்க வேண்டும். விஷ்ணுவின் திருமேனிக்குத் திருமஞ்சனம் (நீராட்டம்) செய்தால் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் ஏற்படும். தீர்த்தங்களை ஆலயம், இல்லம் ஆகியவற்றில் திருமஞ்சனம் செய்யலாம். குறை பிரசவம் பெறும் பெண்கள் தாமரை மலரில் விஷ்ணுவை இருத்தி திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்தால் அந்தக் குறை நீங்கும். மக்களை இழந்த பெண் அசோக மரத்தின் கீழ் விஷ்ணு திருஉருவை வைத்து ஆராதித்தால் நன்மை ஏற்படும்.
திரண்ட செல்வம் பெற விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்து ஆராதிக்க வேண்டும். உதகசாந்தி செய்து, அந்த நீரால் நீராட்டி ஹோம காரியங்கள் செய்ய வேண்டும். நெய்யபிஷேகம் நீண்ட ஆயுளைத் தரும்.

கோமலம், கோநீர் அபிஷேகம் தோஷங்களை நீக்கும். பாயச அபிஷேகம் உடல், உள்ளம் வலிமை தரும். இன்னும் தர்ப்பை, நீர், பஞ்சகவ்வியம், வில்வ இதழ், தாமரை இதழ், தங்கம், வெள்ளி, செம்பு, சர்வகந்த நீர், பழச்சாறு, தேன் போன்றவற்றைக் கொண்டு செய்யும் அபிஷேகம் பலவித பயனை அளிக்கும். பகவான் விஷ்ணுவின் திருமேனியைத் திருவடித் தாமரைகளை திருமஞ்சனம் செய்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொள்வது சிறந்தது, உத்தமமானது. அந்த நாள் முழுவதும் பகவத் தியானத்தில் ஈடுபடல், தானங்கள் செய்தல், பகவானை அர்ச்சித்தல் ஆகியவற்றினால் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். விஷ்ணு பஞ்சரம் என்ற மந்திரத்தை முறைப்படி ஜபித்தால் எதிரி அழிவான். வலன் என்ற அசுரனை அழிக்க இந்திரன் இந்த மந்திரத்தைக் குருவிடம் கற்று பிரயோகித்தான். திரிபுரதகனத்தின் போது சிவபிரானுக்கு இம்மந்திரம் பயன்பட்டது.

38. தேக தத்துவம், நோய்க்கு மருந்து தேக தத்துவம்

பிறந்த குழந்தை அசைதல், கை கால்களை அசைத்தல், ஒலி கேட்க உதவுவது ஆகாயத்தின் தன்மை; அது புரண்டு படுக்கவும், சுவாசிக்கவும் உதவுவது வாயு; குழந்தையின் பித்த கோசத்தை இயங்கச் செய்வது, தோலுக்கு நிறம் தருவது, ஜீரண உறுப்புகளைச் செயல்பட செய்வது அக்கினி; இரத்தஓட்டம், சுவை அறிதல், கழிவுப்பொருள்களை அகற்ற உதவுவது நீர்; முகரும் உணர்ச்சி தருவது, உரோமம், நகம் வளர்ச்சி, உடல் ஆகியவற்றுக்குக் காரணம் பூமி; ஆக ஐம்பூதங்களே ஒருவனுடைய தேக நிலையை உண்டாக்குகிறது. ஒரு குழந்தை தந்தையிடமிருந்து இரத்தக்குழாய், நரம்பு, வீரியம் ஆகியவற்றையும், தாயிடமிருந்து மற்றவற்றையும் பெறுகிறது.

ஒருவனுடைய குணநலன்கள் தாமச குணத்தாலும், விருப்பம், வீரம், கர்மாக்கள் செய்தல், ஆர்வம், தற்புகழ்ச்சி, அலட்சியம் ஆகியவை ராஜஸகுணத்தாலும் உண்டாகின்றன. இலட்சியம், மற்ற நற்குணங்கள், தெய்வபக்தி ஆகியவை சாத்வீக குணத்தால் உண்டாகின்றன. வாதத்தின் ஆதிக்கத்தால் ஒருவனது அமைதியின்மை, கோபத்தால் கீழே விழுதல், வளவள என்று பேசுதல், வெட்கப்படுதல் காணப்படும். பித்த ஆதிக்கம் ஒருவனை முன்கோபி ஆக்கும். மேலும் முடிஉதிர்தல், அறிவை வளர்த்துக் கொள்வதும் அதனாலேயே ஆம்; அன்புடைமை, இடைவிடாத முயற்சி வாதத்தின் நோக்கம் ஆகும். செயல்பாட்டுக்குக் கர்மேந்திரியங்களும், பரப்பிரம்ம சொரூப ஞானம் பெற ஞானேந்திரியங்களும் உதவுகின்றன. இருபத்து நான்கு தத்துவங்களைக் கொண்டது ஜீவன். உத்தம ஜீவன் உடலை விட்டு மேல்நோக்கி வெளியேறும். யோகிகளுடைய ஜீவன் உச்சந்தலையைப் பிளந்து கொண்டு வெளிப்படும். அது உத்தமமானது.

மறுபிறவி

உடலை நீங்கிய ஜீவன், ஒரு சூக்கும சரீரம் அடைந்து யம பட்டணம் அழைத்துச் செல்லப்பட்டு அதன் கர்மாவுக்கேற்ப நரக வாசம் அனுபவிக்கிறது. கோரம், அகோரம், அதிகோரம், மகாகோரம், கோரரூபம், தாரள தரம், பயானகம், ப்யோதிகரம், காலராத்திரி, மகாசண்டம், சண்டம், கோலாகலம், பிரசண்டம், பத்மம், நாகநாயிகம், பத்மாவதி, பீஷணம், பீமம் கராலிகம், பிகரானம், மகாவஜ்ரம், திரிகோணம், பஞ்சகோணம், சுத்ரிகம், வர்துலம், சப்தபூமம், சபூமிகம், தீப்தம் என்பவை இருபத்தெட்டு முக்கிய நரகங்கள். ரௌரவம், தூமிச்ரம் முதலியவை நரகத்தின் உட்பிரிவுகள். பாபங்களுக்கேற்ப நரகத்தில் தண்டனைகள் அளிக்கப்படும். (விவரங்கள் : நரகலோகம்-விஷ்ணு புராணம்)

துன்பங்கள் வகை

மனத்தால் ஏற்படும் துன்பங்கள் அத்தியாத்மிகம்; ஆயுதங்களால் ஏற்படுபவை ஆதிபௌதிகம்; இடி, மின்னல், மழை போன்ற இயற்கையின் செயல்களால் ஏற்படுபவை ஆதிதை விகம் எனப்படும். இத்துன்பங்களை உணர்ந்த அறிவாளி அவற்றால் ஏற்படும் துன்பங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வான்.

யோகங்கள்

பற்றற்று, பகவானுடைய தியானத்திலேயே சிந்தனையை நிறுத்தி, ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் ஐக்கியப்படுத்துவதே யோகம். அது இயமம், நியமம், அகிம்சை, உண்மை பேசுதல், பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்; அகத்தூய்மை, மது அருந்தாமை, பற்றற்றிருத்தல், புலன் அடக்கம், பிராணாயாமம், தியானம், தாரணை சமாதி எனப் பலவகையாகும். ஜீவாத்மா, பரமாத்மா என்ற பேதமின்றி அதனோடு ஐக்கியமாகத் தான் இருக்கும். உடலைத் துறந்து வெளிப்படுகிறது ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாதல் முக்தி எனப்படும்.

நோய்க்கு மருந்து

ஒருவன் நோய்வாய் பட்டிருக்கிறான் என்றால் அவனுடலில் வாதம், பித்தம், கபம் அளவில் மாறுபட்டிருக்கிறது என்று அறிய வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்துடன் கலந்து உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகிறது. தேவையற்ற பொருள்கள் மலம், மூத்திரம், வியர்வை என்ற வடிவில் கழிவுப்பொருள்களாக வெளியேறுகின்றன. பிராமணனுக்குத் தானம் கொடுத்து, அறுசுவை உண்டி அளித்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து ஆராதிப்பவன் நோய்களிலிருந்து விடுபடுவான். நோயிலிருந்து விடுபட்டவன், ஜன்ம நக்ஷத்திரத்தன்று, மந்திரபூர்வமாக அபிஷேகம் செய்து பகவானை ஆராதிக்க வேண்டும். விஷ்ணு ஸ்தோத்திரம் என்ற துதியை உச்சரித்துக் கொண்டிருந்தால் அனைத்து மனோ வியாதியும் நீங்கிவிடும். நல்லநாள் பார்த்து மருந்து கொடுக்க வேண்டும். ந சோமோ புத வைத்ய திங்கள், புதன் கிழமைகளில் மருந்து உண்ணவோ, வைத்தியம் தொடங்குவதோ கூடாது.

பகவானைப் பிரார்த்தித்து, மற்ற தேவதைகளையும் மனதில் எண்ணி கொடுக்கப்படும் மருந்து மகரிஷிகளால் தயாரிக்கப்பட்ட உயர் மருந்தாகவும், தேவர்களாலும் உத்தமமான கர்ப்பங்களாலும் அருந்தப்பட்ட அமிர்தமாகட்டும் என்ற பிரார்த்தனையுடன் மருந்தை உட்கொள்ள வேண்டும். கபம் குளிர்காலத்தில் அதிகமாகி, வசந்தகாலத்தில் உச்சநிலை அடைந்து, கோடை காலத்தில் படிப்படியாகக் குறையும். வாதம் கோடையில் அதிகமாகி, குளிர் காலத்தில் இரவு நேரத்தில் கடுமை அதிகமாகி பனிக்காலத்தில் குறைந்து விடும். பித்தம் மழைக்காலத்தில் அதிகமாகி, பனிக்காலத்தில் உச்சமடைந்து, குளிர்காலத்தில் குறைந்து விடும். வயிற்றில் ஆகாரம் மூன்றில் இரண்டு பங்கே இருக்க வேண்டும். மீதி ஒரு பகுதியில் காற்று நிறைந்திருக்க வேண்டும். அதுவே ஜீரணத்துக்கு நல்ல வழியாகும்.

பாம்பு கடி, விஷ முறிவு

ஆதியில் பகவான் எட்டு சர்ப்பங்களை உண்டாக்கினார். அவை சேஷன், வாசுகி, தக்ஷகன், கற்கடகன், அவ்யன், மகரம், புஜன், சங்கபாலன், குளிகன் என்பவை. இவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் உண்டாகிப் பெருகின. பெண் பாம்புகள் மாரிக்காலத்தில் கருவுற்று நான்கு மாதங்களில் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடுகின்றன. சில முட்டைகளை தாயே சாப்பிட்டு விடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் குட்டிப்பாம்பு ஏழாம் நாள் கண் திறந்து, பன்னிரண்டாவது நாள் முழுவளர்ச்சி பெற்று, பதின்மூன்றாம் நாளிலிருந்து தனியே வெளியேறுகின்றது. அது சூரியனைப் பார்த்ததும் இதற்கு மேலே இரண்டும், கீழே இரண்டுமாக நான்கு பற்கள் முளைத்துவிடுகின்றன. அந்தப் பற்கள் கராளி, மகரி, கலராத்திரி, யமதூக்கை எனப்படுகின்றன.

இரவில் பாம்பு கடித்தால் வீக்கம், காயத்தில் எரிச்சல், வலி, தொண்டை அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். பொதுவாக, எந்த வகையான பாம்பு கடித்தாலும் மரணம் நிச்சயம் என்பர். ஏனெனில், விஷம் முன் நெற்றியை அடைந்து, கண்களைப் பாதித்து முகத்தில் பரவி நரம்புகளைத் தாக்கி உயிர் வாழ உதவும் முக்கிய பகுதிகளைப் பற்ற மரணம் ஏற்படுகிறது. பாம்பால் கடிபட்ட ஒருவன் நெய்யில் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். அது பெரும் அளவில் விஷத்தை முறித்து விடும். நீலகண்டனைப் போற்றும் மந்திரம், கருமந்திரம் மற்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்ட மந்திரங்களை முறையாக உச்சரித்து விஷத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இறக்க முயற்சி செய்ய வேண்டும். தற்காலத்தில் டாக்டரை அணுகி விஷமுறிவு மருந்தை உட்கொள்ளுகின்றனர். அதனால் உயிர் காக்கப்படுகிறது.

39. கோ மாதா, கோ சாலை

கோமாதா, பசு, ஆ என்றெல்லாம் கூறப்படும் பசு மிகவும் புனிதமானது. அதன் மகிமை அளவிடற்கரியது. அவற்றைப் பராமரித்தால் ஆனந்தம் அளிக்கும். கோ சாலை அமைத்துப் பசுக்களைப் பராமரித்தல் மிகவும் சிறந்ததாகும். பசுஞ்சாணம், பசு மூத்திரம், பசும்பால், பசுந்தயிர், பசு நெய் ஆகியவை பஞ்சகவ்வியம் எனப்படும். இவை உடல் தூய்மைக்காக கொடுக்கப்படுகின்றன. பசுவைத் தொடுவது புனிதம்; அது உள்ள இடம் புனிதமாகும்; அதன் மூச்சுக்காற்று பட்ட இடத்தில் நோய் அண்டாது. பசுவை கோமாதா என்று தெய்வமாக வழிபட வேண்டும். பசு மற்ற பிராணிகளை விடப் புனிதமானது. அது நன்மையும் புனிதமடையச் செய்கிறது. சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் முதல் படி பசு. தினமும் ஒரு கைப்பிடி அளவு புல் பசுவுக்குக் கொடுத்தால் மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிட்டும். துன்பத்திலுள்ள பசுவைக் காப்பாற்றுதல், பசுவைப் போற்றிக் கொண்டாடுதல், கோதானம் ஆகியவை உறவினர்களையும் கரையேறச் செய்யும்.

சண்டாளர்களும் பஞ்சகவ்வியத்தை உட்கொண்டு ஒரு வேளை உபவாசமிருந்தால் பாபங்கள் நசித்துப் போகும். சந்தாபன விரதத்தைக் கடைபிடிக்கையில் பஞ்சகவ்யம் உட்கொள்ளுமாறு தேவதைகள் கூறியுள்ளனர். கிருச்சாதி கிருச்ச விரதத்தை கடைப்பிடிக்கையில் 21 நாட்களுக்கு பசும்பாலை மட்டும் ஆகாரமாக உட்கொள்ள வேண்டும்.

கோவிரதம் : ஒருவன் உடலை கோமயத்தால் தூய்மையாக்கிக் கொண்டு, பசும்பாலை அருந்தி, பசுவைப் பாலித்து வருதல். இதை ஒரு மாதம் செய்தால் பாவங்கள் நீங்கிச் சொர்க்கவாசல் கிடைக்கும். பசுக்களை நோயின்றி தக்க மருந்துகள் அளித்துப் பாதுகாக்க வேண்டும். பஞ்சமி அன்று மகாலக்ஷ்மியை பசுஞ்சாணத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அன்று விஷ்ணுவை மலர்களாலும், நறுமணப் பொருள்களாலும் வழிபட வேண்டும்.

40. மகாவிஷ்ணுவின் திருக்கோலங்கள்

புஷ்கரத்தில் விஷ்ணு புண்டரீகாக்ஷன்; கயாவில் சுதாதரன்; சித்திரகூட பர்வத உச்சியில் ராகவன், பிரபாஸ க்ஷத்திரத்தில் தைதிய சூதனன், ஜயந்தில் ஜயந்தன் என்று வெவ்வேறு திருக்கோலம் கொண்டுள்ளார் திருமால். ஹஸ்தினாபுரத்தில் ஜயந்தன், வர்த்தமானத்தில் வராகர், காஷ்மீரத்தில் சக்கரபாணி, கூர்ஜரத்தில் ஜனார்த்தனன், மதுரையில் கேசவன் முதலிய கோலங்களில் காட்சி அளிக்கிறார். குப்ஜ பிரகத்தில் ரிஷிகேசனாக, கங்கை சங்கமத்தில் ஜடாதரராக, சாலக்கிராமத்தில் மகாயோகராக, கோவர்த்தனகிரியில் ஹரியாக, பிண்டாரகத்தில் சதுர்பாகுவாகக் கோலம் கொண்டு பக்தர்களை மகிழ்விக்கிறார். சங்கத்துவாரத்தில் சங்கி, குருக்ஷத்திரத்தில் வாமனன், யமுனா தீரத்தில் திருவிக்ரமர், சோணை ஆற்றங்கரையில் விசுவேச்வரர், கிழக்குக் கடற்கரையில் கபிலராக கோலம் கொண்டுள்ளார். சமுத்திர தீரத்தில் விஷ்ணு, கிஷ்கிந்தையில் வனமாலர், ரைவதத்தில் தேவர், விரோஜத்தில் நிபுஞ்ஜயர், விசாக பூபத்தில் அஜிதராக அவர் கொண்டாடப்படுகிறார்.

நேபாளத்தில் லோகபாவனர், துவாரகையில் கிருஷ்ணர், மந்தாரத்தில் மதுசூதனர், லோகாகுலத்தில் நிபுஹரர், புருஷவடத்தில் புருஷர், விமலையில் ஜகத்பிரபு, சைந்த வாரண்யத்தில் அனந்தர், தண்டகாரணியத்தில் சாரங்கதாரி, உத்பல பரிதகாலத்தில் கவுரி, நர்மதா, தீர்த்தத்தில் ஸ்ரீ யப்பதி, மாதவாரண்யத்தில் வைகுந்தர், கங்கைக் கரையில் விஷ்ணு, ஒரிசாவில் புருஷாத்தமர் என்றும், மேலும் 108 திவ்யக்ஷத்திரங்களில் இருந்தான், கிடந்தான், நின்றான் என பல கோலங்களிலும் காட்சி தருகிறான்.

41. ருத்திரபாக்ஷ வகைகள்

சிவமந்திர ஜபத்தின்போது ருத்திராக்ஷ மாலையை அணிந்திருத்தல் அவசியம். அவை பலவகை:
அவற்றின் ஒரு முகம், மூன்று முகம், ஐந்து முகம் இருப்பவை உத்தமமானவை. இரண்டு, நான்கு, ஆறு முகங்கள் உள்ளவை, முட்கள் உள்ளவை, விரிசல் உள்ளவை புனித மற்றவை. ஆனால், நான்கு முக ருத்திராக்ஷத்தைக் கையில் அணியலாம். தலையில் முடியுடன் சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம். பயன்படும் ருத்திராக்ஷங்கள் நான்கு பிரிவில் அடங்கும்.

1. கோசரங்கள்-இவற்றால் லக்ஷம் முறை ஜபித்தால் வெற்றி நிச்சயம்.

2. பிராஜாபத்தியம், மகியாலம், சுலோதம், இரந்திகம் ஆகியவை சிவம் என்னும் பிரிவில் அடங்கும்.

3. குடிலம், வேதாளம், பத்மஹம்சம் போன்றவை சிகம் பிரிவைச் சாரும்.4. குட்டிகாம், சரதம், குடிகம், தண்டினம் சவிதிரம் பிரிவு ஆகும்.

மேலும் திருதராஷ்டிரம், வாகம், காகம், கோபாலம் ஆகியவை ஜோதி வகை ருத்திராக்ஷங்கள் எனப்படும்.

(குறிப்பு : பிரளயம், பரதமுனிவர், நசிகேதன், சூரியவம்ச, சந்திரவம்ச அரசர்கள், புராணங்கள், புராண பலன்கள் பற்றிய விவரங்கள் விஷ்ணு புராணம், பாகவத புராணம் மற்றும் பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.)

அக்னி புராணம் முற்றிற்று.


Overview of the Agni Purana

1. Structure and Composition:

- The Agni Purana is traditionally organized into 383 chapters, containing around 15,000 to 16,000 verses. The text is presented as a discourse between the god Agni and the sage Vashistha, where Agni imparts wisdom on various subjects.

2. Key Themes and Content:

- Mythology and Legends: The Purana narrates various myths and legends, including stories of gods, goddesses, and heroes. It includes descriptions of the creation of the universe, the avatars of Vishnu, and the deeds of deities like Shiva, Durga, and others.

- Rituals and Worship: The Agni Purana provides detailed instructions on performing rituals, sacrifices (Yajnas), and worship practices. It emphasizes the importance of fire rituals (Agnihotra) and includes mantras, hymns, and procedures for various religious ceremonies.

- Law and Dharma: The text outlines principles of Dharma (righteousness) and provides guidelines on ethical conduct, law, and social responsibilities. It includes sections on the duties of kings, the administration of justice, and the roles of different social classes (Varnas).

- Medicine and Ayurveda: The Agni Purana contains valuable information on Ayurveda, the traditional Indian system of medicine. It discusses topics such as the diagnosis and treatment of diseases, medicinal plants, dietary recommendations, and the importance of maintaining health and balance.

- Arts and Sciences: The Purana covers a wide range of arts and sciences, including astrology, astronomy, architecture, grammar, metrics, and poetics. It provides insights into the construction of temples, the principles of sculpture, and the composition of literary works.

- Spiritual Practices and Yoga: The text includes teachings on spiritual practices, including yoga, meditation, and the path to liberation (Moksha). It discusses the importance of self-discipline, devotion (Bhakti), and the cultivation of knowledge (Jnana).

3. Significance of Agni:

- Agni, as the god of fire, is a central figure in Vedic rituals and is considered a mediator between humans and the gods. The Agni Purana reflects this significance by focusing on fire rituals and their role in spiritual and worldly life.

4. Ethical and Moral Teachings:

- The Purana emphasizes the importance of leading a righteous life, adhering to the principles of Dharma, and performing one's duties. It highlights virtues such as honesty, compassion, humility, and devotion.

5. Cultural and Historical Context:

- The Agni Purana offers a rich source of information on the cultural and religious practices of ancient India. It provides insights into the societal norms, values, and knowledge systems of the time, reflecting the integration of Vedic traditions with broader Hindu practices.

6. Influence and Legacy:

- The teachings and content of the Agni Purana have influenced various aspects of Hindu life, including religious rituals, social conduct, and the arts. The text remains a significant reference for scholars, practitioners, and those interested in the diverse traditions of Hinduism.



Share



Was this helpful?